கிரிக்கெட்டில் ஆடவர் மற்றும் மகளிர் அணி கலந்து விளையாடினால், ஆடும் XI வீரர் வீராங்கனைகள் எப்படி இருக்கும்

விராட் கோஹ்லி மற்றும் மித்தாலி ராஜ்
விராட் கோஹ்லி மற்றும் மித்தாலி ராஜ்

இந்திய மகளிர் அணியின் சமீபத்திய அசுர வளர்ச்சி, வருங்கால மகளிருக்கு ஒரு எடுத்துக்காட்டு. 2017ம் ஆண்டு நடைபெற்ற மகளிருக்கான உலகக்கோப்பையில் இறுதி போட்டி வரை சென்று இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்தது. முன்பெல்லாம் தொலைக்காட்சியில் மகளிர் போட்டியை காண முடியாது. ஆனால் தற்போது தொலைக்காட்சி உரிமம், ஸ்பான்சர்ஷிப் என்று வளர்ந்துள்ளது. ஐசிசியும் அவர்கள் பங்கிற்கு ஊக்கப்படுத்தி வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் நியூஸிலாந்து தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் என இருதரப்பினரும் விளையாடி வருகின்றனர். ஐசிசி அதன் கால அட்டவணையில் மகளிர் போட்டிக்கு முன்னுரிமை கொடுத்து அவர்கள் விளையாடும் போட்டி முன்னேயும் ஆடவர் போட்டி பின்னேயும் ஒரு மைதானத்தில் நடக்க ஏற்பாடு செய்துள்ளது. இதனால் மகளிர் போட்டியை காண வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஒரு கற்பனையாக டென்னிஸ் விளையாட்டை போல் கிரிக்கெட்டில் ஆடவர் மற்றும் மகளிர் அணி கலந்து விளையாடினால், ஆடும் XI வீரர் வீராங்கனைகள் எப்படி இருக்கும் என இப்பதிவில் காணலாம்.

#1 ரோஹித் ஷர்மா

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

இந்திய அணியின் தற்போதைய சிறந்த தொடக்க வீரர். விராட் கோஹ்லிக்கு பதில் கடைசி இரண்டு ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவை வழிநடத்தினார். இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அரைசதம் விளாசி அணியின் வெற்றியில் பங்கு வகித்தார். நியூஸிலாந்து வீரர்களின் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மற்ற வீரர்கள் கஷ்டப்பட்டாலும் , ரோஹித் சமாளித்து ஆடினார்.

#2 ஸ்மிருதி மந்தனா

ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனா

தற்போதைய இந்திய மகளிர் அணியின் நம்பிக்கை நட்சத்திரம், தொடக்க வீராங்கனை மற்றும் ஒருநாள் அரங்கில் தற்போதைய பட்டியலில் முதல் இடம் வகிக்கக்கூடியவர். இறுதியாக விளையாடிய 10 இன்னிங்சில் 567 ரன்களுடன் சராசரியாக 81 ரன்கள் எடுத்துள்ளார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் 105 மற்றும் 90* என எடுத்து இந்திய அணி தொடரை வெல்ல காரணமாக இருந்தவர். ரோஹித் ஷர்மாவும் ஸ்மிருதி மந்தனாவும் தொடக்கம் இறங்கினால் கண்களுக்கு விருந்தாய் அமையும்.

#3 விராட் கோஹ்லி (கேப்டன்)

விராட் கோஹ்லி
விராட் கோஹ்லி

இந்த இடத்திற்கு இவரை விட்டால் வேறு எவரும் பொருத்தமாக இருக்காது என அனைவரின் மனதிலும் ஆணி அடித்ததுபோல் பதித்துவிட்டார். நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய 3 ஒருநாள் போட்டியிலும் ஒரு சதம் கூட எடுக்கவில்லை. இருந்தாலும் இந்த வருடத்தின் முதல் மாதத்திலேயே 300 ரன்களை கடந்துவிட்டார். இவர் மேல் இருக்கும் எதிர்பார்ப்பே இவர் எவ்வளவு அடித்தாலும் இந்திய ரசிகர்களுக்கு போதவில்லை. இந்த அணியை வழிநடத்த இவரே சரியான வீரராக இருப்பார்.

#4 மித்தாலி ராஜ் (துணை கேப்டன்)

மித்தாலி ராஜ்
மித்தாலி ராஜ்

1999ம் ஆண்டு இந்திய மகளிர் அணியில் இடம் பிடித்து முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். தற்போது ஆண்கள் அணியில் இருக்கும் ஒரு வீரர் கூட அப்போது இந்திய அணிக்காக விளையாடியதில்லை. 200 போட்டிகளில் விளையாடியுள்ள மித்தாலி ராஜ், 6622 ரன்களும் சராசரியாக 51.33 ரன்களும் எடுத்துள்ளார். இதில் 7 சதமும் 52 அரை சதமும் அடங்கும். 200 போட்டிகள் விளையாடிய முதல் மகளிர் என்ற பெருமையும் பெற்றவர். இந்த கலப்பு அணிக்கு இவரை துணை கேப்டனாக நியமிக்கலாம்.

