கிறிஸ் கெய்ல் ஒரு அணியில் விளையாடும்போது அந்த அணியின் ரசிகர்களை மிகவும் எளிதாகக் கவர்ந்துவிடுவார். ஜமைக்கா நாயகன் கெயில் டி20 கிரிக்கெட் என்றால் பேட்டிங்கில் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி உலகின் அணைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் தம் வசம் வைத்துள்ளார்.இவர் ஆடுகளத்தில் செய்யும் பேட்டிங்கும் , வெற்றிக் கொண்டாட்டங்களும் அணைத்து வயதினரும் ரசிக்கும்படி இருக்கும். அதனால் இவர் "யுனிவர்சல் பாஸ்" என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.கிறிஸ் கெய்ல் ஒரு "டி20 உலகின் ராஜா" என்பது சந்தேகமில்லா உண்மையாகும். உலகில் புதிதாக டி20 லீக் தொடர் தொடங்கினால் அனைவரும் கேட்பது " கிறிஸ் கெயில் எந்த அணியில் விளையாடப்போகிறார்.....? என்பதே ஆகும்.
கடந்த சனிக்கிழமை (நவம்பர் 17) உலகின் 10 வேறுபட்ட டி20 தொடர்களில் விளையாடும் ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். தற்பொழுது தென்னாப்பிரிக்காவில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள எம்ஜான்ஸி என்னும் டி20 தொடரில் ஜோஸி ஸ்டார்ஸ் என்னும் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டு 10 வேறுபட்ட டி20 தொடரில் விளையாடும் ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அந்த டி20 தொடரின் முதல் போட்டியில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர்களை விளாசி 23 ரன்களில் 121.05 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆட்டமிழந்தார். ஆனால். அப்போட்டியில் இவருடைய அணி நெல்சன் மண்டேலா பே ஜயன்ட்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது.
கெயில் ஐபிஎல் ( கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் XI பஞ்சாப் ) பிக்பேஸ் லீக் ( மெல்போர்ன் ரெனிகெட்ஸ், சிட்னி தண்டர்ஸ் ) , கரேபியன் பிரிமியர் லீக் ( ஜமைக்கா தலவாஸ் , செயின்ட் கிட்ஸ் அன்டு நிவிஸ் பேட்ரியாட்ஸ் ) , பாகிஸ்தான் சூப்பர் லீக் ( லாகுர் கலந்தர்ஸ், கராச்சி கிங்ஸ் ) , வங்கதேச பிரிமியர் லீக் ( பாரிசல் பர்னர்ஸ் , தாக்கா கிளாடியேட்டர்ஸ் , சிட்டகாங் வைக்கிங்ஸ் , ராங்பூர் ரைடர்ஸ் ) , ராம் ஸ்லாம் டி20 ( ஹைவெல் லயன்ஸ் ) , டி20 பிளாஸ்டர் ( சோமர்செட் ) , குளோபல் டி20 கனடா ( வென்குவர் நைட்ஸ் ) , ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக் ( பல்க் லெஜன்ட்ஸ் ) , எம்ஜான்ஸி டி20 லீக் ( ஜோஸி ஸ்டார்ஸ் ) ஆகிய உலகெங்கும் நடக்கும் டி20 தொடர்களில் கலந்து கொண்டு வருகிறார்.
இது மட்டுமல்லாமல் தற்போது நடைமுறையில் இல்லாத டி20 தொடரான கே.ப்.சி டி20 - மாநில போட்டிகளிலும் ( வெஸ்டர்ன் ஆஸ்த்ரெலியா ) , ஸ்டேன் பேங்க் டி20 தொடர் - ஜிம்பாப்வே ( மட்டபிலின்ட் டஸ்கர்ஸ் ) போட்டிகளிலும் விளையாடியுள்ளார் . கெயில் டால்பின்(ராம் ஸ்லாம் டி20) அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டு பிறகு காயத்தினால் வெளியேறினார். இதேபோல் யுவா நெக்ஸ்ட்( இலங்கை பிரிமியர் லீக் ) என்ற அணியிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஆனால் அந்த டி20 லீக் தடை செய்யப்பட்டதால் டி20 தொடர் நிறுத்தப்பட்டது. கேப் வுன் நைட் ரெய்டர்ஸ் ( குளோபல் டி20 தொடர் திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது ) ஆகிய அணியிலும் இருந்துள்ளார்.இவர் 2008 ல் ஸ்டேன் ஃபோர்ட் டி20 தொடரில் ஸ்டேன் ஃபோர்ட் சூப்பர் ஸ்டார் அணியில் விளையாடியுள்ளார்.
இவருடைய கிரிக்கெட் வாழ்வில் அதிகம் டி20 தொடரில்தான் கழித்துள்ளார். டி20 போட்டிகளுள்ள வரை இவரது புகழ் என்றும் அழியாது.
எழுத்து : அஸ்வன் ராவ்
மொழியாக்கம் : சதீஸ்குமார்