சமீபத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் தனது அணியின் பெயரை டெல்லி கேபிடல்ஸ் என மாற்றியது, தங்களது அணி வரும்காலத்தில் வெற்றிகளை பெறவே இந்த பெயர் மாற்றம். இதற்கு முந்தைய ஐபிஎல் தொடர்களை பொறுத்த வரையில், டெல்லி அணி தனது ரசிகர்கள் எதிர்பார்ப்பை சற்றும் நிறைவேற்றவில்லை. பல தலைவர்கள் மற்றும் வீரர்களை மாற்றியும் அந்த அணி மற்ற அணிகளுக்கு பெரிய நெருக்கடியை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடந்து முடிந்த இந்தியன் பிரீமியர் லீக் 2019-கான ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி தங்கள் அணிக்காக சிறந்த வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது. ஆனால் இம்முறையும் டெல்லி கேபிடல்ஸ் அணி சற்று சுமாரான அணியாக தான் காட்சியளிக்கின்றது. தற்போது டெல்லி அணி 2019 ஏலத்தில் செய்த மிகப்பெரிய தவறுகளை காண்போம்.
#1 இஷாந்த் சர்மா
இஷாந்த் சர்மா, கடைசியாக விளையாடிய எட்டு ஐபிஎல் போட்டிகளில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் தவித்து வரும் ஒரு வேகப்பந்து வீச்சாளரை டெல்லி அணி 1.1 கோடி ரூபாய் கொடுத்து எடுத்திருப்பது டெல்லி அணி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் இவர் 10.25 இமாலய எகானமி ரெட்டை வைத்திருக்கிறார். இஷாந்த் சர்மா டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினாலும் டி20 போட்டிகளை பொறுத்தவரை அவரது பௌலிங் பெரிதாக எடுபடுவதிவில்லை. பெரிதாய் வெற்றிகளை பதிவு செய்ய தவறிய அணி இவரை தேர்வு செய்வதில் சற்று யோசித்து இருக்கலாம்.
#2 ஹனுமா விஹாரி
டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட ஆகிய இளம் இந்திய முதல்வரிசை அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கடந்த சீசனை பொறுத்தவரையில் டெல்லி அணி சில போட்டிகளை போராடி தோற்றது. அந்த அணியில் நடுவரிசை பேட்ஸ்மேன் அதாவது அணிக்கு சேஸிங்கில் வெற்றியை பெற்று தரும் வீரர் என சொல்லிகொள்ளும் படி யாரும் இல்லை. இந்நிலையில் 2019 ஏலத்தில் டெல்லி அணி அனுபவம் வாய்ந்த நடுவரிசை பேட்ஸ்மேனை தனது அணியில் இடம்பெற செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இருப்பினும் அனுபவம் இல்லாத சற்றும் டி20 போட்டிக்கு பொருத்தமில்லாத விஹாரியை தங்களது அணியில் சேர்த்துள்ளது தங்களது அணிக்கு எவ்வகையில் உதவ போகிறது என்று பொறுத்து தான் பார்க்கவேண்டும்.
#3 அக்சார் படேல்
டெல்லி அணியின் மற்றொரு தவறு அக்சார் பட்டேல். ஐபில் போட்டிகளில் பல ஆண்டுகளாக விளையாடி வருபவர் இவர். ஆனால் தற்போது இவரின் ஃபார்ம் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த வருடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார் அதில் 9 போட்டிகளில் வெறும் 3 விக்கெட் மற்றும் 80 ரன்கள் குவித்து மிகவும் சுமாரான ஆடத்தையே வெளிப்படுத்தினார். கடந்த வருடம் நடந்த மெகா ஏலத்தில் கிங்ஸ் லெவன் அணியால் தக்கவைக்கப்பட்ட ஒரே வீரர் அக்சார் படேல். ஆனால் இம்முறை பஞ்சாப் அணி நிர்வாகத்தால் விடுக்கப்பட்டுள்ளார். இவரது சுமாரான ஆட்டத்தால் இந்திய அணியிலும் இவரால் இடம்பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடர்களில் முன்னேற்றத்தை நோக்கி நகர முயற்சிக்கும் நேரத்தில் டெல்லி அணி நிர்வாகம் இவரை தங்களது அணியில் சேர்ந்திருப்பது சற்று பின்னடைவு தான்.
எழுத்து : சச்சின் அரோரா
மொழியாக்கம்: காமாட்சி சுந்தரம்