கிரிக்கெட்டின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் யார் தெரியுமா??

Gilchrist And Dhoni
Gilchrist And Dhoni

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் பணி என்பது சாதாரண விஷயமல்ல. உடலில் அதிக அளவு எனர்ஜி இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு நாள் போட்டியாக இருந்தாலும், டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் பந்துவீச்சாளர்கள் வீசும் அனைத்து பந்துகளையும் விக்கெட் கீப்பர் தான் பிடிக்க வேண்டும்.

பேட்ஸ்மேன் எதிர்பாராத விதமாக கோட்டை விட்டு சிறிது வெளியே சென்றாலும் விக்கெட் கீப்பர் கவனத்துடன் ஸ்டம்பிங் செய்ய வேண்டும். மேலும் மைதானத்திற்குள் விளையாடும் கிரிக்கெட் வீரர்களில், அதிக கவனத்துடன் விளையாடக் கூடிய ஒரு வீரர் என்றால் அது விக்கெட் கீப்பர் தான். இவ்வாறு சிறப்பாக விக்கெட் கீப்பர் பணியை செய்து வந்த வீரர்களை பற்றி இங்கு காண்போம்.

#3) மார்க் பவுச்சர்

Mark Bouchar
Mark Bouchar

தென் ஆப்பிரிக்க அணியின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் மார்க் பவுச்சர். இவர் விக்கெட் கீப்பராக இருந்த பொழுது அதிக கேட்சிகளை பிடித்த விக்கெட் கீப்பர் என்று ஒரு சாதனையை படைத்திருந்தார். அதுமட்டுமின்றி சிறப்பாக பேட்டிங் செய்யும் திறமையும் கொண்டவர். இவர் இதுவரை விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 532 கேட்ச்களை பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 403 கேட்ச்களையும், டி-20 போட்டிகளில் 18 கேட்சிகளையும் பிடித்துள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை மொத்தம் 46 முறை ஸ்டம்பிங் செய்துள்ளார்.

#2) கில் கிறிஸ்ட்

Gilchrist Dhoni Dhoni
Gilchrist Dhoni Dhoni

இவர் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த விக்கெட் கீப்பராகவும், சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் இருந்தவர். இவர் ஆஸ்திரேலியா அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக விளையாட கூடிய திறமை படைத்தவர். இவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பிடித்த மொத்த கேட்சிகளின் எண்ணிக்கை 813 ஆகும். இவர் இதுவரை விளையாடிய மொத்த சர்வதேச போட்டிகளில் 92 முறை ஸ்டம்பிங் செய்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர் டி-20 போட்டிகளில் ஒருமுறைகூட ஸ்டம்பிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#1) தோனி

Dhoni
Dhoni

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த விக்கெட் கீப்பர் என்றால் நமக்கு முதலில் ஞாபகத்தில் வருபவர் தோனி தான். இவர் பேட்டிங்கில் சாதனை புரிந்ததை விட, விக்கெட் கீப்பர் பணியில் தான் அதிக சாதனைகளை படைத்து வருகிறார். இவர் இந்திய அணிக்கு பல வருடங்களாக கேப்டனாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு அணிக்கு அதிக முறை கேப்டனாக இருந்தவர்களின் பட்டியலில் தோனி முதலிடத்தில் உள்ளார். போட்டியின் இக்கட்டான சூழ்நிலையிலும், அந்த சூழ்நிலையை பொறுமையாக கையாளக் கூடிய திறமை படைத்தவர். இவர் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 623 கேட்ச்களை பிடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இதுவரை மொத்தம் 191 முறை ஸ்டம்பிங் செய்துள்ளார். அதுவும் குறிப்பாக ஒருநாள் போட்டியில் 191 முறை ஸ்டம்பிங் செய்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர்களின் பட்டியலில் தோனி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் தோனியை தவிர மற்ற இரண்டு வீரர்களும், ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.