ஐபிஎல் என்னும் பிரபலமான தொடர் வருடத்திற்கு ஒரு முறை ஏப்ரல் மாதத்தில் தொடங்கி, தொடர்ந்து இரண்டு மாதங்களாக நடைபெறும். இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் இந்த ஐபிஎல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் மைதானத்தில் ரசிகர்களின் கூட்டத்திற்கு குறை இருக்காது. 20 ஓவர் போட்டி என்பதால் அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடுவர்.
எனவே போட்டியின் கடைசி பந்து வரை, போட்டி விறுவிறுப்பாக இருக்கும். தனது தாய் நாட்டிற்காக விளையாடும் பல இளம் வீரர்கள், ஐபிஎல் தொடரின் மூலம் தான் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளனர். இந்த ஐபிஎல் தொடரின் சிறப்பம்சம் என்னவென்றால், பார்மில் இல்லாத பல வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரை பயன்படுத்தி சிறப்பாக விளையாடி, அதன் மூலம் தனது நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பை மீண்டும் பெறுகின்றனர். இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து நாட்டு வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். சிறப்பாக விளையாடும் வெளிநாட்டு வீரர்களை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் போட்டியிட்டு எடுத்து கொள்வர். இவ்வாறு ஐபிஎல் தொடர் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் அதிக முறை மெய்டன் ஓவர்கள் வீசிய பந்து வீச்சாளர்களின் பட்டியலை இங்கு காண்போம்.
#1) பிரவீன் குமார்

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரவீன் குமார். இவர் ஐபிஎல் தொடரின் சிறந்த டெத் பவுலர்களின் பட்டியலில் இருந்தவர். இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு வருடமும், பஞ்சாப் அணிக்காக மூன்று வருடமும், பெங்களூர் அணிக்காக 2 வருடமும் விளையாடி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் இவர் விளையாடிய அனைத்து அணிகளிலுமே, சிறந்த டெத் பவுலராக விளங்கியவர். துல்லியமாக பந்துவீசும் திறமை படைத்தவர். 20 ஓவர் என்றாலே அடித்து விளையாடும் பேட்ஸ்மேன்களின் மத்தியில், ஒரு ஓவரை மெய்டன் செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த சாதனையை இவர் 14 முறை செய்துள்ளார். இவர் விளையாடிய ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 14 மெய்டன் ஓவர்களையும் 90 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) இர்பான் பதான்

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான். இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 3 வருடமும், டெல்லி அணிக்காக 3 வருடமும் சன்ரைசர்ஸ் அணிக்காக தலா ஒரு வருடமும் விளையாடி இருக்கிறார். இவரும் சிறந்த டெத் பவுலர்களில் ஒருவர் தான். பொதுவாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மதிப்பு அதிகம். இதன் காரணத்தை தற்போது தெரிந்து கொள்வோம். பொதுவாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக பேட்ஸ்மேன்கள் வலதுகை பேட்ஸ்மேனாக தான் இருக்கிறார்கள்.
இந்த வலது கை பேட்ஸ்மேன்கள் அனைவரும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் பொழுது சற்று திணறுவார்கள். எனவே இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு என்றுமே மதிப்பு சற்று அதிகமாகத்தான் உள்ளது. இவர் இதுவரை விளையாடிய மொத்த ஐபிஎல் போட்டிகளில் 11 மெய்டன் ஓவர்களையும், 80 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3) லசித் மலிங்கா

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறந்த அணியாக விளங்குவதற்கு முக்கிய காரணங்களில் இவரும் ஒருவர். அணி குறைந்த ரன்களை அடித்தாலும் அந்த ரன்களை விட்டுக் கொடுக்காமல், கட்டுப்படுத்தும் அளவிற்கு பந்து வீசும் திறமை படைத்தவர். பொதுவாக யார்க்கர் பந்து வீசுவது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால் இவர் சர்வசாதாரணமாக யார்க்கர் பந்து வீசுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை விளையாடிய மொத்த ஐபிஎல் போட்டிகளில் 8 மெயிடன், 154 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#4) சந்தீப் சர்மா

இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் இந்தியாவைச் சேர்ந்த சந்தீப் சர்மா. இவர் அதிகபட்சமாக தொடர்ந்து ஐந்து வருடங்கள் பஞ்சாப் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை ஐபிஎல் தொடரில் 8 மெய்டன் ஓவர்களையும், 80 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#5) குல்கர்னி

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பவர் குல்கர்னி. இவர் அதிகபட்சமாக தொடர்ந்து ஐந்து வருடங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர். இவர் ஐபிஎல் தொடரில் மொத்தம் 7 மெய்டன் ஓவர்களையும், 80 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.