ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. 71 வருடங்கள் கழித்து ஒரு ஆசிய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற ஜனவரி மாதம் 12ம் தேதி சிட்னியில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான அணியை சிறு வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது இந்திய தேர்வுக்குழு.
இந்திய அணியின் நட்சத்திரா வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவிற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜஸ்பிரிட் பும்ரா இதுவரை 49 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவரின் பௌலிங் புள்ளிகளானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற அவர் மிக முக்கிய காரணியாக விளங்கினார், அது மட்டுமில்லாமல் கடந்த ஒரு வருடங்களில் இந்தியா வெளிநாடுகளில் பெற்ற டெஸ்ட் வெற்றியில் இந்திய அணிக்கு அதிகபட்ச விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் அறிமுகமான முதல் பத்து டெஸ்டுகளில் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் அறிமுகமான பொழுது டெஸ்ட் தரவரிசையில் 85-வது இடத்தில இருந்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிவடையும்போது பதினாறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை இங்கிலாந்தில் மே மாதம் தொடங்க உள்ளது. பும்ராவின் பந்து வீச்சு இந்திய அணிக்கு மிகவும் முக்கிய காரணியாக விளங்குவதால் அவரின் வேலைப் பளுவை குறைத்து அவரை உலக கோப்பைக்கு முழு உடல் தகுதியுடன் வைத்துக்கொள்வதே இந்த முடிவின் நோக்கமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
பும்ராவிற்கு பதிலாக ஒருநாள் போட்டியில் சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளார் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் 3 டி20 ஒருநாள் போட்டியில் முஹம்மத் சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் அட்டவணை:
12 ஜனவரி - முதல் ஒரு நாள்
15 ஜனவரி - இரண்டாவது ஒரு நாள்
18 ஜனவரி - மூன்றாவது ஒரு நாள்
நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் அட்டவணை:
23 ஜனவரி - முதல் ஒரு நாள்
26 ஜனவரி - இரண்டாவது ஒரு நாள்
28 ஜனவரி - மூன்றாவது ஒரு நாள்
31 ஜனவரி - நான்காவது ஒரு நாள்
3 வது பிப்ரவரி - ஐந்தாவது ஒரு நாள்
நியூஸிலாந்துக்கு எதிரான T20I தொடர் அட்டவணை:
6 பிப்ரவரி - முதல் T20I
8 பிப்ரவரி - இரண்டாவது T20I
10 பிப்ரவரி - 3 மூன்றாவது T20I