அந்த அந்த மண்ணில் பிறந்தவர்களுக்கு அவர்களுது தாய்மொழி மீது அதிக அன்பும் பற்றும் இருப்பது இயல்பான ஒன்று தான்.சிலர் மற்ற மொழிகள்மீது அன்பு கொள்வது சகஜம் தான்.அம்மொழியின் அருமை அவர்களுடைய நாகரிகம் இவை எல்லாம் அறிந்த பின்னர் சிலர் வேறொரு மொழிமீது அன்பு கொள்வர்.
ஆனால் நான் இங்குப் பார்க்கப் போகும் நபர் கிரிக்கெட் விளையாட்டினால் மற்றொரு மொழிமீது அன்பு கொண்ட கதை.உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும் அவர் வேறு யாரும் அல்ல தற்போது தமிழர்களால் திருபஜன் சிங் என்று அன்போடு அழைக்கபடும் ஹர்பஜன் சிங்.
அவருக்கும் தமிழுக்கும் உண்டான உறவைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம். நமது இந்திய அணியின் ஜாம்பவான் சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன். ஐபில் போட்டி மூலமாகவே நமக்கெல்லாம் அறிமுகம் ஆனார் திருபஜன் சிங். பத்து வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காகக் களம் இறங்கிவர் ஹர்பஜன். அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்றே சொல்லலாம்.மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாகச் செயல்பட இவரும் ஒரு காரணம்.தனது பந்து வீச்சின் மூலம் பல போட்டிகளை அந்த அணிக்காக வென்று தந்து இருக்கிறார்.சில முறை அதைத் தனது மட்டை வீச்சின் மூலமும் நிரூபித்து இருக்கிறார். ஆனால் திடீர் அதிர்ச்சியாக அந்த அணியிலிருந்து கழற்றி விடப் பட்டார் ஹர்பஜன்.இது அவருக்கு மட்டும் அன்றி ரசிகர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சி.
பதினோராவது ஐபில் போட்டிகளின் ஏலம் ஆரம்பிக்கப் போகும் தருணம் அது.யாரும் எதிர்பாராத விதமாக ஹர்பஜன் தமிழக மக்களுக்குத் தமிழில் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இதுவே திருபஜன் சிங் நம்மைத் தமிழில் சந்திக்கும் முதல் முறை.ஏன் இவ்வாறு பதிவிடுகிறார் என்று எண்ணி கொண்டு இருக்கும் தருணத்தில்.பதினோராவது ஐபில் ஏலம் தொடங்கியது. இரண்டு வருடமாக வேட்டை ஆடாமல் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த சிங்கத்தின் மரு பிரவேசம் அது.ஆம் இரண்டு வருடங்களுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வேட்டை ஆட வந்தது.தங்களுது பழைய அணியிலிருந்து நமது தலைவன் தோனி நமது படை தலைவன் சுரேஷ் ரெய்னா மற்றும் நமது தளபதி ஜடேஜா இவர்கள் முவரையும் தக்க வைத்துக் கொண்டு ஏலத்தில் இறங்கியது. அப்போது தான் யாரும் எதிர்பாராத விதமாகச் சென்னை அணியினால் ஏலம் எடுக்கப் பட்டார் ஹர்பஜன்.மும்பை அணி தனது தக்க வைப்பு அட்டையை(RTM) பயன் படுத்தாமல் போனதால் சென்னை அணிக்குச் சொந்தம் ஆனார் ஹர்பஜன்.இப்பொழுது புரிந்திருக்கும் அந்தத் தமிழ் பொங்கல் நல்வாழ்த்துகள் பற்றி.
சென்னை அணியால் எடுக்கப் பட்டபின் வணக்கம் தமிழ்நாடு இனி அந்த மண்ணு தங்க மண்ணு என்னை வைக்கும் சிங்கமுண்ணு எனப் பதிவிட்டு அசத்தினர் திருபஜன்.பின்பு மார்ச் மாதம் தலைவர் வசனத்தில் மரு பதிவு நான் வந்துடேனு சொல்லு என்று கூறி நமது மாஸ் ஹீரோபோல் மாசாக வந்து சேர்ந்தார் ஹர்பஜன்.பின்னர் ஒவ்வொரு வெற்றி தோல்வியின் போதும் அதற்கு ஏற்ற வசனங்களோட தமிழில் டீவீடித்தார் ஹர்பஜன்.வேட்டை ஆட வந்த சென்னை மூன்றாவது முறையாகக் கோப்பையைக் கைபற்றித் தாங்கள் சிங்கங்கள் தான் என்று நிரூபித்தனர்.ஆனால் அத்துடன் நிற்கவில்லை அவர் தமிழ் மேல் கொண்ட அன்பு.போட்டிகள் முடிந்த பின்னரும் தீபாவளி வாழ்த்து மற்றும் சில குறள்கள் என்று தமிழிலே வாழ்ந்தார் திருபஜன்.தற்பொழுது பன்னிரண்டாவது தொடருக்கான வீரர்கள் தக்க வைப்பில் சென்னை அணியால் மீண்டும் தக்க வைக்கப் பட்டார் ஹர்பஜன் சிங்.அதற்கும் தனது ஸ்டைல்லில் பதிவிட்டார் ஹர்பஜன்.தலைவர் தளபதி வசனங்களைச் சேர்த்து மிரட்டினார் திருபஜன் சிங்.
குறிப்பு:அவரது தமிழ் வார்த்தைகள் அவரது தமிழ் ரசிகர் சரவணன் மூலம் வந்தாலும் அவர் தமிழ் மேல் கொண்ட அன்பு அவரது இதயத்தில் இருந்தே வந்தது.
அந்த டிவிட் வருமாறு: