இந்திய பிரீமியர் லீக் 12 வது சீசன்களில் விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா ஒரு சிறந்த ரன் ஸ்கோரர் ஆவார். இதுவரை 189 போட்டிகளில் (185 இன்னிங்ஸ்) அபாரமான விளையாடி 5,291 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 37 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும். மேலும் 487 பவுண்டரிகள் மற்றும் 192 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
சென்னையில் உள்ள மக்களால் "சின்ன தல" என அழைக்கப்படும் ரெய்னா சென்னை அணியில் பல ஆண்டுகளாக முக்கிய பங்கு வகித்து வருகிறார். உண்மையில் ரெய்னா சென்னை அணியைப் பல போட்டிகளில் வெற்றிபெற வைத்துள்ளார். சென்னை அணிக்குப் பேட்டிங்கில் அனைத்து சீசனிலும் சிறப்பாகப் பங்களித்து வந்துள்ளார்.
இதுவரை விளையாடிய அனைத்து ஐபிஎல் தொடரிலும் 300 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்ற சீசன் வரை ரெய்னாவிற்கு அடுத்தபடியாக இந்திய அணியின் கேப்டன் கோலி அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தார்.
ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த இடது கை பேட்ஸ்மேனாக வலம்வரும் ரெய்னா அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறார். ஆனால் ஒரு சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரருக்கு அளிக்கப்படும் அரஞ்சு தொப்பியை ஒருமுறை கூட பெற்றதில்லை. கோலி 2016-ஆம் ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் யாரும் எட்ட முடியாத வகையில் ஒரே சீசனில் 973 ரன்கள் எடுத்து அரஞ்சு தொப்பியை பெற்றார்.
இந்த சீசனில் கோலி அதிக ரன்கள் எடுத்த ரெய்னாவின் சாதனையை முறியடித்து முதல் இடத்தில் இருந்து வருகிறார். சென்ற ஆண்டு இறுதியில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் 4,985 ரன்கள் எடுத்திருந்தார் ரெய்னா. இந்திய அணியின் கேப்டன் கோலி 37 ரன்கள் மட்டுமே பின்தங்கி 4948 ரன்கள் எடுத்திருந்தார்.
முதல் சில தொடர்களில் ஓரளவு விளையாடி வந்த கோலி கடந்த சில ஆண்டுகளாக கோலியின் பேட்டிங் அனைத்து வடிவ போட்டிகளிலும் மிகச்சிறப்பாக இருந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் 36 அரைசதங்கள், 5 சதங்கள், 478 பவுண்டரிகள் மற்றும் 189 சிக்ஸர்கள் அடித்துள்ளார் கோலி.
இந்த ஐ.பி.எல் சீசனில் இதுவரை இரு வீரர்களாலும் 13 இன்னிங்ஸில் விளையாடியுள்ளனர். ரெய்னா 306 ரன்களும், கோலி 448 ரன்களும் எடுத்துள்ளனர். இருவருக்கும் 105 ரன்கள் வித்தியாசம் இந்த தொடரில் ஏற்ப்பட்டுள்ளது.
பெங்களூர் அணி ஃப்ளே ஆப் வாய்ப்பை இழந்த நிலையில் கோலி இன்னும் ஒரு போட்டியில் மட்டுமே விளையாட முடியும். ஆனால் சென்னை அணி ஃப்ளே ஆப் சென்ற நிலையில் ரெய்னா இன்னும் 3, 4 போட்டிகள் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரெய்னா மீண்டும் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் வரலாம். ஐபிஎல் தொடரில் 2020-ஆம் ஆண்டு மீண்டும் சந்திக்கும் வரை இந்த சாதனையை ரெய்னா படைப்பார் என்று ரசிகர்கள் ஆர்வமாக பார்த்துக்கொண்டுள்ளனர்.
எழுத்து- சாஷாங் ஸ்ரீவஸ்தவா
மொழிபெயர்ப்பு- சுதாகரன் ஈஸ்வரன்