2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்க சில நாட்களே மீதம் உள்ளது. மார்ச் மாதம் 23 ஆம் நாள் சென்னையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளனன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலமுறை இறுதிப்போட்டி வரை சென்றும் கோப்பை வெல்ல முடியாத அணியாக திகழ்ந்து வருகின்றது
இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RCB அணியில் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் வீரர்களை பற்றி பார்க்கலாம்.
4. சிறந்த வேகப்பந்துவீச்சாளர் - நாதன் குல்டர்நைல்
இந்த வருடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சவுதி, உமேஷ், சிராஜ் மற்றும் சைனி போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் நாதன் குல்டர்நைல் சிறந்த வேக பந்துவீச்சாளராக திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை.
ஆஸ்திரேலியா அணிக்காக பங்கேற்று வரும் இவர், பந்துவீச்சு மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் எதிரணிக்கு தொல்லை தரலாம். கடந்த வருடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இவரை 2.2 கோடிக்கு பெற்றது. கடந்த வருடம் காயம் காரணமாக பெங்களூரு அணிக்காக பங்கேற்காத இவர் இம்முறை பெங்களூர் அணிக்காக விளையாட உள்ளார்.
இதுவரை 26 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற இவர் 36 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார், சராசரி 19.97ஆகும், எக்கானமி 7.66. சமீபத்தில் நடைபெற்ற பிபிஎல் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி உள்ளார். பிபிஎல்-லில் 13 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 14 விக்கெட்களைச் சாய்த்துள்ளார் சராசரி 27.14 ஆகும், எக்கானமி 7.45 ஆகும்.
அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர் இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. சிறந்த சுழற்பந்துவீச்சாளர் - சஹால்
இந்திய அணிக்காக விளையாடி வரும் சஹால் ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், ஐபிஎல் காரணமாகவே இவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அனைத்து தொடரிலும் சிறப்பாக செயல்படக்கூடிய கடந்தாண்டு சற்று மோசமாகவே செயல்பட்டுள்ளார், 14 போட்டிகளில் பங்கேற்ற இவர் 12 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. சராசரி 30.25 ஆகும்.
இதுவரை 69 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 82 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இவரது சராசரி 23.52 ஆகும். எக்கானமி 7.77
குல்தீப் யாதவ் உடன் சேர்ந்து இந்தியா அணிக்காக அசத்தி வரும் இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல உதவியாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
2. சிறந்த பேட்ஸ்மேன் - விராட் கோலி
அனைத்து சீசன்களை போல, இந்த வருடமும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறந்த T20 பேட்ஸ்மேன்களை கொண்டு களமிறங்கவுள்ளது. இந்த அணியில் ஏபி டிவில்லியர்ஸ், ஹெட்மையர், ஸ்டாய்னிஸ் போன்ற வீரர்கள் இருந்தாலும் விராட் கோலியே சிறந்த பேட்ஸ்மேன் ஆவார்.
இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மட்டுமில்லாமல் உலகளிவில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார்.
இதுவரை 155 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 4948 ரன்களை குவித்துள்ளார், இவரது சராசரி 38.36 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 130.76 ஆகும். ஐபிஎல் வரலாற்றில் இவர் 34 அரைசதம் மற்றும் 4 சதங்களை பதிவு செய்துள்ளார். 4 சதங்களும் 2016 ஆம் ஆண்டு விளாசினார்.
2019 ஆம் ஆண்டு ஆர்சிபி அணி கோப்பை வெல்ல கோலி முக்கிய பங்கு வகிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
1. சிறந்த ஆல்ரவுண்டர் - மார்கஸ் ஸ்டாயினிஸ்
இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சில ஆல்ரவுண்டர்கள் இருந்தாலும் மார்கஸ் ஸ்டாயினிஸ் சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வருவார் என்பதில் சந்தேகமில்லை.
சமீபத்தில் நடைபெற்ற பிபிஎல் தொடரில் 13 போட்டிகளில் பங்கேற்ற இவர் 533 ரன்களை குவித்தார், இவற்றில் 4 அரைசதங்களுடன் சராசரி 53.30 ஆக ரன்களை குவித்தார். ஸ்ட்ரைக் ரேட் 130.64. இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார் ஸ்டாய்னிஸ்.
பந்துவீச்சிலும் அசத்திய இவர் 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல பந்துவீச்சு மட்டும் பேட்டிங் போன்ற இரண்டிலும் ஸ்டாயினிஸ் முக்கிய பங்கு வகிப்பார்.