பிக் பேஷ் டீ-20 லீக் 8 வது சீசன் ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இந்தியவின் ஐபிஎல் போன்று நடத்தப்படும் புகழ் பெற்ற கிரிக்கெட் தொடர் பிக் பாஷ் டீ-20 லீக் . இதில் தற்போழுது 8 வது சீசனின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஆஸ்திரேலியாவின் அனைத்து இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். மற்ற நாடு வீரர்களும் பெரும் அளவில் பங்கேற்று வருகின்றனர். இந்த தொடரில் 56 லீக் போட்டிகளை கொண்டது, தற்போழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள லீக் போட்டிகளில், இதில் 46 வது போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மெல்போர்ன் ரினிக்டெஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின .
இந்த போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரினிகடெஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . அதன் படி களம் இறங்கிய மெல்போர்ன் அணி தொடக்க ஆட்டகாரர்களாக ஹர்வி மற்றும் பிஞ்ச் களம் இறங்கினர் . ஹர்வி வந்த வேகத்தில் 8 ரன்னில் குக் ஓவரில் அவுட் ஆகினார் . பின்னர் வந்த ஹர்பெர் 10 ரன்னில் ஜோர்டன் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார் . பின்னர் சிறிது நேரம் விளையாடிய பிஞ்ச் 10 ரன்னில் ஜோர்டன் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார் . 31-3 விக்கெட்களை இழந்து தடுமாறியது மெல்போர்ன் அணி . பின்னர் களம் இறங்கிய டாம் கூப்பர் 4 ரன்னில் விக்கெட்டை இழந்து நடையைகட்டினார். அகமது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களம் இறங்கிய நபி நிலைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். மறுபுறம் விக்கெட்களை சரித்தது சிட்னி அணி .
கிரிஸடியன் 4 ரன்னிலும், வெபஸ்டர் 2 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். நபி 36 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார் . பின்னர் களம் இறங்கிய கேம்ரோன் பாய்ஸ் அதிரடியில் மிரட்டினார். 90-7 என்ற நிலையில் இருந்து 140-7 என்ற நிலைக்கு ரன் மழை பொழிந்தார். அரைசதத்தை கடந்த கேம்ரோன் பாய்ஸ் 51 ரன்னில் ஆட்டமிலக்காமல் களத்தில் இருந்தார் . மெல்போர்ன் அணி 141 ரன்னை இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் விளையாடிய சிட்னி அணியில் தொடக்க வீரர்களாக வாட்சன் மற்றும் சாங்கா இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே சரிவை கண்டது சிட்னி அணி வாட்சன் 4 ரன்னிலும், சாங்கா 2 ரன்னிலும் அடுத்தடுத்து ரிட்சட்சன் ஓவரில் அவுட் ஆகினர். பின்னர் களம் இறங்கிய பெர்குசன் மற்றும் டுவீச் சிறிது நேரம் நிலைத்தனர். டுவீச் 17 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கிரிஸ் கிரின் 1 ரன்னில்ரன் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த பஸ்டெர் 37 ரன்கள் அடிக்க அணி சிறிது முன்னேறியது. ஆனால் பிறகு வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனை தொடர்ந்து 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது சிட்னி அணி. 113-10 ரன்களை மட்டும் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மெல்போர்ன் அணி சிறப்பான பந்து வீச்சால் வெற்றியை தட்டிசென்றது .