சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஏனெனில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி பேட்டிங் செய்யும் போது எதிர் அணியின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டும். போட்டி தொடங்கும் போது வேகப்பந்து வீச்சாளர்கள் புது பந்தை வீசுவார்கள். அந்த புது பந்து அதிகமாக ஸ்விங் ஆகும். பந்து அதிகமாக ஸ்விங் ஆகும் போது நிலைத்து நின்று விளையாடுவது சற்று கடினமான ஒன்றுதான். அதுவும் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடுவது என்பது சற்று கடினமான விஷயம் தான். அவ்வாறு அதிரடியாக விளையாடும் தொடக்க ஆட்டக்காரர்களின் பட்டியலைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
#3) ரோகித் சர்மா
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் துணை கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா. ரோகித் சர்மா என்றாலே அவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அவரது அதிரடி ஆட்டம் தான். இவர் ஒருநாள் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். ஒரு நாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் 264 ரன்களை அடித்து, யாருமே முறியடிக்க முடியாத சாதனையை தன்வசம் வைத்துள்ளார் ரோகித். அதுமட்டுமின்றி 3 முறை இரட்டை சதங்களை விளாசி உலக சாதனையை படைத்துள்ளார்.
அது மட்டுமின்றி ஒருநாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் ஒரே இன்னிங்சில் 16 சிக்சர்கள் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஒருநாள் போட்டியில் சிறந்த வீரர்களின் ரேங்கிங் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணியில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்படும் நேரங்களில், ரோகித் சர்மா பகுதிநேர கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ரோகித் சர்மா இருப்பதில் வியப்பில்லை.
#2) கிறிஸ் கெயில்
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் கெயில். மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடும் போது அணியில் கிறிஸ் கெயில் இருந்தால் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது. ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். அந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான அப்ரிடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில் வெறும் 30 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் குறிப்பாக ஐபிஎல் தொடர் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அவ்வாறு சொல்வதற்கு முக்கிய காரணம் பெங்களூர் அணிக்காக விளையாடும் கிறிஸ் கெயில் தான். போட்டி தொடங்கிய 2 ஓவர்களில் இருந்தே அதிக சிச்சர்களை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். கடந்த ஒரு வருடமாக சரியான ஃபார்ம் இன்றி தவித்து வருகிறார். எனவே தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணியில் தெரிவு செய்யப்படாமல் இருந்து வருகிறார். மீண்டும் தனது அதிரடியை காண்பித்து அணிக்கு திரும்புவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனவே அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களின் பட்டியலில் கிறிஸ் கெயில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
#1) சேவாக்
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நம் அனைவருக்கும் தெரிந்த நமது இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான சேவாக். சேவாக் என்றாலே தனி ரசிகர் பட்டாளமே அவருக்கு உள்ளது. அதற்கு முக்கிய காரணம் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடும் இவரின் திறமைக்கு தான். அதுமட்டுமின்றி முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்கும் வல்லமை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடி குறைந்த பந்துகளில் முச்சதங்களை விளாசி சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இரண்டாவதாக இரட்டை சதத்தை விளாசிய வீரர் இவர்தான். முதன் முதலில் இரட்டை சதம் விளாசிய வீரர் சச்சின் ஆவார். ஒரு காலகட்டத்தில் சச்சினும் சேவாக்கும் பேட்டிங் செய்ய தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கும் பொழுது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. பல ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை கொடுத்து வந்ததற்கு முக்கியக் காரணம் சேவாக்கும் சச்சினும் தான்.
அதுமட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே இன்னிங்சில் அதிக பவுண்டரிகளை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையை முதன்முதலில் படைத்தவர் இவர் தான். ஆனால் அந்த சாதனையை தற்போது ரோகித் சர்மா முறியடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சேவாக் ஓய்வு பெற்றுவிட்டாலும் அவரது ரசிகர்களின் மனதில் இன்றுவரை நிலைத்து இருக்கிறார். எனவே இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் சேவாக்.