வங்கதேசம் பிரிமியர் லீக்கின் ஆறாவது சீசன் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டி-20 லீக்கில் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடர் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் போன்று வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. வங்கதேசத்தில் உள்ள மூன்று மைதானங்களில் லீக் போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்த தொடரில் பிரபலமான மற்ற நாட்டு வீரர்களும் வங்கதேச வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் 42 லீக் போட்டிகள் நடைபெற்று நான்கு அணிகள் தகுதிச் சுற்றுக்கு முன்னேறி இருந்தனர். இந்த தொடர்களில் இலங்கை அணியின் முன்னனி வீரர்களும் வங்கதேச வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். தற்போது இந்த வங்கதேச பிரிமியர் லீக் சீசன் 6 தொடர் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்த தொடர் ஜனவரி 5 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்ற நிலையில் தற்போது இறுதிப் போட்டி நாளை டாக்கா மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டிகளில் சிட்டகாங் வைக்கிங்ஸ் , டாக்கா டைனமைட்ஸ் , கோண்டவில் ரைடர்ஸ், கோமில்லா விக்டோரியன்ஸ் அணிகள் பங்கேற்றனர். எலிமினேடர் போட்டியில் சிட்டகாங் வைக்கிங்ஸ் மற்றும் டாக்கா டைனமைட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிட்டகாங் வைக்கிங்ஸ் அணி 135 ரன்களை எடுத்தது அதிகபட்சமாக மோசடெக் 40 ரன்களை எடுத்தார். பின்னர் களம் இறங்கி டாக்கா டைனமைட்ஸ் அணி 136 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தரங்கா அரைசதம் அடித்து வெற்றிபெற செய்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் முலம் டாக்கா டைனமைட்ஸ் அணி குவாலிபையர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது.
குவாலிபையர் 1 போட்டியில் கோண்டவில் ரைடர்ஸ் மற்றும் கோமில்லா விக்டோரியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய கோண்டவில் அணியில் கெய்ல் 46 ரன்களும் , ரிலி ருஸோ 44 ரன்களும், பென்னி ஹோவெல் 53 ரன்களை அடித்து கோண்டவில் அணியை 165 ரன்களை எடுக்க செய்தனர். இதனை அடுத்து களம் இறங்கிய கோமில்லா விக்டோரியன்ஸ் அணி எவின் லெவிஸ் 71 ரன்களை எடுத்தார் மற்றும் ஷம்சூர் ரஹ்மான் 34 ரன்களை எடுத்து கோமில்லா அணி 166 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி முலம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
குவாலிபையர் 2 போட்டியில் டாக்கா டைனமைட்ஸ் மற்றும் கோண்டவில் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் பலப்பரிச்சை நடத்தின. முதலில் விளையாடிய கோண்டவில் அணி 142 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக 49 ரன்களை எடுத்தார். பின்னர் விளையாடிய டாக்கா அணியில் ரோனி தலுக்டர் மற்றும் ஆன்ட்ரே ரஸ்ஸெல் இருவரின் அதிரடியால் டாக்கா அணி 147 எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி முலம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் டாக்கா டைனமைட்ஸ் மற்றும் கோமில்லா விக்டோரியன்ஸ் அணிகள் மோதுகின்றனர்.