இந்தியா மற்றும் நியூசிலாந்திற்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நியூசிலாந்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்று தொடரை சமன் செய்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 200 ரன்களுக்கு மேல் குவித்தனர். அந்த அணியின் தொடக்க வீரர் கோலின் முன்ரோ 72 ரன்கள் அடித்தார். பின்னர் ஆடிய இந்திய அணி, தொடக்கத்திலேயே தவான் விக்கெட்டை இழந்தது. ரோகித் மற்றும் சங்கர் சுதாரித்துக்கொண்டு ஆடினாலும் சங்கர் விக்கெட்டை பரி கொடுத்தவுடன் இந்திய அணியின் சரிவு ஆரம்பமானது. குருநால் மற்றும் கார்த்திக் தங்களால் முடிந்த வரை அணியின் வெற்றிக்காக போராடினார்கள்.
கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இந்திய அணி 11 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த பத்து டி20 தொடர்களில் தோல்வியே காணாத இந்திய அணியின் சாதனைப் பயணம் இந்த தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடருக்குப்பின் ஐசிசி டி20 தரவரிசையில் ஏற்பட்ட மாற்றங்களை காண்போம்.
இன்று ஐசிசி கிரிக்கெட் வாரியம் டி20 தொடருக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. பாகிஸ்தான் அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. தொடரை இழந்த போதிலும் இந்திய அணி தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தானிடம் டி20 தொடரை வென்ற தென்ஆப்பிரிக்கா அணி ஐந்தாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது.
பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி கடைசியாக களம் கண்ட டி20 தொடரை தோற்ற போதிலும் தொடர்ந்து முதலிடம் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கின்றன. ஆனால் தரவரிசையில் இரண்டு அணிகளும் சில புள்ளிகளை இழந்துள்ளது. பாகிஸ்தான் அணி 135 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 124 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 118 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் நியூசிலாந்து அணி ஆறு புள்ளிகளை பெற்றது. ஆகவே 116 புள்ளிகளுடன் தர வரிசையில் ஆறாம் இடத்தில் உள்ளது நியூஸிலாந்து அணி .
ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் குல்தீப் யாதவ் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் இறுதிப்போட்டியில் மட்டுமே விளையாடினார்.
இரண்டாவது போட்டியில் சிறப்பாக பந்துவீசிய குருநால் பாண்டியா 98 ஆயிரத்தில் இருந்து 48வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் சாகல் இந்த தொடரில் சரியாக விளையாடாத காரணத்தினால் பதினோராம் இடத்தில் இருந்து பதினெட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இரண்டாவது போட்டியில் அரை சதம் அடித்த ரோகித் சர்மா ஒன்பதாவது இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். தவான் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார். நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி 63ஆம் இடத்திலிருந்து 65 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.