சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்த வரை அதில் விளையாடும் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் பார்மில் இருந்தால் சிறப்பாக விளையாடுவார்கள். இல்லையெனில் தொடர்ந்து சொதப்ப ஆரம்பித்துவிடுவார்கள். அனைத்து கிரிக்கெட் வீரர்களும், அனைத்து நேரங்களிலும் சிறப்பாக விளையாட முடியும் என்று உறுதியாக சொல்ல முடியாது.
வர்களது பார்ம் என்பது அவர்கள் விளையாடும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தான் அமைகிறது. இவ்வாறு சொதப்பும் சில வீரர்கள், பார்முக்கு வந்தவுடன் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர். இவ்வாறு இந்த 2019 ஆம் ஆண்டினை சிறப்பாக தொடங்கிய வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) தோனி
வருகின்ற ஜூன் மாதம் உலக கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, விளையாடுவாரா என்று அனைவரிடமும் சந்தேகம் இருந்தது. அவர் மேல் சந்தேகம் வருவதற்கு காரணம் இவர் கடந்த 2018 ஆம் வருடம் விளையாடிய போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. பலரது விமர்சனங்களுக்கு ஆளான இவர், இந்த 2019 ஆம் வருடத்தின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரைச்சதங்களை விளாசி இந்திய அணி வெற்றி பெற உதவினார். இதன் மூலம் தன்னை விமர்சனம் செய்பவர்களுக்கு தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார்.
#2) ராஸ் டெய்லர்
இவர் நியூசிலாந்து அணியின் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவர். இவர் கடந்த 2 வருடங்களாக நியூசிலாந்து அணியில் தொடர்ந்து தெரிவு செய்யப்படாமல் இருந்தார். தற்போது தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் மீண்டும் நியூசிலாந்து அணியில் இணைந்துள்ளார். இவர் இந்த 2019 ஆம் வருடத்தில், இது வரை மொத்தம் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் இவர் 458 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் இந்த ஆண்டில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதுவும் குறிப்பாக இந்த ஆண்டு நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3) ரோகித் சர்மா
தற்போது உள்ள இந்திய அணி, தலை சிறந்த அணியாக விளங்குவதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா. ரோகித் சர்மாவும், விராட் கோலியும் தான் இந்திய அணியின் தூண்களாக இருந்து வருகின்றனர். தற்போதைய சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரராக திகழ்கிறார் ரோகித் சர்மா. இவர் இந்த 2019 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 354 ரன்கள் குவித்துள்ளார்.
#4) சஹால்
இவர் இந்திய அணியின் மிக முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர். இவரும் ஒரு சில வருடங்களாக இந்திய அணியில் தொடர்ந்து தேர்வு செய்யப்படாமல் இருந்தார். அதன்பின்பு கலந்த 2018 ஆம் வருடத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதன்மூலம் இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திய சஹால், தற்போது உலக கோப்பை தொடரில் விளையாடுவதற்காக வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த ஆண்டு இவர், மொத்தம் 6 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.