#5 ஹர்மன் பிரீட் கவுர்

ஹர்மன் பிரீட் கவுர்
ஹர்மன் பிரீட் கவுர்

தோனிக்கு நிகராக கருதப்படும் வீராங்கனை. அவரை போன்று இவரும் 7ம் எண் ஜெர்சி அணிய கூடியவர், நல்ல அடித்தளம் அமைத்து ஸ்கோரை உயர்த்த கூடியவர், இறுதி ஓவரில் பந்தை பௌண்டரிக்கு விலாசக்கூடியவர். 2017ம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பையின் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 171* ரன்கள் எடுத்து இந்திய அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றார். இறுதிபோட்டியிலும் நன்றாக விளையாடிய கவுர் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததால், வெற்றி வாய்ப்பை இழந்தது. நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் விளையாடிய கவுர், 24 ரன்கள் எடுத்தார்.

#6 மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்)

மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி

உலகில் யாரும் இவரைப்போல் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது என பெயர் வாங்கிவிட்டார் தோனி. இவர் ஸ்டம்ப் பின்னால் நின்று சுழற் பந்து வீச்சாளர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கக்கூடியவர். இதற்கான பலனை ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் நாம் பார்த்தோம். நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் நீஷமை ரன் அவுட் செய்த முறை அனைவரையும் கவர்ந்தது. ஏற்கனவே மன்தானா இப்பட்டியலில் இருந்தாலும் விக்கெட் கீப்பிங்கில் தோனியே சிங்கம்.

#7 ஹர்டிக் பாண்டியா

ஹர்டிக் பாண்டியா
ஹர்டிக் பாண்டியா

சர்ச்சைகளில் சிக்கி ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார் பாண்டியா. அணிக்கு திரும்பிய உடனே இவருக்கான பங்கை அதிரடியாய் பதிவிட்டார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் 22 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து இந்திய அணி நல்ல ஸ்கோரை எடுக்க விஜய் மற்றும் ராயுடுவுடன் உதவினார். பந்துவீச்சில் ரோஸ் டெய்லரின் முக்கிய விக்கெட்டை எடுத்தார்.

#8 ஜுலன் கோஸ்வாமி

ஜுலன் கோஸ்வாமி
ஜுலன் கோஸ்வாமி

2002ம் ஆண்டு கிரிக்கெட்டில் காலடி எடுத்துவைத்த ஜுலன் கோஸ்வாமி, 174 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று 210 விக்கெட்களை சாய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த மகளிருக்கான பட்டியலில் முதல் இடம் வகிக்கிறார். இவரது எகானமி ரேட் வெறும் 3.25. நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை சாய்த்தார்.

#9 முகமது ஷமி

முகமது ஷமி
முகமது ஷமி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் மீண்டும் அணியில் இடம் பிடித்த முகமது ஷமி, நியூஸிலாந்து ஒருநாள் தொடரின் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி, நியூஸிலாந்து வீரர்களின் தொடக்க ஆட்டக்கார்களை திக்குமுக்கு ஆடச்செய்தார். இத்தொடரில் 9 விக்கெட் வீழ்த்திய ஷமி, எகானமி ரேட்டாக 15.33 வைத்திருந்தார். பும்ராஹ் மற்றும் புவனேஸ்வர் குமார் இவரை விட சிறப்பாக பந்துவீசினாலும், நியூஸிலாந்து ஒருநாள் தொடரின் செயல்பாட்டை வைத்து இப்பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

#10 யூசுவெந்திர சஹால்

யூசுவெந்திர சஹால்
யூசுவெந்திர சஹால்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டியில் விளையாடாதபோதிலும் மூன்றாவது போட்டியில் களமிறங்கிய யூசுவெந்திர சஹால், ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்களுக்கு எமனாய் அமைந்தார். 42 ரன்கள் வழங்கி 6 விக்கெட் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார். நியூஸிலாந்து அணிக்கு எதிராகவும் சிறப்பாக பந்து வீசிய சஹால், 4 போட்டிகளில் 9 விக்கெட்களை வீழ்த்தினார். சுழற் பந்து வீச்சாளர்களை சிறப்பாக விளையாடக்கூடிய டாம் லாதமின் விக்கெட்டை 3 முறை எடுத்தார்.

#11 பூனம் யாதவ்

பூனம் யாதவ்
பூனம் யாதவ்

நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியாவிற்கு அதிக விக்கெட் எடுத்த வீராங்கனை. 3 போட்டிகளில் 6 விக்கெட்களை எடுத்தார். 38 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பூனம் 59 விக்கெட்கள் எடுத்துள்ளார். இவரது லெக் ஸ்பின் பந்துவீச்சு சஹாலுக்கு துணையாக இருக்கும்.

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications