இந்திய அணியின் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் நம்பர்-1 டெத் பவுலர் ஆன பும்ரா, இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. அதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 12 ஆவது ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளது. அதிரடிக்கு பெயர் போன டி-20 போட்டிகளில், ஒரு ஓவரில் அதிக ரன்களை கொடுக்காமல், கட்டுப்படுத்தி பந்து வீசுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அவ்வாறு பந்துவீசும் திறமை படைத்தவர் தான் உலகின் நம்பர்-1 டெத் பவுலராக கருதப்படுகின்றன. சர்வதேச டி-20 போட்டிகளில் சிறந்த டெத் பவுலர்களின் பட்டியலில் பும்ரா முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அந்த சுற்றுப்பயணத்தில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆஸ்திரேலியா தொடர் முடிந்தவுடன், இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சென்று 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்று விளையாடியது.
இந்திய அணி இந்த ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. ஆனால் டி-20 தொடரை நியூசிலாந்து அணியிடம் இழந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த சுற்றுப்பயணத்திலும் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு தொடர்ந்து ஓய்வு அதற்கு முக்கிய காரணம் உலக கோப்பை தொடர் நெருங்க உள்ளது.
எனவே அவரது ஓய்வும், அவரது உடல் நிலையும் மிக முக்கியம் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு தான் இந்த இரண்டு தொடர்களிலும் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது என்று கூறியிருந்தது. அது மட்டுமின்றி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கூறியது என்னவென்றால், உலகக்கோப்பை நெருங்க உள்ளது. எனவே பும்ரா ஐபிஎல் தொடரில் விளையாடி, அவருக்கு காயம் ஏற்பட்டால் இந்திய அணிக்கு பிரச்சனைதான். பின்பு பந்துவீச்சில் சரிவு ஏற்பட்டு விடும். எனவே ஐபிஎல் தொடரிலும் இவருக்கு ஓய்வெடுக்கலாம் என்று தனது சொந்த கருத்தினை கூறினார் விராட் கோலி.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, மனு ஒன்றினை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்க்கு அனுப்பியிருந்தார். அதில் அவர் கூறியிருந்தது என்னவென்றால், "அவர் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கண்டிப்பாக விளையாட வேண்டும். அவர் எங்கள் அணியின் மிக முக்கியமான பந்து வீச்சாளர். அதுமட்டுமின்றி அவர் இந்த ஐபிஎல் தொடரை பயன்படுத்தி நன்றாக பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் அவர் விளையாடமாட்டார். சில முக்கியமான போட்டிகளில் மட்டும் அவர் பந்து வீசுவார். எனவே இவருக்கு காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவுதான்". இவ்வாறு ரோகித் சர்மா கூறியிருந்தார். பும்ரா ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.