நடந்தது என்ன?
கரீபியன் பிரிமியர் லீக்கில் (CPL) பங்கேற்க பதிவு செய்துள்ள வீரர்களின் பட்டியலை இன்று (ஏப்ரல் 16) தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது CPL நிர்வாகம். உலகின் வெவ்வேறு நாடுகளிலிருந்து மொத்தமாக 536 வீரர்கள் பதிவு செய்துள்ள இந்த வீரர்கள் பட்டியலில் இந்தியா சார்பாக இர்ஃபான் பதான் மட்டும் பதிவு செய்துள்ளார்.
உங்களுக்கு தெரியுமா...
உலகில் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் டி20 பிரிமியர் லீக்கில் இந்திய வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள். வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் கடந்த காலங்களில் பங்கேற்காததைப் பற்றி பல்வேறு கிரிக்கெட் வள்ளுநர்கள் விவாதங்கள் எழுப்பி வந்தனர்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் இர்ஃபான் பதான் கிரிக்கெட் விவாதக் குழுவில் காண முடிந்ததது. இவர் 2012 வரை இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார். இடதுகை ஸ்விங் பௌலர் இர்ஃபான் பதான் 2007 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்தார். அத்துடன் சில போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்துள்ளார். அனுபவ ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான் உள்ளுர் கிரிக்கெட்டின் கடந்த சீசனில் ஜம்மு காஷ்மீர் அணிக்காக பங்கேற்று வந்தார்.
கதைக்கரு
2019 கரீபியன் பிரிமியர் லீக்-கின் ஏலம் மே 22 அன்று லண்டனில் நடைபெற உள்ளது. அத்துடன் இதே நாளில் கடந்த சீசனில் தங்களது அணியில் விளையாடிய வீரர்களை இந்த சீசனிலும் அதே அணியில் விளையாட தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் வெளியிடப்பட உள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுடன் சேர்த்து மொத்தமாக 20 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். சில முக்கிய வீரர்களான ஜே பி டுமினி, ஷகிப் அல் ஹாசன், அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ரஷீத் கான் ஆகியோருடன் மேற்கிந்தியத் தீவுகளின் வழக்கமான வீரர்களான ஆன்ரிவ் ரஸல், ஷீம்ரன் ஹட்மைர் மற்றும் ஷை ஹோப் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்திய வீரர் ஒருவர் வெளிநாட்டு டி20 தொடரில் பதிவு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். மற்ற வீரர்களை காட்டிலும் இந்திய வீரர் ஒருவர் பிரிமியர் கரீபியன் லீக் தொடரில் பங்கேற்க பதிவு செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இர்ஃபான் பதான் டி20 கிரிக்கெட்டில் மிகவும் அனுபவ வீரராக திகழ்கிறார். 24 சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்றுள்ள இவர் 28 விக்கெட்டுகள் மற்றும் 172 ரன்களை குவித்துள்ளார். பரோடாவைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது), கிங்ஸ் XI பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளுக்காக போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அனுபவ டி20 ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதானை கடைசி இரு ஐபிஎல் தொடரில் எந்த அணியும் கண்டுகொள்ளவில்லை.
இர்ஃபான் பதான் கரீபியன் பிரிமியர் லீக்கில் தேர்வு செய்யப்பட்டால், வெளிநாட்டு டி20 தொடரில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார்.
அடுத்தது என்ன?
அனுபவ ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான் எதிர்வரும் உள்ளுர் கிரிக்கெட் தொடரில் ஜம்மு காஷ்மீர் அணியின் ஆலோசகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 2019 கரீபியன் பிரிமியர் லீக்கில் இர்ஃபான் பதான் தேர்வு செய்யப்பட்டு, தனது ஆட்டத்திறனை சிறப்பாக வெளிபடுத்தினால் மீண்டும் இந்தியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார். இதன்மூலம் மட்டுமே இவரது கிரிக்கெட் வாழ்க்கையை அதிகரிக்க முடியும்.