சௌராஷ்டிர டி20 பிரிமியர் லீக்கில் பங்கேற்க உள்ள புஜாரா

Cheteshwar Pujara to Feature in the Saurashtra Premier League
Cheteshwar Pujara to Feature in the Saurashtra Premier League

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் செட்டிஸ்வர் புஜாரா 2019 சௌராஷ்டிர பிரிமியர் லீக்கில் பங்கேற்க உள்ளார். இந்த டி20 தொடர் மே 14 அன்று தொடங்க உள்ளது. 5 அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடர் ராஜ்கோட்-டில் உள்ள சௌராஷ்டிர கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

முதன் முதலாக நடைபெறவுள்ள சௌராஷ்டிர பிரிமியர் லீக்கில் சோரத் லையன்ஸ், ஜாலாவாட் ராயல்ஸ், ஹலார் ஹீரோஸ், கோஹீல்வார்ட் கிளாடியேட்டர்ஸ் மற்றும் கட்ச் வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த 5 அணிகளில் எந்த அணியில் புஜாரா பங்கேற்பார் என்பதை மே 9 அன்று அணியின் நிர்வாகிகள் மற்றும் சௌராஷ்டிர பிரிமியர் லீக் தலைமை இயக்குனர்கள் முடிவு எடுப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொடரின் இறுதிப் போட்டி மே 24 அன்று நடைபெற உள்ளது. இதற்கு ஒரு நாள் முன்பு புஜாரா கவுண்டி சேம்பியன் ஷீப்பில் "யார்க்ஷர்" அணிக்காக பங்கேற்க இங்கிலாந்து செல்ல உள்ளார். இதனால் அவர் இந்த டி20 லீக்கில் பங்கேற்பது சந்தேகமாகவே இருந்தது. ஆனால் தற்போது புஜாரா சௌராஷ்டிர பிரிமியர் லீக்கில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நட்சத்திர வீரர் இந்த டி20 லீக்கில் பங்கேற்பதன் மூலம் அந்த டி20 தொடரின் புகழ் இந்தியா முழுவதும் சற்று பிரபலமடையும்.

உள்ளுர் டி20 கிரிக்கெட்டில் அசத்தும் புஜாரா

சௌராஷ்டிர கிரிக்கெட் அசோசியேசன் புஜாரா டி20 லீக்கில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது. அனைவருக்கும் பிடித்தமான கிரிக்கெட் வீரர் புஜாரா சௌராஷ்டிர டி20 லீக்கில் பங்கேற்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. புஜாரா சௌராஷ்டிர பிரிமியர் லீக்கிற்கு பிறகு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் தொடரில் யார்கஷைர் அணிக்காக பங்கேற்க இங்கிலாந்து செல்ல உள்ளார். இவர் உள்ளூர் டி20 தொடரான ஷையத் முஷ்டாக் அலி கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த தொடரில் 1 சதம் மற்றும் மூன்று முறை 30+ ரன்களை விளாசியுள்ளார். புஜாரா இந்த ஆட்டத்தை சௌராஷ்டிர பிரிமியர் லீக்கிலும் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அவரது டி20 ஆட்டத்திறன் உலகம் முழுவதிற்கும் தெரிய வரும். அத்துடன் தனது சக வீரர்களுக்கு இவரது அனுபவம் கை கொடுக்கும் வகையில் இருக்கும்.

" சௌராஷ்டிர பிரிமியர் லீக்கின் முதல் டி20 தொடரில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன. தற்போது செட்டிஸ்வர் புஜாரா இந்த டி20 தொடரில் பங்கேற்க உள்ளார். சௌராஷ்டிர டி20 தொடரில் புஜாரா பங்கேற்பது பெரிதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த டி20 தொடருக்குப் பிறகு கவுண்டி கிரிக்கெட் தொடரில் புஜாரா பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. வேலைப்பளுவை சரியாக கையாண்டு சௌராஷ்டிர பிரிமியர் லீக்கில் புஜாரா பங்கேற்க ஒப்புக் கொண்டதற்கு மிக்க நன்றி"

புஜார் கவுண்டி கிரிக்கெட்டில் யார்க்ஷைர் அணிக்காக 3 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். 2019 உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பயிற்சி பெறும் விதமாக புஜாரா கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட உள்ளார். இவருடன் மேலும் 6 இந்திய கிரிக்கெட் வீரர்கள் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க உள்ளனர். அஜின்க்யா ரகானேவும் கவுண்டியில் ஆர்வம் காட்டி விளையாட செல்ல உள்ளார்.

Quick Links

App download animated image Get the free App now