எம்.எஸ்.தோனி 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலும், 2017 ஆம் ஆண்டு ஒருநாள் (ODI) மற்றும் டி20 (T20) போட்டிகளிலிருந்தும் பதவி விலகினார். இவரது தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளைக் குவித்துள்ளது. இவரின் தலைமை காலம் முடிவடைந்தவுடன் இந்திய அணி சரிவைச் சந்திக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டன. எனினும் கோஹ்லி தலைமையில் இந்திய அணி பங்கேற்ற டெஸ்ட் போட்டிகளில் அனைத்து நாடுகளிலும் வெற்றியைச் சுவைத்துள்ளன.
இதுவரை 39 போட்டிகளில் வழிநடத்தியுள்ள இவர் 22 வெற்றிகளைப் பெற்றுள்ளார். வெற்றி சதவிகிதம் 56 ஆகும். கேப்டனாக 4000 ஆயிரம் ரன்களும், 16 சதமும் விளாசியுள்ளார், சராசரி 65 ஆகும்.
தோனி கேப்டனாக இருந்தபோது கோஹ்லியை கேப்டன் பதவிக்குச் சீர்ப்படுத்தியதுபோல், கோஹ்லி பதவிகாலம் முடிவடைவதற்க்குள் அடுத்த கேப்டனை உருவாக்க இதுவே சரியான தருணம்.
விராட் கோஹ்லிக்கு பின்பு இந்திய அணியின் கேப்டனாக வாய்ப்புள்ள 3 வீரர்களைப் பற்றிப் பார்க்கலாம்.
#3 ஸ்ரேயாஷ் ஐயர்
ஸ்ரேயாஷ் ஐயர் கடந்த 3 வருடங்களாக டொமஸ்டிக் (உள்ளுர்) போட்டிகளில் ஏராளமான ரன்களை குவித்துக் கொண்டு வருகிறார். மும்பை அணிக்காக விளையாடி வரும் இவர் இந்திய அணியிலும் தேர்வாகி வருகிறார். இவர் 49 முதல்தர போட்டிகளில் 4148 ரன்களை குவித்துள்ளார், சராசரி 53 ஆகும்.
இந்திய அணிக்குத் தேர்வாகியும் தனது இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள இயலவில்லை, இருப்பினும் டொமஸ்டிக் போட்டிகளில் ரன்களை குவித்து வரும் இவர் அணிக்குத் திரும்புவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் இந்தியா 'ஏ'(A) அணியை வழி நடத்தி வருவது மட்டுமின்றி ஐபில் தொடரில் டிடி (DD) அணியை 2018 ஆம் ஆண்டு வழி நடத்திய அனுபவம் உடையவர். ஆகையால் இவர் இந்திய அணியை கோஹ்லிக்கு பின்பு வழி நடத்த வாய்ப்புள்ளது.
#2 ப்ரீத்வி ஷா
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில், பேட்டிங்கில் அசத்தினார் ப்ரீத்வி ஷா, இந்தியா அணி இவரது தலைமையில் கோப்பை வென்றது குறிப்பிடதக்கது. அது மட்டுமின்றி முதல்தர போட்டிகளிலும் தொடர்ந்து அசத்திய இவர் இந்திய அணியில் விளையாட விரைவில் வாய்ப்பைப் பெற்றார்.
14 முதல்தர போட்டிகளில் பங்கேற்ற இவர் 7 சதங்கள் உட்பட 1418 ரன்களை குவித்தார், சராசரி 56 ஆகும்.
பேட்டிங்கில் திறமை வாய்ந்த இவரைப் பல கிரிக்கெட் வல்லுநர்கள் தற்பொழுதே கோஹ்லிக்கு பின்பு இந்திய அணியை வழி நடத்த தகுதியானவர் எனக் கூறத் தொடங்கிவிட்டனர்.
#1 ஹர்திக் பாண்டியா
ஆரம்ப காலங்களில் சொதப்பி வந்தாலும் தற்பொழுது இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டராகத் திகழ்கிறார் ஹர்திக் பாண்டியா. பேட்டிங்கில் அதிரடி வீரரான இவர் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செய்து வருகிறார். இவரது ஃபீல்டிங் அணிக்குக் கூடுதல் பலமே.
24 வயதான பாண்டியா 40 ஒருநாள் (ODI) மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இருப்பினும் சில வேடிக்கையான தவறுகளைச் செய்து வரும் இவர் விரைவில் அனுபுவம் வாய்ந்த வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவருக்கு முதல் தரப் போட்டிகளில் அணியை வழி நடத்திய அனுபவம் இல்லை எனினும் கோஹ்லி கேப்டன்பதவியிலிருந்து விலகும் தருணத்தில், இவரது அனுபவம் அணியை வழி நடத்திட உதவலாம்.
எழுத்து
ஆதர்வா ஆப்டே
மொழியாக்கம்
கார்த்திக்ராம்