பந்துவீச மிகவும் சீரமப்பட்ட பேட்ஸ்மேனின் பெயரை தெரிவித்த புவனேஸ்வர் குமார்

Bhuvaneshvar Kumar
Bhuvaneshvar Kumar

மே 30 அன்று இங்கிலாந்தில் தொடங்க உள்ள 2019 உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணி இன்று(மே 22) அதிகாலை புறப்பட்டு சென்றது. இந்த உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளில் இந்தியாவும் உள்ளது. சமீப காலங்களில் இங்கிலாந்து ஃபிளாட் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை இந்திய கிரிக்கெட் அணி பௌலர்கள் வீழ்த்தியுள்ளனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் முன்னணியில் திகழும் புவனேஸ்வர் குமார் தான் பந்துவீச கஷ்டப்பட்ட பேட்ஸ்மேனின் பெயரை தெரிவித்துள்ளார்.

புவனேஸ்வர் குமார் இவ்வருட ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 15 போட்டிகளில் பங்கேற்ற இவர் மொத்தமாக 13 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இவரது எகனாமி ரேட் ஐபிஎல் தொடரில் 7.87ஆக உள்ளது. எதிரணியை தனது பௌலிங்கில் கலங்கடிப்பதே இவரது குணமாகும். உலகக் கோப்பையில் இவரது ஆட்டத்திறன் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் அல்லது 3 வேகபந்துவீச்சாளர்களுடன் கூட இந்திய அணி களமிறங்க வாய்ப்புள்ளது. இங்கிலாந்து ஆடுகள தன்மை பந்துவீச்சாளர்களுக்கு அவ்வளவாக சாதகம் அளித்ததது இல்லை.

உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்றும் இந்திய அணியின் பௌலிங் மிகவும் வலிமையாக உள்ளது என்றும் நம்பிக்கையுடன் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார். மேலும் இது இந்திய அணி தனது நுணுக்கங்களை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை பொறுத்தே இந்த முடிவு அமையும் எனவும் கூறியுள்ளார்.

"கிரிக்பஸ்" இனைய தளத்திற்கு புவனேஸ்வர் குமார் கூறியதாவது,

சமீப காலமாக இங்கிலாந்து அணியின் மைதானம் முழுவதும் தட்டையாகவே உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்திய அணியின் பௌலிங் அதற்கு ஏற்றவாறு மேம்பட்டுள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்திலும் சரி இறுதியிலும் சரி எதிரணியை கலங்கடிக்க இந்திய அணியில் வலிமையான பௌலிங் வரிசை உள்ளது. முழு ஆட்டத்திறனையும் உலகக் கோப்பையில் இந்திய அணி எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை பொறுத்தே இந்திய அணியின் வெற்றி உள்ளது.

புவனேஸ்வர் குமார் தற்போது கிரிக்கெட் உலகில் வலம் வரும் அனைத்து வீரர்களுக்கும் சிறப்பாக பந்துவீசி உள்ளார். அத்துடன் சில அதிரடி மன்னர்களையும் தனது பௌலிங்கில் தடுமாறச் செய்துள்ளார். டேவிட் வார்னர், ஆன்ரிவ் ரஸல், கே.எல்.ராகுல், ஜானி பேர்ஸ்டோவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இவ்வருட ஐபிஎல் தொடரில் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது அணிக்கு பெரும் பங்களிப்பை அளித்தனர். இந்த பட்டியலில் உள்ள வீரர்களில் பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னருக்கு மட்டும் புவனேஸ்வர் குமார் பந்துவீசவில்லை. மற்ற அனைவருக்கும் பந்து வீசியுள்ளார். கிரிக்கெட்டில் தற்போது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஆன்ரில் ரஸல் ஆகியோருக்கு தான் பந்து வீச மிகவும் சிரமப்பட்டதாக உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய பௌலர் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பார்க்கும் போது ஆன்ரிவ் ரஸல் சிறப்பான ஆட்டத்தை மேற்கொண்டார். அத்துடன் என்னுடைய சக அணி வீரர் டேவிட் வார்னரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரும் ஆட்டத்தின் போக்கை தங்கள் வசம் மாற்றக்கூடிய திறமை படைத்தவர்கள். இவர்கள் இருவருக்கும் பந்துவீச்சை மேற்கொள்ள மிகுந்த தலைவலியாக இருக்கும்.

Quick Links