மேலும், நேற்றைய போட்டியில் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 11000 ரன்களை கடந்தார். சச்சின் டெண்டுல்கரை விட 54 இன்னிங்சில் முன்னரே விராட் கோலி இத்தகைய சாதனையை படைத்துள்ளார்.
மேலும் விராட் கோலி கூறிய வார்த்தைகள்,
"முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது அருமையாக உள்ளது. ரோஹித் சர்மா தனியாளாக நின்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராகவும் ஆஸ்டிரேலியாவுக்கு எதிராகவும் தனது பேட்டிங் முயற்சியினை வெளிப்படுத்தியுள்ளார். 335 முதல் 350 ரன்களை எட்டுவதற்கு ரோகித் சர்மா போன்ற ஆட்டங்கள் இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாகும். ரோகித் சர்மா உடன் இணைந்து ராகுலும் நல்லதொரு தொடக்கம் பார்ட்னர்ஷிப்பில் அமைத்தார். 75 ரன்களில் தாண்டிவிட்டால் ரோகித் சர்மா எவராலும் தடுக்க முடியாத வீரராக திகழ்கிறார். ஹர்திக் பாண்டியா தமது பொறுப்பினை உணர்ந்து அற்புதமாக விளையாடினார். இதன்மூலம், மிடில் ஆர்டர் பேட்டிங் சற்று வலுவடைந்துள்ளது. இது மாதிரி விளையாடுவது போதிய மகிழ்ச்சி அளிக்கின்றது. மற்ற வீரர்களும் தங்களது திறமையினை பயன்படுத்தி பொறுப்பாக விளையாடினர். இப்படியே தொடர்ந்தால் அற்புதமாக இருக்கும்".
தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் கடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஓய்வில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காயத்தால் வெளியேறிய புவனேஷ்வர் குமார் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிகிறது. எனவே, இத்தகைய இன்னல்களையும் கடந்து இந்திய அணி இனிவரும் போட்டிகளில் தனது ஆதிக்கத்தினை தொடர்ந்து வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
Edited by Fambeat Tamil