கிரிக்கெட் வரலாற்றில் சில மறக்க முடியாத தருணங்களை அளித்த 2018- ஆம் ஆண்டு ஒருவழியாக முடிவுக்கு வருகிறது. இந்த வருடத்தில் பல வீரர்கள் அட்டகாசமான கிரிக்கெட்டை நமக்கு அளித்தனர். அதில் சிலர் உயரங்களையும் அடைந்தனர்.
அதுபோல, வெளிநாட்டு மண்ணில் பல அணிகள் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி வாகை சூடியதை நம்மால் கண்கூடாய் பார்க்கவும் முடிந்தது. இருப்பினும், குறுகிய கால கிரிக்கெட் போட்டிகளில் யாரும் எதிர்பார்த்திராத வகையில் அற்புதமான பல ஆட்டங்கள் இந்த ஆண்டில் நடைபெற்றது. இவ்வகையான ஆட்டங்கள் பொழுதுபோக்கின் ஒரு அங்கமாக மட்டும் இல்லாமல் போட்டியின் இறுதிக் கட்டங்களில் ரசிகர்களை இருக்கையின் நுனிவரை கொண்டு சென்றும் உள்ளது. அதில் சில அணிகள் உள்நாட்டு நடைபெற்ற போட்டிகளில் வெளிநாட்டு மண்ணிலும் சரி இரண்டிலுமே வெற்றியை கண்டுள்ளது.
தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது ஆதிக்கத்தை செலுத்த தவறவில்லை. பந்து டேம்பரிங் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி பல சிக்கல்களை சந்தித்தது. கலவையான முடிவுகளை வெற்றி தோல்வி முடிவுகளை படைத்தது நியூசிலாந்து அணி. இலங்கை அணி மிகுந்த ஏமாற்றங்களுக்கு ஆளாகியது. மீண்டும் ஒருமுறை தங்களது திறமையை நிரூபித்தது ஆஃப்கானிஸ்தான்.
அவ்வாறு, இந்த ஆண்டின் டி20 போட்டிகளுக்கான ஸ்போர்ட்ஸ்கீடா கிரிக்கெட் விருதுகளை அறிவித்துள்ளது. அவற்றை கீழே காணலாம்.
#3.ஆஸ்திரேலியா:
கடந்த மார்ச் மாதத்தில் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய விவகாரம் தான் பந்து டேம்பரிங். இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது ஆஸ்திரேலிய அணி. இதனால், கேப்டன் சுமித், துணைக்கேப்டன் வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோர் தகுந்த தண்டனைக்கு உள்ளாகினர்.
இருப்பினும், டி20 போட்டிகளில் இந்த வருடத்தின் மூன்றாவது சிறந்த அணியாக உருவெடுக்க தவறவில்லை. இந்த ஆண்டில் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி, பத்தில் வெற்றிக்கண்டனர். இதில் குறிப்பிடும் வகையில், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டிரான்ஸ்-டாஸ்மேன் தொடர்களை கைப்பற்றியது.
ஆனால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆறு ஆட்டங்களில் ஐந்து தோல்விகளை சந்தித்தது. ஜிம்பாப்வே - பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையயான முத்தரப்பு தொடரையும் கைப்பற்ற தவறியது. இறுதியாக, ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் தொடர் முடிவடைந்தது சற்று ஆறுதல் அளித்தது.
#2.இந்தியா:
இந்திய அணிக்கு டி20 போட்டிகளில் மிகச்சிறந்த ஆண்டாக இந்த ஆண்டு அமைந்துள்ளது. ஏனெனில், எந்தவொரு டி20 தொடரையும் இந்திய அணி இழக்கவில்லை. இந்த வருடத்தில் மட்டும் ஐந்து தொடர்களை வென்று சாதித்துள்ளது. இறுதியாக நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் மட்டும் சமனில் முடிவடைந்தது. குறிப்பிடும் வகையில் கூறினால், வங்கதேச அணிக்கு எதிரான நிதாஷ் டிராபியின் இறுதியாட்டத்தில் தொடரை கைப்பற்றியதே ஆகும். மேலும், இந்தாண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. அதே ஆதிக்கத்தை இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களிலும் செலுத்தியது இந்திய அணி.
இந்த வருடத்தில் மொத்தம் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 14 போட்டிகளில் வென்றுள்ளது. ரோகித் ஷர்மாவின் தலைமையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 3- 0 என்ற கணக்கில் தொடரை வென்று சர்வதேச டி20 தரவரிசையில் இரண்டாம் இடத்தை பெற்றது.
#1. பாகிஸ்தான்:
குறுகிய கால கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த ஒரு சாதனையை இந்த ஆண்டில் படைத்துள்ளது பாகிஸ்தான். தங்களது சொந்த மண்ணில் அதிகப்படியான தொடர்கள் நடைபெறாவிட்டாலும் பல சிறந்த வீரர்கள் அந்த அணியில் உருவாகி வருகின்றனர். இதுவே, அவர்களது தொடர் வெற்றிகளுக்கு காரணமாகவும் உள்ளது. மேலும், தற்போதைய சர்வதேச டி20 தரவரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
சர்பராஸ் கான் தலைமையில், இந்த வருடத்தில் 19 ஆட்டங்களில் விளையாடி 17-இல் வெற்றியை கண்டுள்ளது பாகிஸ்தான் அணி.முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி போட்டியில் விளையாடி தொடரை கைப்பற்றியதே மிகச்சிறந்த ஆட்டமாக அமைந்தது. மேலும், ஆஸ்திரேலியா தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி தொடர் சாதனைகளை படைத்துள்ளது.
மேற்குறிப்பிட்ட காரணங்களால் ஸ்போர்ட்ஸ்கீடாவின் விருதுகளில் இந்தாண்டின் சிறந்த டி20 அணிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டது.