இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண், வெளிநாட்டு மண்ணில் இந்திய பந்து வீச்சாளர்களின் மிக மேம்பட்ட நிலையைப் பற்றி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். "நமது பந்து வீச்சாளர்கள், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் எடுத்த 60 விக்கெட்டுகளைத் தவிர்த்து, இங்கிலாந்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 85 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இருப்பினும், இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவின் முதல் டெஸ்ட் போட்டியில் இறுதியில் ஒரு அசாத்திய வெற்றியைத் தகர்த்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு எச்சரிக்கையாக சவால் ஒன்றை விடுத்துள்ளனர்." என்று கூறியுள்ளார்.
தற்போதைய பந்து வீச்சாளர்களுக்கிடையில் ஆட்டத்தின் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான காரணங்களில் ஒன்றாக அருண் "பந்து வீச்சாளர்களின் பார்ம் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது, இது நாங்கள் பந்து வீச்சாளர்களுடன் உரையாடும்போது சொல்லும் ஒரு விஷ்யம்தான், அவர்கள் உண்மையில் கடினமாக உழைத்துள்ளனர்" என்று கூறினார்.
"ஒவ்வொரு தடவையும் பவுலர்கள் வலை பயிற்சிக்கு வருகிறார்கள், பின்பு, தங்கள் திட்டங்களை தீட்டி , அதனை ஒவ்வொரு முறையும் எப்படி செயல்படுத்துவது என்று வித்தியாசமாக சிந்திக்கின்றனர். அது, அவர்களை இன்னும் சீரான பார்மில் இருக்க அனுமதிக்கிறது. நான் அதில் பந்து வீச்சாளர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறேன். இது எனது வேலையை சுலபமாக்குகிறது" என்று அருண் பவுலர்கள் பற்றி பெருமையாக கூறினார்
"தென் ஆப்பிரிக்காவிலும், இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் அவர்கள் செய்ததைப் வைத்து பார்க்கும் பொழுது, இந்தியாவின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்கள் குழு இதுவாகும், வேக பந்துவீச்சாளர்கள் ஒரு பெரிய மலையை கட்டி இழுப்பது போன்ற வேலையை செய்கிறார்கள் என்பது திகைப்புடைய ஒன்று. அவர்கள் ஒரு குழுவாக செயல்படுகின்றனர், அது மிகவும் ஊக்கமளிக்க கூடிய ஒன்றாகும்."
ஆஸ்திரேலிய வெற்றிக்கு ஆர்.அஸ்வினும் தனது பங்கிற்கு அருண் பாராட்டைப் பெற்றார். "முதல் இன்னிங்ஸில் அவர் மூன்று முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். அவரது 34 ஓவர்களில், அவர் 57 ரன்களை கொடுத்தார். பின்னர் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 52.5 ஓவர்கள் வரை தொடர்ந்து பந்து வீசினார். இது அவரின் கடந்த கால அனுபவத்தில் இருந்து ஏற்பட்ட ஒரு மாற்றமாகும். மேலும் மீதம் உள்ள போட்டிளிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் ".என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"அஷ்வின் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். இந்தியாவில் பெரும்பாலான உரையாடல்கள் ஒரு ஸ்பின்னரை பற்றியே இருக்கும். ஆனால், அவற்றை புறம் தள்ளி அவரால் செய்ய முடிந்த காரியங்கள் என்னவென்று அவர் உணர்கிறார், அதைச் செய்வதற்கு பயிற்சியாளர் தேவையான நுணுக்கங்களை தருகிறார்".
பெர்த் டெஸ்டை பற்றி அதிகம் பேசப்படுவது அந்த ஆடுகளத்தின் தன்மை பற்றித்தான். ஜஸ்டின் லாங்கர், ஆஸ்திரேலியா பயிற்சியாளர், "இந்த ஆடுகளத்தில் கூடுதல் வேகம் மற்றும் பவுன்ஸ் எங்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கும்". என்று கூறியுள்ளார். ஆனால் உண்மையில் எங்களது பந்துவீச்சாளர்களுக்கு தான் அது உதவிகரமாக இருக்கும். ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பலத்தை சிதைக்க நம்மவர்கள் முழுவீச்சில் செயல்படுவர் என்று அருண் குறிப்பிட்டுள்ளார்..
"மேலும், அணியில் உள்ள வீரர்கள் அவர்களது உடல்தகுதியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமான ஒன்றாகும். அது அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்". இவ்வாறு, அந்த பேட்டியில் தங்களது பந்துவீச்சாளர்களின் நிலையை பற்றி கூறியுள்ளார்.