இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் நடைபெறும் நிகழ்வுகளை அவ்வபோது குறிப்பிட்டு நிகழ்ச்சிகளில் பேசுவது வழக்கம். சமிபத்தில் இரண்டு இந்திய வீரர்களை பற்றி பாராட்டி பேசியுள்ளார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒரு வீரரை பற்றி பாராட்டி பேசினால் நிச்சயம் ஏகோபித்த கிரிக்கெட் ரசிகர்களின் வரவேற்பை பெறுவார் என்றே சொல்லலாம். அப்படிதான் தற்போழுது இந்திய அணியின் முன்னனி வேகபந்து விச்சாளர் பும்ரா பற்றி அனல் பறக்கும் பேச்சு கிரிக்கெட் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அவர் பும்ராவை பற்றி பேசியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணியின் இளம் வீரர்களான பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் தங்களின் சிறப்பான ஆட்டத்தின் முலம் இந்திய கிரிக்கெட் அணியில் தங்களுக்கு என ஓர் நிரந்தர இடத்தை பெற்றுள்ளனர். அவர்களின் திறமைக்கு பரிசு அளிக்கும் விதமாக 2018ம் ஆண்டிற்கான ஐ.சி.சி அணியில் இவர்களின் பெயரை இடம் பெற செய்து ஐ.சி.சி பெருமை சேர்த்தது. இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் இருவரையும் புகழ்ந்து பேட்டியில் கூறியுள்ளார்.
அதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா சிறப்பான ஆட்டத்தின் முலம் இந்திய அணி வரலாற்று வெற்றிக்கு வழி வகுத்தார். இவர் அந்த தொடரில் 4 போட்டிகளில் 21 விக்கெட்களை வீழ்த்தியது முக்கியமான காரணமாக கருதப்பட்டது. அதனால் தான் இந்தியவிற்கு வரும் ஆஸ்திரேலிய அணிக்கு ஏதிரான போட்டிகாக கோலியை போலவே பும்ராவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சச்சின் கூறியதாவது: ‘ கிரிக்கெடில் பும்ராவின் வெற்றி எனக்கு ஆச்சிரியம் தரும் வகையில் இல்லை. என்னென்றால் அவர் கிரிக்கெட்டில் தனகென தனி முத்திரையை பதிப்பார் என முன்பே தெரியும். நான் பும்ராவை 2015 ஆம் ஆண்டு முதல் பார்த்து வருகிறேன். அவர் எப்போதும் புதிதாக கற்று கொள்ள விரும்புபவர். அதே சமயம் கற்று கொண்டதை தெளிவாக செயல்படுத்த கூடியவர். பும்ரா பந்து வீசும் போது செய்யும் செய்கையும் ஏமாற்றும் விதமும் தான் பும்ரா சிறந்த பந்து வீச்சாளராக உதவுகிறது. பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாத அளவுக்கு கடினமாகவும் திறமையாகவும் பந்துவிசி விக்கெட்களை வீழ்த்த கூடியவர். இவர் இந்த உலககோப்பையில் ஏதிரணிக்கு பெரும் அச்சுருத்தலாக இருப்பார். இந்திய அணிக்கு சொத்தாக இருப்பார்.
அதே போல் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் வளர்ச்சியும் குறிப்பிடதக்கது. அவருக்கு டெஸ்ட் போட்டியில் அருமையான வாய்ப்பு கிடைத்து உள்ளது. அந்த வாய்ப்பை தக்கவைத்து கொள்ள வேண்டும். மைதானத்தில் அவரின் ஆட்டம் பயம் அறியாதவர் என காட்டுகிறது. பண்ட் மற்றும் பும்ரா இருவருக்கும் கிரிக்கெடில் மிக பெரிய எதிர்காலம் உள்ளது" என கூறினார். இந்திய வேகபந்து விச்சாளர் பும்ரா 10 டெஸ்ட் போட்டியில் 49 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ரிஷப் பண்ட் 9 டெஸ்ட் போட்டிகளில் 696 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.