வருடத்திற்கு ஒருமுறை கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் தொடர் ஒன்று இருக்கிறது என்றால் அது இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் தான். இந்த ஐபிஎல் தொடரானது வருடம் தோறும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி, கிட்டத்தட்ட 60 நாட்களுக்கும் மேலாக நடைபெறும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த ஐபிஎல் தொடர் நடைபெறும் 60 நாட்களிலுமே பெரும்பாலும் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடைபெறாது என்பது தான். ஏனெனில் அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாட வந்துவிடுவார்கள்.
ஒவ்வொரு அணிக்கும் குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படும். அந்த தொகைக்குள் 20 முதல் 25 வீரர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம். நமது இந்திய அணியின் நம்பர்-4 இடத்தை நிரப்பியுள்ள அம்பத்தி ராயுடு, இந்த ஐபிஎல் தொடரை பயன்படுத்தி தான் இந்திய அணியில் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த அணிகளாக விளங்குவது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தான். இவ்வாறு சொல்வதற்கு முக்கிய காரணம் இந்த இரண்டு அணிகள் தான் தலா மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நம்பர்-1 அணியாக திகழ்கிறது. இவ்வாறு மிகச் சிறந்த அணியாக திகழ்வதற்கு ஒரு சில வீரர்கள் முக்கிய பங்காக விளங்குகின்றனர். அவர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய தூணாக இருப்பவர் தோனி தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது என்றால் மைதானத்தில் தமிழக ரசிகர்களின் கூட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. பிற மாநிலத்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும், தமிழகத்திற்காக விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் ஆதரவளித்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் தோனி தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களின் பாதி ரசிகர்கள், தோனியின் ரசிகர்களாக தான் இருக்கிறார்கள். இவர் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 175 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த 175 போட்டிகளிலுமே தோனி தான் கேப்டன். இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் ஒரு அணிக்கு அதிக முறை கேப்டனாக இருந்தவர்களின் பட்டியலில் தோனி முதலிடத்தில் உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்ற அதற்கு முக்கிய காரணம் தோனி தான். இந்த ஐபிஎல் தொடரில் தோனி 16 போட்டிகளில் 455 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) ரெய்னா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய தூண்களாக விளங்குபவர்களில் இரண்டாவது வீரர் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பல வெற்றிகளில் ரெய்னா முக்கிய பங்காக விளங்குகிறார். பல போட்டிகளில் இறுதிவரை விளையாடி அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். இவர் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 176 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவர் ஐபிஎல் தொடரில்அடித்துள்ள மொத்த ரன்கள் 4985 ஆகும். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் ரெய்னா. அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் இரண்டு முறை சதம் அடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், ரெய்னா 15 போட்டிகளில் 455 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.