ஜாஸ்பிரிட் பூம்ரா, தான் ஒரு சிறந்த பௌலர் என உலகிற்கு மீண்டும் மீண்டும் தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 25 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் அற்புதமான பௌலிங்கை வெளிபடுத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இப்போட்டியின் நட்சத்திர நாயகனாக ஜாஸ்பிரிட் பூம்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
419 என்ற இலக்கை மேற்கிந்தியத் தீவுகளுக்கு நிர்ணயித்த இந்திய அணி, எதிரணியை 100 ரன்களில் சுருட்டி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்நிய மண்ணில் மிகப்பெரிய கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது இந்தியா. பூம்ரா தனது அற்புதமான வேகத்தால் தான் வீசும் அனைத்து பந்தையும் ஸ்டம்பிற்கு நேராக வீசி மேற்கிந்தியத் தீவுகளின் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே வீழ்த்தினார். பூம்ரா வீசிய முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் கிரெய்க் பிராத்வைட் ஸ்லிப் கேட்ச் ஆனார்.
அதன்பின் சிறிய நிமிடங்கள் சென்றதும் மேற்கிந்தியத் தீவுகள் 15 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஜாஸ்பிரிட் பூம்ராவிற்கு மூத்த வீரர் இஷாந்த் சர்மா சிறப்பாக ஆதரவளித்து 31 ரன்களை அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேற்கிந்திய தீவுகள் 50 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பின் களம்கண்ட கேமார் ரோஜ் மற்றும் மிகுவல் கமின்ஸ் இருவரும் இணைந்து 50 ரன்களை கடைசி விக்கெட்டிற்கு குவித்தனர். கேமார் ரோஜ், ரவீந்திர ஜடேஜா வீசிய ஒரு ஓவரில் 3 சிக்ஸர்களை வீளாசினார். மேற்கிந்திய தீவுகளில் கேமார் ரோஜ் 38 ரன்களை குவித்து அந்த அணியின் டாப் ரன் ஸ்கோரராக இருந்தார்.
ஜாஸ்பிரிட் பூம்ரா சர்வதேச டெஸ்டில் 4வது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் இந்த 4 நாடுகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய பௌலர் பூம்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவின் ஜோஹான்னஸ் பார்க் மைதானத்தில் நடந்த டெஸ்டில் 54 ரன்களை அளித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இங்கிலாந்தின் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் 85 ரன்களை அளித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2018ன் கடைசியில் மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 33 ரன்களை அளித்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பூம்ரா.
பூம்ராவின் அற்புதமான பௌலிங்கிற்குப் பின்னர் அதனைப் பற்றி அவர் கூறியதாவது,
"நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். என்னுடைய பௌலிங்கிற்காக அதிகமாக உழைத்தேன். நான் ஆரம்பத்தில் பௌலிங் செய்யும் போது இன்ஸ்விங்கில் இப்போட்டியில் வீசினேன். ஆனால் நான் விளையாடிய பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் மிகவும் அதிக நம்பபிக்கையுடன் அவுட் ஸ்விங் வீசியுள்ளேன்.