ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த 11 வீரர்கள்!!

Chennai Super Kings Team
Chennai Super Kings Team

ஐபிஎல் தொடரானது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடமாக இந்தியாவில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் ஐபிஎல் தொடரானது வருகின்ற மார்ச் 23 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறக்க உள்ள, சிறந்த 11 வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.

#1) டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ( ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா )

Ambati Rayudu
Ambati Rayudu

கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, சிறப்பான தொடக்க ஜோடி தான். தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த அம்பத்தி ராயுடு, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஷேன் வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகிய இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடினர்.

இவர்கள் இருவரும் அனைத்து போட்டிகளிலுமே சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வந்தனர். அதுவும் குறிப்பாக அம்பத்தி ராயுடு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதன் மூலம் தற்போது இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவதாக களமிறங்கும் சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது சிறப்பான விளையாட்டு என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#2) மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ( மகேந்திர சிங் தோனி மற்றும் கேதார் ஜாதவ் )

Ms Dhoni
Ms Dhoni

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலை சிறந்த அணியாக திகழ்வதற்கு முக்கிய காரணம் மகேந்திர சிங் தோனி தான். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மிகச் சிறப்பான முறையில் வழிநடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி தனி ஒருவராக போராடி பல போட்டிகளில் வெற்றி பெற்று தந்துள்ளார். கேதார் ஜாதவ் சமீபகாலமாக மிக சிறப்பாக விளையாடி வருகிறார். தொடக்கத்தில் விக்கெட்டுகள் இழந்தாலும், மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்க கூடியவர். தோனி மற்றும் கேதார் ஜாதவ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர், வலுவாக இருப்பதற்கு முக்கியக் காரணமாக உள்ளனர்.

#3) ஆல்ரவுண்டர்கள் ( டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, மிட்சல் சான்ட்னர் )

Dwayne Bravo
Dwayne Bravo

டுவைன் பிராவோ மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் சிறப்பாக விளையாட கூடியவர்கள். அதுவும் குறிப்பாக ரவீந்திர ஜடேஜா பீல்டிங்கில் அசத்துவார். அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய டெத் பவுலராக திகழ்ந்து வருகிறார் டுவைன் பிராவோ. மிட்சல் சான்ட்னர் பேட்டிங்கில் மட்டுமின்றி சுழலிலும் அசத்துவார்.

#4) பந்து வீச்சாளர்கள் ( தீபக் சஹார், மோகித் சர்மா, லுங்கி நெகிடி )

Lungi Ngidi
Lungi Ngidi

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தீபக் சஹார், சிறந்த இளம் பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். சென்னை அணியில் கடந்த வருடம் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். மோகித் சர்மா மற்றும் லுங்கி நெகிடி ஆகிய இருவரும் சென்னை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களாக திகழ்ந்து வருகின்றனர். மோகித் சர்மா இதுவரை மொத்தம் 57 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, அதில் 90 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Fambeat Tamil