ஒருநாள் போட்டிகளில் உலக கோப்பை என்பது முக்கியமான தொடராகும். இவற்றில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் தங்களது சிறந்த பங்களிப்பை தருவதே முக்கிய இலக்காக கொண்டு களமிறங்குவார்கள். உலகக் கோப்பையின் முதல் போட்டியில் சதம் அடிப்பது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் முக்கியமான தருணமாகும். பல சர்வதேச போட்டிகளில் கலந்து விளையாடி வந்தாலும் உலக கோப்பையில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் சற்று பதட்டம் அதிகமாகவே இருக்கும். உலக கோப்பை போட்டியில் முதல் முறை விளையாடும் வீரரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை விளையாடிய வீரர்களும் இடம்பெறுவார்கள்.
இதுவரை 16 முறை உலக கோப்பையின் முதல் போட்டியில் சதம் அடிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியை சேர்ந்த கிளென் டர்னர் ஈஸ்ட் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 171 ரன்களை குவித்தார். 1975ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான டென்னிஸ் அமிஸ் இந்திய அணிக்கு எதிராக 137 ரன்களை குவித்தார், கபில்தேவ் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 175 ரன்கள் குவிக்கும் வரை அமிஸின் ரன்களே அதிகபட்சமாக இருந்தது. 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் எந்த ஒரு வீரரும் தனது முதல் போட்டியில் சதம் அடிக்கவில்லை.
1983ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணியை சேர்ந்த அல்லன் லாம்ப் நியூசிலாந்து அணிக்கு எதிராக 102 ரன்களை குவித்தார். டிரவர் முதல் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 110 ரன்களை குவித்தார்.
1987 மற்றும் 1992களில் தலா ஒரு சதம் விளாசப்பட்டது. 1987ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியின் துணை கேப்டன் ஆன மார்ச் இந்திய அணிக்கு எதிராக 110 ரன்கள் குவித்தார். 1992 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணி தனது முதல் போட்டியில் விளையாடியது, இப்போட்டியில் ஜிம்பாப்வே அணியை சேர்ந்த இடது கை வீரரான ஆண்டி பிளவர் இலங்கை அணிக்கு எதிராக 115 ரன்களை குவித்தார்.
1996 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியை சேர்ந்த நாதன் ஆஷ்லே இங்கிலாந்து அணிக்கு எதிராக 101 ரன்களைக் குவித்தார். இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணியைச் சேர்ந்த கேரி கிறிஸ்டன் அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக 188 ரன்கள் குவித்தார், இதன்மூலம் ரிச்சர்ட்ஸ் சாதனையும் உடைத்தார்.
1999 ஆம் ஆண்டு எந்த சதமும் இல்லை. பின்பு 2003ஆம் ஆண்டு 3 சதங்கள் விளாசபட்டன. ஜிம்பாப்வே அணியை சேர்த்த கிரைங் விஷ்மார்ட் நமீபியா அணிக்கு எதிராக 172 விளாசினார். பின்பு நியூஸிலாந்து அணியை சேர்த்த ஸ்காட் ஸ்டிரிஸ் இலங்கை அணிக்கு எதிராக 141 ரன்களை விளாசினார் இதுமட்டுமின்றி பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியை சேர்த்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 143 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிட தக்கது.
2007 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் தலா ஒரு சதம் அடிக்கப்பட்டது. அயர்லாந்து அணியின் ஜெரமி பிரே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 115 குவித்தார். 2011ஆம் ஆண்டு இந்திய அணியின் விராட் கோலி வங்கதேசம் அணிக்கு எதிராக 100 ரன்களை கடந்தார்.
2015ஆம் ஆண்டு மூன்று சதங்கள் அடிக்கபட்டன. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பின்ச் இங்கிலாந்து அணிக்கு எதிராக 135 ரன்களை விளாசினார். பின்பு, தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த டேவிட் மில்லர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 138 ரன்கள் குவித்தார். இறுதியாக, மேற்கிந்திய தீவுகள் அணியின் சிம்மன்ஸ் அயர்லாந்துக்கு எதிராக 102 ரன்கள் குவித்தார் என்பது குறப்பிடத்தக்கது.
இதுவரை முதல் போட்டியில் சதமடித்த வீரர்களின் பட்டியல்.
கிளென் டர்னர் - 171*, நியூசிலாந்து vs ஈஸ்ட் ஆப்பிரிக்கா, 1975.
அல்லன் லாம்ப் - 102, இங்கிலாந்து vs நியூசிலாந்து, 1983.டென்னிஸ் அமிஸ் - 137, இங்கிலாந்து vs இந்தியா, 1975.
டிரவர் சப்பெல் - 110, ஆஸ்திரேலியா vs இந்தியா,1983.
ஜெஃப் மார்ஷ் - 110, ஆஸ்திரேலியா vs இந்தியா,1987.
ஆண்டி ஃபிளவர் - 115*, ஜிம்பாப்வே vs இலங்கை, 1992.
நாதன் ஆஷ்லே - 101, நியூசிலாந்து vs இங்கிலாந்து, 1996.
கேரி கிர்ஸ்டேன் - 188*, தென் ஆப்பிரிக்கா vs அரபு எமிரேட்ஸ், 1996.
கிரைக் விஷார்ட் - 172*, ஜிம்பாப்வே vs நமீபியா, 2003.
ஸ்காட் ஸ்டைரிஸ் - 141, நியூசிலாந்து vs இலங்கை, 2003.
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் - 143*, ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், 2003.
ஜெர்மி பிரே - 115*, அயர்லாந்து vs ஜிம்பாப்வே, 2007.
விராட் கோலி - 100*, இந்தியா vs வங்கதேசம், 2011.
ஆரோன் பின்ச் - 135, ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, 2015.
டேவிட் மில்லர் - 138*, தென்னாப்பிரிக்கா. vs ஜிம்பாப்வே, 2015.
சிம்மன்ஸ் - 102, மேற்கிந்திய தீவுகள் vs அயர்லாந்து, 2015.