மே 30 அன்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்க உள்ள உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட வலிமையான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சில அனுபவ வீரர்களுடன் 2019 உலகக் கோப்பையில் களமிறங்க உள்ள வங்கதேச அணியை சாதரணமாக எண்ணி விட வேண்டாம் என முன்னாள் இந்திய கேப்டன் அணில் கும்ளே மற்ற அணிகளுக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.
வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் சமீபத்தில் நடந்த முத்தரப்பு தொடரில் இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வென்று தொடரை கைப்பற்றியது. இது அவர்களின் நம்பிக்கையை அதிகபடுத்தியுள்ளது. மஷ்ரஃப் மொர்டாஜா தலைமையிலான வங்கதேச அணி உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக முத்தரப்பு தொடரை கைப்பற்றி தங்களின் வருகையை மற்ற உலகக்கோப்பை அணிகளுக்கு அறிவித்துள்ளார். வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் அந்நிய மண்ணில் வங்கதேசம் வென்ற முதல் முத்தரப்பு தொடராக உள்ளது. இது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு மட்டுமல்லாமல் வீரர்களும் மகிழ்ச்சியில் தத்தளித்து வருகின்றனர். மஷ்ரஃப் மொர்டாஜா தலைமையிலான வங்கதேச அணியில் அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் கலந்த கலவையாக உள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில் அந்த அணி இணைந்து ஒன்றாக செயல்படும். அத்துடன் எதிரணி வீரர்களுக்கு கடும் நெருக்கடியை உலகக் கோப்பையில் அளிக்கவல்ல அணியாக வங்கதேசம் திகழ்கிறது.
பயிற்சி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வங்கதேச அணி தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணியை சாதரணமாக எண்ணி தவறு செய்ய வேண்டாம் என முன்னாள் இந்திய பயிற்சியாளர் அணில் கும்ளே மற்ற உலகக் கோப்பை அணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, மஷ்ரஃப் மொர்டாஜா தலைமையிலான வங்கதேச அணி தற்போது மாறுபட்ட வங்கதேச அணியாக திகழ்கிறது. அத்துடன் மஷ்ரஃப் மொர்டாஜா, இவ்வருட உலகக் கோப்பை தனக்கு கடைசி உலகக் கோப்பை தொடராகும் எனவும், அதனால் தனது முழு ஆட்டத்திறனையும் தனது தாய் நாட்டிற்காக அழித்து பெருமையடையச் செய்வேன் என ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார்.
தமீம் இக்பால் ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என அணில் கும்ளே புகழ்ந்துள்ளார். அத்துடன் வங்கதேச அணியில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷகிப் அல் ஹாசன் மற்றும் முஷ்டபிசுர் ரகுமான் ஆகியோரையும் கும்ளே புகழ்ந்து தள்ளியுள்ளார்.
"கிரிக்கெட் நெக்ஸ்ட்" என்ற வலைத்தளத்திற்கு கும்ளே தெரிவித்ததாவது,
வங்கதேச அணியை சாதரணமாக எண்ணி விட வேண்டாம். கடந்த சில வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வங்கதேச அணி வெளிபடுத்தி வருகிறது. மஷ்ரஃப் மொர்டாஜா ஒரு சிறந்த கேப்டன். அணியுடன் கலந்துரையாடி சரியான முடிவை எடுக்கின்றனர். மஷ்ரஃப் மொர்டாஜா வங்கதேச அணயின் கேப்டனாக பொறுப்பேற்ற பின் அந்த அணி புதிய சிறந்த அணியாக தோற்றமளிக்கிறது.
மேலும் வங்கதேச அணிப்பற்றி கும்ளே கூறியதாவது, நாக்-அவுட் சுற்றில்தான் வங்கதேச அணி நுழிலையில் போட்டியை கைவிடுகிறது. இதுவே மற்ற அணிகளுக்கும் வங்கதேசத்திற்கும் உள்ள வேற்றுமை. 2015 & 2017 சேம்பியன் டிராபியில் வங்கதேச அணி வெல்லும் தருவாயில் போட்டியை இழந்து வெளியேறியுள்ளது. உலகக் கோப்பையில் இந்த தவறை மீண்டும் ஒருமுறை செய்யாது என எதிர்பார்க்கப்படுகிறது.
நாக்-சுற்றில் போட்டியை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பற்றி வங்கதேச அணி சற்று பயிற்சி எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் இந்த சுற்றுகளில் வெல்லும் தருவாயில் தோல்வியை தழுவியுள்ளது வங்கதேசம். உலகக் கோப்பையில் இதுவே வங்கதேச அணிக்கு சவாலாக இருக்கும்."