இன்னும் உலக கோப்பை தொடர் தொடங்க மூன்று வாரங்களே உள்ள உள்ளது. வரும் 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14ஆம் தேதி வரை இந்த மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா நடைபெற இருக்கின்றது. உலகின் மிகப் பிரபலமான தொடர்களில் இந்த உலக கோப்பை தொடரும் ஒன்று. ஏனெனில், ஏறக்குறைய ஒன்றரை மாதங்கள் கிரிக்கெட் ரசிகர்களின் தாகத்தைத் தீர்க்க உள்ளது. அனைவரது மனதிலும் ஓடிக்கொண்டிருப்பது என்னவென்றால், எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும்? இந்த தொடரில் முன்னணி அணிகள் பல தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முற்படும் அவற்றில் சில அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். அவற்றிற்கு தகுதி பெறும் அணிகளாக ஐசிசி ஒருநாள் தரவரிசையில் தற்போதைய முதல் 4 இடங்களை பிடித்த அணிகளே தகுதி பெறும் என கணிக்கப்படுகிறது. திடீரென தொடரின் அதிர்ச்சி அளிக்கும் அணிகளும் கூட இந்த அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறலாம். ஏனெனில், கிரிக்கெட் போட்டிகளானது எந்நேரமும் கணிக்க முடியாத போட்டிகளில் ஒன்று.
எப்போது யார் ஆட்டங்களில் வெல்வார் என நினைக்க முடியாது. 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டியில் 183 என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டும் என எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதேபோல், அந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது மூன்றாவது சாம்பியன் பட்டத்தை வெல்ல தவறும் என கூட எவரும் கணித்து இருக்க மாட்டார்கள். கடந்த 2011 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை தொடர்களை நடத்திய அணிகளான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றை மாற்றி எழுதின. ஏனெனில், 2011ஆம் ஆண்டில் இலங்கை மற்றும் இந்திய அணியும் 2015-ம் ஆண்டில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
சொந்த மண்ணில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மை:
சொந்த மண்ணில் விளையாடுவது ஒரு கூடுதல் நன்மையாக உள்ளது. வரலாற்றை திரும்பிப் பார்த்தால், உலக கோப்பை தொடரை நடத்தும் நாடு சிறப்பாக செயல்பட்டு இருக்கும் என்பதை உறுதி செய்ய முடியும். தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மட்டுமே சொந்தம் மண்ணில் நடத்தப்பட்ட உலக கோப்பை தொடரில் ஜொலிக்கத் தவறியிருக்கும். பின்வரும் அட்டவணை உலகக் கோப்பை தொடரை நடத்தும் அணிக்கு சாதகமாக முடிந்த தொடர்களை விவரிக்கின்றது.

ஆனால், இதுவரை 5 முறை தமது மண்ணில் உலக கோப்பை தொடரை நடத்தியிருக்கும் இங்கிலாந்து அணி, மாறுதலான முடிவுகளை பெற்றுள்ளது. அவற்றில், 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் தான் முதல்முறையாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று இறுதிப் போட்டி வரை முன்னேறி வரலாறு படைத்தது.
தற்போது மாற்றம் அடைந்திருக்கும் இங்கிலாந்தின் ஒருநாள் அணி:

2015ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறியது. அதன் பின்னர் குறுகிய கால போட்டிகளில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், இதுவரை விளையாடியுள்ள 85 போட்டிகளில் 55 வெற்றிகளைப் பெற்றுள்ளது. மேலும் இந்த அணியின் வெற்றி சதவீதம் 64.7 என்ற அளவில் உள்ளது. இந்த வெற்றிகளுக்கான அனைத்திற்கும் முக்கிய காரண,ம் இந்த அணியின் பேட்டிங். ஏனெனில், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு ஐந்து ஆட்டத்திற்கும் இரண்டு போட்டிகளிலாவது 300 ரன்களை கடந்து விடுகின்றனர். 361 ரன்கள் என்ற இலக்கை கூட வெற்றிகரமாக துரத்திப் பிடித்து இருக்கின்றனர். சொந்த மண்ணில் இந்த அணியின் வெற்றி சதவீதம் 70-க்கும் மேல் உள்ளது. 2017 சாம்பியன் டிராபி தொடரில் கூட அரையிறுதி போட்டிக்கு வரை இந்த அணி முன்னேறியது. மேலும், தற்போதைய சர்வதேச ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. எனவே,கடந்த இரு உலகக்கோப்பை தொடர்களைப் போல இம்முறையும் சொந்த மண்ணில் விளையாடும் அணி தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.