ப்ரிஸ்பென் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி

Pravin
Maxwell
Maxwell

பிக் பாஷ் டீ-20 லீக் 8 வது சீசன் ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இந்தியவின் ஐபிஎல் போன்று நடத்தப்படும் புகழ் பெற்ற கிரிக்கெட் தொடர் பிக் பாஷ் டீ-20 லீக் . இதில் தற்போழுது 8 வது சீசனின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது . இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஆஸ்திரேலியாவின் அனைத்து இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். மற்ற நாடு வீரர்களும் பெரும் அளவில் பங்கேற்று வருகின்றனர். இந்த தொடரில் 56 லீக் போட்டிகளை கொண்டது, இதில் 42 வது போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது . இந்த போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ப்ரிஸ்பென் ஹிட் அணிகள் மோதின .

இந்த போட்டியில் டாஸ் வென்ற ப்ரிஸ்பென் ஹிட் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது . இதனை தொடர்ந்து களம் இறங்கிய மெல்போர்ன் அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் ஆன ஸ்டோனிஸ் மற்றும் பென் டங்க் களம் இறங்கினர். இருவரும் முதல் பவர்பிளேக்கு விக்கெட் இழப்பின்றி 42 ரன்களை சேர்த்தனர். 8.1 வது ஓவரில் ஸ்டேனிஸ் 43 ரன்கள் எடுத்து கட்டிங் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் 9.4 ஓவரில் பென் டங்க் 24 ரன்கள் எடுத்து சுவப்சன் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். இந்த ஜோடிக்கு பிறகு களம் இறங்கிய ஹன்ட்சோம்ப் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் வந்த வேகத்தில் பெவுலியன் திரும்பினர். மேக்ஸ்வெல் 3 ரன்னில் பிரின்டன் டக்கெட் பந்தில் அவுட் ஆகினார் . ஹன்ட்சோம்ப் 6 ரன்னில் அதே பிரின்டன் டக்கெட் பந்தில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களம் இறங்கிய மாடன்சன் 18 ரன்னில் முஜிப் ஓவரில் அவுட் ஆகினார்.

பின்னர் களம் இறங்கிய ப்ராவோ 17 ரன்னில் கட்டிங் பந்தில் அவுட் ஆகினார். இதனை தொடர்ந்து களம் இறங்கிய ப்ளாங்கட் 4 ரன்னிலும், டாம் ஓ கன்னால் 9 ரன்னிலும் தொடர்ந்து அவுட் ஆகினர் . 20 ஓவர் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 138 ரன்களை எடுத்தது. கட்டிங் 2, பிரின்டன் 2, சுவப்சன் 2 , முஜிப் 1, லாலுர் 1 ஆகியோர் விக்கெட்களை வீழ்த்தினர்.

Melbourne stars
Melbourne stars

பின்னர் களம் இறங்கிய ப்ரிஸ்பென் ஹிட் அணியில் தொடக்க ஆட்டகாரர்களாக மெக்ஸ் ப்ரியன்ட் மற்றும் பிரன்டன் மெக்கலம் களம் இறங்கினர். இருவரும் சில ஓவரிலேயே விக்கெட்களை இழந்தனர். மெகஸ் ப்ரியன்ட் 24 ரன்னில் ஸ்டேனிஸ் பந்தில் அவுட் ஆகினார். மெக்கலம் 13 ரன்னில் மெகஸ்வெல் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கீரிஸ் லிண் ஜாம்பா பந்தில் டக் அவுட் ஆகினார் . பின்னர் களம் இறங்கிய ரென்ஷா நிலைத்து விளையாடினார். அலெக்ஸ் ரோஸ் வந்த வேகத்தில் கோல்டன் டக் ஆகி வெளியேறினார் . பின்னர் வந்த பைர்சன் 26 ரன்களில் ஸ்டேனிஸ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினர் . பின்னர் களம் இறங்கிய கட்டிங் 6 ரன்னில் விக்கெட்டை இழக்க இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது ப்ரிஸ்பென் அணி . ஆட்டத்தின் முடிவில் 5 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் அணி வெற்றி பெற்றது.