ஸ்போர்ட்ஸ்கீடா கிரிக்கெட் விருதுகள் 2018 : ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கிய ஆல் ரவுண்டர்கள்

ஷகிப் அல் ஹசன்
ஷகிப் அல் ஹசன்

ஒரு அணியில் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஒரு சிலர் மட்டுமே இருப்பார்கள். ஒரு அணி வெற்றி பெறுவதற்கு ஆல் ரவுண்டர்களின் பங்கு முக்கியமானது. உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றதற்கு முக்கிய காரணம் உலகின் சிறந்த ஆல் ரவுண்டர்களான ரஷித் கான் மற்றும் முஹம்மது நபி ஆகியோர் தான். தற்போது சிறப்பான ஆல் ரவுண்டர்களை கொண்ட இங்கிலாந்து அணியானது ஒருநாள் போட்டிகளில் முதலிடத்தில் உள்ளது. திசரா பெரேரா மற்றும் மோயீன் அலி மற்றும் பென் ஸ்டோக்கஸ் போன்ற சிறந்த ஆல் ரவுண்டர்களை விட ஒரு சிலர் இந்த ஆண்டு பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தியுள்ளனர்.

# 3 சிக்கந்தர் ராசா

இந்த ஆண்டு ஜிம்பாப்வேயின் பந்துவீச்சு மற்றும் பந்து வீச்சில் ரசா வென்றார்

இந்த ஆண்டு ஜிம்பாப்வே அணியானது மோசமான நிலையில் விளையாடியுள்ளது. உலக கோப்பை தகுதிச்சுற்று தொடரில் தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. ஆனால் அந்த அணியின் ஆல் ரவுண்டரான சிக்கந்தர் ராசா இந்த ஆண்டு பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் அற்புதமாக விளையாடியுள்ளார். 18 போட்டிகளில் 5 அரை சதம் உட்பட 633 ரன்கள், 39.56 சராசரி, அதிகபட்சமாக 92 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் பந்து வீச்சிலும் 18 போட்டிகளில் 22 விக்கெட்கள், 29.50 சராசரி, 4.77 எகனாமி ரேட், 30 ரன்களுக்கு 3 விக்கெட்கள் எடுத்தது சிறந்த பந்து வீச்சாக உள்ளது. இதுவரை 88 போட்டிகளில் 2477 ரன்கள், 34.40 சராசரி, அதிகபட்சமாக 141 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் 53 விக்கெட்கள், 4.85 எகனாமி ரேட், 31 ரன்களுக்கு 3 விக்கெட்கள் எடுத்தது சிறந்த பந்து வீச்சாக உள்ளது. ஒருநாள் ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளார்.

# 2 ஜேசன் ஹோல்டர்

ஹோல்டர் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் 2018-ம் ஆண்டு அவரது கேப்டன்சி, பேட்டிங், மற்றும் பந்துவீச்சு இருந்தது
ஹோல்டர் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் 2018-ம் ஆண்டு அவரது கேப்டன்சி, பேட்டிங், மற்றும் பந்துவீச்சு இருந்தது

2019-ஆம் ஆண்டு நடை பெரும் உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெற்றதில் அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டரின் பங்கு முக்கியமானது. இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி 18 போட்டிகளில் 8 வெற்றியும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்தது. ஜேசன் ஹோல்டர் 15 போட்டிகளில் 21 விக்கெட்கள், 6-க்கு குறைவான எகனாமி ரேட், 53 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் எடுத்தது சிறந்த பந்து வீச்சாக உள்ளது. பேட்டிங் பொறுத்த வரை 3 அரை சதம் உட்பட 405 ரன்கள், 33.75 சராசரி மற்றும் அதிகபட்சமாக 99* ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளார். இனி வரவிருக்கும் உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வழி நடத்தி பெரும் சவால்களை சந்திக்கவுள்ளார்.

# 3 ஷகிப் அல் ஹசன்

எல்லா காலத்திலும் மிகப்பெரிய ஒருநாள் ஆல் ரவுண்டராக ஷகிப் இருந்து வருகிறார்
எல்லா காலத்திலும் மிகப்பெரிய ஒருநாள் ஆல் ரவுண்டராக ஷகிப் இருந்து வருகிறார்

வங்க தேச அணியின் ஆல் ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், டி20 என அனைத்து போட்டிகளிலும் சிறந்த ஆல் ரவுண்டராக ஜொலித்து வருகிறார். இந்த ஆண்டு சில மாதங்கள் காயமடைந்தது விளையாடாமல் இருந்தார். ஆனால் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். 13 இன்னிங்க்ஸ்களில் 5 அரை சதம் உட்பட 497 ரன்கள், 38.23 சராசரி, அதிகபட்சமாக 97 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சில போட்டிகளில் தனி ஒருவனாய் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றுள்ளார். பந்து வீச்சில் 15 போட்டிகளில் 21 விக்கெட்கள், 4.48 எகனாமி ரேட், 42 ரன்களுக்கு 4 விக்கெட்கள் எடுத்தது சிறந்த பந்து வீச்சாக உள்ளது. ஷகிப் அல் ஹசனின் ஆல் ரவுண்ட் திறமையால் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இரு தொடர்களிலும் வெற்றி பெற்றது. இதுவரை 195 போட்டிகளில் 5577 ரன்கள், 35.08 சராசரி, அதிகபட்சமாக 134 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 247 விக்கெட்கள், 4.44 எகானமி ரேட், 47 ரன்களுக்கு 5 விக்கெட்கள் விழ்த்தியது சிறந்த பந்து வீச்சாக உள்ளது. ஒருநாள் ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now