கிரிக்கெட் வரலாற்றில் உலகக்கோப்பை என்பது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒரு தொடர் ஆகும். இந்த உலகக் கோப்பை தொடர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு நடைபெற்றது. தற்போது இந்த 2019 ஆம் ஆண்டின் மே மாதத்தில் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் உறுதியாக இந்தியா தான் வெற்றி பெறும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரைன் லாரா கூறியுள்ளார். அவர் கூறியதை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
கால்பந்து விளையாட்டிற்கு அப்புறம் கிரிக்கெட் விளையாட்டுக்கு தான் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த கிரிக்கெட் விளையாட்டில் பல நாடுகள் விளையாடுகின்றன. அந்நாடுகளில் மிக முக்கியமான நாடு இந்தியா. அதற்கு காரணம் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த கிரிக்கெட் விளையாட்டில் பல விறுவிறுப்பான தொடர்கள் உள்ளன. அந்த தொடர்களில் மிக முக்கியமான தொடர் என்ன என்றால் உலக கோப்பை தொடர் தான். இந்த உலகக் கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படும். இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை தொடருக்கு அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இவ்வாறு இந்த உலகக் கோப்பை தொடருக்கு அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில், இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா தான் வெற்றி பெறும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரைன் லாரா மற்றும் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஆண்டிபிளவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் கூறியது என்ன என்றால், இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, மற்றும் தோனி ஆகிய மூன்று பெரிய பேட்ஸ்மென்களை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இரு பெரிய வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. மேலும் குல்தீப் யாதவ் மற்றும் சகால் ஆகிய இரு சிறந்த சுழல் பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது. இவ்வாறு தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களின் பட்டாளத்தை கொண்டுள்ளது இந்திய அணி.
அதுமட்டுமின்றி இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடத்தப்பட உள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்றாலும் இந்திய அணி அங்கு விளையாடும் பொழுது அவர்களுக்குத் தான் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். அந்த ரசிகர்கள் தான் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்துகின்றனர். வெற்றியின் பாதி பங்கு ரசிகர்கள் உற்சாக படுத்துவதில்தான் இருக்கிறது. அது மட்டுமின்றி இந்திய அணி சமீபகாலமாக அயல்நாட்டு தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அயல் நாட்டிற்கும் சென்று அங்கு விளையாடி தொடரை கைப்பற்றி வருகின்றனர்.
எனவே இந்தியா தான் இந்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெறும். இவ்வாறு பிரைன் லாரவும், ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும் இங்கிலாந்து லயன்ஸ்அணியின் பயிற்சியாளருமான ஆண்டிபிளவரும் கூறியுள்ளனர். இவர்கள் கூறியபடி இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.