அனைத்து சர்வதேச கேப்டன்களுக்கும் வெளிநாடு சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக தன் வசப்படுத்துவதே முக்கிய இலக்காக இருக்கும். இருப்பினும் பல கேப்டன்களுக்கு இது எட்டா கனியாகவே இருந்து வந்துள்ளது.
இவற்றில் ஆசிய அணிகளை அவற்றின் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினமே, குறிப்பாக இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினம் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்திய ஆடுகளங்களை பொருத்தவரை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும், இதன் காரணமாகவே வெளிநாட்டு வீரர்கள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள திணறுகின்றனர். ஒருசில கேப்டன்கள் இந்திய மண்ணில் வெற்றியை பதிவு செய்திருந்தாலும் பல கேப்டன்கள் ஒரு போட்டியை கூட வெல்லாமல் இருந்து வந்துள்ளனர்.
இவற்றில் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வெல்ல தவறிய 3 தலைசிறந்த கேப்டன்களைப் பற்றி பார்க்கலாம்.
#3 மைக்கேல் கிளார்க் :
போட்டி - 3 தோல்வி - 3 டிரா – 0
2012 - 2013 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணி இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இவற்றில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தினார் மைக்கேல் கிளார்க். இத்தொடரில் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தினார் கிளார்க் அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா அணி தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா அணி தொடக்கம் முதலே சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியது, முதல் போட்டியில் மகேந்திர சிங் தோனி 200 ரன்களை எடுத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார், இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
மூன்றாவது போட்டியின் முன் பட்டின்சன், வாட்சன், ஜான்சன் மற்றும் கவாஜா போன்ற வீரர்கள் ஒழுக்கம் தவறியதன் காரணத்திற்காக அனைவரையும் தலா ஒரு போட்டிக்கு தடை விதித்தனர். இதன் காரணமாக மூன்றாவது போட்டியிலும் படுதோல்வி அடைந்தது ஆஸ்திரேலியா அணி. முதல் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியை வழிநடத்திய மைக்கேல் கிளார்க் காயம் காரணமாக நான்காவது போட்டியில் இருந்து விலகினார், இதையடுத்து நான்காவது போட்டியில் கேப்டன் பதவி ஏற்றார் வாட்சன் இருப்பினும் ஆஸ்திரேலிய அணி நான்காவது போட்டியிலும் தோல்வி அடைந்தது. இத்தொடருக்கு பின்பு திரும்பவும் இந்தியா மண்ணில் ஆஸ்திரேலியா அணியை வழி நடத்தியது இல்லை.
#2 ஸ்டீபன் பிளமிங்:
போட்டிகள் - 5 தோல்வி - 1 டிரா - 4
நியூசிலாந்து அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கேப்டன்களில் ஒருவராவார் ஸ்டீபன் பிளமிங். அணியில் உள்ள விளையாட்டு வீரர்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வருவதே இவரது சிறப்பாகும். இவரது தலைமையிலான நியூசிலாந்து அணி 1999ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.
இவரது தலைமையிலான நியூசிலாந்து அணி மீண்டும் இந்தியாவிற்கு 2003ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டது, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்ற நியூசிலாந்து அணிக்கு இம்முறையும் வெற்றி கிடைக்கவில்லை, இதன்மூலம் 5 போட்டிகளில் நியூசிலாந்து அணியை வழிநடத்திய பிளமிங் ஒரு தோல்வியுடன் 4 போட்டிகளை டிரா செய்தார்.
#1 ரிக்கி பாண்டிங்:
போட்டிகள் - 7 தோல்வி - 5 டிரா - 2
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறந்த கேப்டன்களில் ஒருவராவார் ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான இவர் இரண்டு முறை உலக கோப்பையை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி அதிக போட்டிகளை வென்ற கேப்டனும் இவரே, தலைசிறந்த கேப்டனான ரிக்கி பாண்டிங் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2008 ஆம் ஆண்டு ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலியா கேப்டனாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார், நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றன. முதல் மற்றும் மூன்றாவது போட்டி டிராவில் முடிவடைந்தது.
ரிக்கி பாண்டிங் மீண்டும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்தியா வந்தார். இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகளையும் இழந்தன. இவர் 2004 ஆம் ஆண்டும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.