ஆகஸ்ட் 17 அன்று தொடங்க உள்ள துலிப் கோப்பைக்கான அணிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆகஸ்ட் 6 அன்று அறிவித்துள்ளது. செப்டம்பர் 8 வரை நடைபெறும் இறுதிப் போட்டியுடன் சேர்த்து அனைத்து போட்டிகளும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
2019-20 ஆம் ஆண்டிற்கான துலிப் கோப்பையானது 2020ல் நடைபெறும் இராணி கோப்பைக்கு முன்மாதிரி தொடராகும். கடந்த வருடத்தில் துலிப் கோப்பையையின் இறுதிப் போட்டியில் "இந்திய ரெட்" அணியை 187 ரன்கள் வித்தியாசத்தில் "இந்திய ப்ளூ" அணி வீழ்த்தியது. துலீப் கோப்பையானது "ரவுண்ட் ராபின்" முறைப்படி நடத்தப்படும். புள்ளிபட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணி 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் வகை இறுதிப் போட்டியில் பங்கேற்கும்.
துலிப் டிராபி குறித்த பிசிசிஐ வெளியிட்ட அறிக்கை:
2019-20ஆம் ஆண்டின் துலிப் கோப்பைக்கான அணிகளை அனைத்திந்திய மூத்த தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது. ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறும் இந்த தொடர் பெங்களூரில் நடைபெறுகிறது.
துலிப் டிராபியில் இடம்பெறும்" இந்தியா ரெட், இந்தியா கிரின், இந்தியா ப்ளூ" ஆகிய அணிகளை" பிரியன்க் பன்சல், ஃபேய்ஜ் பேசல், இளம் சுப்மன் கில்" ஆகியோர் வழிநடத்த உள்ளனர். பெரும்பாலும் இத்தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் சமீபத்தில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுள்-ஏ அணிக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் தான். இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் இந்திய அணித் தேர்வுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். மேலும் தங்களை முழுமையாக நிரூபிக்கும் சில இளம் வீரர்களுக்கு இந்திய-ஏ அணியிலும் தேர்வாக வாய்ப்புண்டு. பிசிசிஐ இத்தொடரை 1961 அன்று தொடங்கி தற்போது வரை ஶ்ரீ துலீப் சிங்ஜீ நினைவாக நடத்தி வருகிறது. அக்காலம் முதல் தற்போது வரை பலவகையான மாற்றங்கள் இத்தொடரில் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முழு அணி விவரம்:
இந்தியா ரெட்
பிரியன்க் பன்சல் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், அக்ஸர் படேல், கரூன் நாயர், இசான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹார்பிரிட் சிங் பாட்யா, மஹீபால் லேம்ரோர், ஆதித்யா ஷர்வா, அக்ஷய் வஹார், வரூன் ஆரோன், ரோனித் மோர், ஜெய்தேவ் உன்ட்கட், சந்தீப் வார்யர், அன்கிட் கல்சி
இந்தியா கிரின்
ஃபேய்ஜ் பேசல் (கேப்டன்), அக்ஸத் ரெட்டி, துரூவ் சோரே, சிதிஸ் லேட், பிரியம் கார்க், அக்ஸீப் நாத், ராகுல் சகார், தர்மேந்திரசிங் ஜடேஜா, ஜெயன்த் யாதவ், அன்கிட் ராஜ்பூட், இசான் போரேல், தன்வீர்-உல்-ஹக், அக்ஸய் வாட்கேர் (விக்கெட் கீப்பர்), ராஜேஷ் மொஹான்டி, மிலிந்த் குமார்.
இந்தியா ப்ளூ
சுப்மன் கில் (கேப்டன்), ரூத் ராஜ் கெய்க்வேட், ராஜத் பேஸ்டர், ரிக்கி பூய், அன்மோல்பிரித் சிங், அன்கீப் பவான், ஸ்நெல் படேல் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயஸ் கோபால், சவ்ரப் குமார், ஜலாஜ் சக்சேனா, துஸார் தேஷ்பாண்டே, பாசில் தம்பி, அன்கிட் சவ்த்ரி, திவேஷ் பதானியா, அஸுட்டோஸ் அமார்.