பீபிஎல்(BPL) தொடரின் சாம்பியன் ஆனது அப்ரிடி அணி 

Pravin
BPL2019 FINAL DHAKA VS COMILLA
BPL2019 FINAL DHAKA VS COMILLA

வங்கதேசம் பிரிமியர் லீக் ஆறாவது சீசன் வங்கதேசத்தில் நடைபெற்றது. இந்த டி-20 லீக்கில் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடர் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் போன்று வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. வங்கதேசத்தில் உள்ள மூன்று மைதானங்களில் லீக் போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்த தொடரில் பிரபலமான மற்ற நாடு வீரர்களும் வங்கதேச வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் 42 லீக் போட்டிகள் நடைபெற்று நான்கு அணிகள் குவாலிபையர்ஸ் சுற்றுக்கு முன்னேறி இருந்தனர். இதில் எலிமினேடர் சுற்று மூலம் இரண்டு அணிகள் வெளியேறிய நிலையில் வங்கதேசம் பிரிமியர் லீக் 2019 ஆம் ஆண்டிற்கான இறுதி போட்டி வங்கதேசத்தில் உள்ள டாக்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் எற்கனவே ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள கோமில்லா அணியும் அதே போல் ஒரே முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள டாக்கா டைனமைட்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டாக்கா டைனமைட்ஸ் அணி முதலில் பேட்ங்கை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய கோமில்லா அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இக்பால் மற்றும் எவின் லெவிஸ் இருவரும் களம் இறங்கினர். களம் இறங்கிய சிறிது நேரத்தில் லெவிஸ் 6 ரன்னில் ரூபெல் ஹுஸ்ஸைன் பந்தில் அவுட் ஆகினார். மறுமுனையில் அதிரடி காட்டிய தமிம் இக்பால் டாக்கா அணியின் பந்துகள் அடித்து நொருக்கினார். பின்னர் வந்த அனாமூல் ஹக் சிறிது நேரம் நிலைத்து விளையாடி 24 ரன்னில் ஷாகிப் அல் ஹஷன் பந்தில் அவுட் ஆகினார். இவரை அடுத்து வந்த ஷம்சூர் ரஹ்மான் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். எனினும் அதிரடி காட்டிய தமிம் இக்பால் சதம் அடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மீண்டும் அதிரடியை தொடர்ந்த தமிம் இக்பால் நிலைத்து விளையாடினார். பின்னர் வந்த இம்ருல் கயீஸ் கடைசி வரை ஆட்டம் இலக்காமல் 17 ரன்னிலும் அதிரடி மன்னாக திகழ்ந்த தமிம் இக்பால் 141 ரன்களுடன் களத்தில் இருந்தார். 20 ஒவர்கள் முடிவில் கோமில்லா அணி 199 ரன்களை குவித்தது.

Tamim lqbal
Tamim lqbal

அடுத்து களம் இறங்கிய டாக்கா அணியில் சுனில் நரைன் ஒரு பந்து கூட சந்திகாமல் ரன் அவுட் ஆகினார். இதனை அடுத்து களம் இறங்கிய ரோனி தலுக்டர் மற்றும் தொடக்க வீரர் தரங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். தரங்கா 48 ரன்னில் திச்சாரா பெரெரா பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து ஷாகிப் அல் ஹஷன் 3 ரன்னில் வாஹாப் ரியாஸ் பந்தில் அவுட் ஆகினார். அடுத்ததாக நிலைத்து விளையாடிய ரோனி தலுக்டர் 66 ரன்னில் ரன் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ரஸ்ஸெல் 4 ரன்னில் திச்சாரா பெரெரா பந்தில் அவுட் ஆகினார். அதனை அடுத்து கைரன் பொலார்ட் 13 ரன்னில் வாஹாப் ரியாஸ் பந்தில் அவுட் ஆகினார். டாக்கா அணி பறிதாப நிலைக்கு சென்றது.

Comilla team champions
Comilla team champions

இதை அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து அவுட் ஆக டாக்கா அணி மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. 20 ஒவர்கள் முடிவில் கோமில்லா அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்றது. இந்த ஆட்டத்தின் நாயகனாக தமிம் இக்பால் தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரின் நாயகனாக ஷாகிப் அல் ஹஷன் தேர்வு செய்யப்பட்டார்.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now