#5 ஹர்மன் பிரீட் கவுர்
தோனிக்கு நிகராக கருதப்படும் வீராங்கனை. அவரை போன்று இவரும் 7ம் எண் ஜெர்சி அணிய கூடியவர், நல்ல அடித்தளம் அமைத்து ஸ்கோரை உயர்த்த கூடியவர், இறுதி ஓவரில் பந்தை பௌண்டரிக்கு விலாசக்கூடியவர். 2017ம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பையின் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 171* ரன்கள் எடுத்து இந்திய அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றார். இறுதிபோட்டியிலும் நன்றாக விளையாடிய கவுர் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததால், வெற்றி வாய்ப்பை இழந்தது. நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் விளையாடிய கவுர், 24 ரன்கள் எடுத்தார்.
#6 மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்)
உலகில் யாரும் இவரைப்போல் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது என பெயர் வாங்கிவிட்டார் தோனி. இவர் ஸ்டம்ப் பின்னால் நின்று சுழற் பந்து வீச்சாளர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கக்கூடியவர். இதற்கான பலனை ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் நாம் பார்த்தோம். நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் நீஷமை ரன் அவுட் செய்த முறை அனைவரையும் கவர்ந்தது. ஏற்கனவே மன்தானா இப்பட்டியலில் இருந்தாலும் விக்கெட் கீப்பிங்கில் தோனியே சிங்கம்.
#7 ஹர்டிக் பாண்டியா
சர்ச்சைகளில் சிக்கி ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார் பாண்டியா. அணிக்கு திரும்பிய உடனே இவருக்கான பங்கை அதிரடியாய் பதிவிட்டார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் 22 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து இந்திய அணி நல்ல ஸ்கோரை எடுக்க விஜய் மற்றும் ராயுடுவுடன் உதவினார். பந்துவீச்சில் ரோஸ் டெய்லரின் முக்கிய விக்கெட்டை எடுத்தார்.
#8 ஜுலன் கோஸ்வாமி
2002ம் ஆண்டு கிரிக்கெட்டில் காலடி எடுத்துவைத்த ஜுலன் கோஸ்வாமி, 174 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று 210 விக்கெட்களை சாய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த மகளிருக்கான பட்டியலில் முதல் இடம் வகிக்கிறார். இவரது எகானமி ரேட் வெறும் 3.25. நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை சாய்த்தார்.
#9 முகமது ஷமி
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் மீண்டும் அணியில் இடம் பிடித்த முகமது ஷமி, நியூஸிலாந்து ஒருநாள் தொடரின் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி, நியூஸிலாந்து வீரர்களின் தொடக்க ஆட்டக்கார்களை திக்குமுக்கு ஆடச்செய்தார். இத்தொடரில் 9 விக்கெட் வீழ்த்திய ஷமி, எகானமி ரேட்டாக 15.33 வைத்திருந்தார். பும்ராஹ் மற்றும் புவனேஸ்வர் குமார் இவரை விட சிறப்பாக பந்துவீசினாலும், நியூஸிலாந்து ஒருநாள் தொடரின் செயல்பாட்டை வைத்து இப்பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
#10 யூசுவெந்திர சஹால்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டியில் விளையாடாதபோதிலும் மூன்றாவது போட்டியில் களமிறங்கிய யூசுவெந்திர சஹால், ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்களுக்கு எமனாய் அமைந்தார். 42 ரன்கள் வழங்கி 6 விக்கெட் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார். நியூஸிலாந்து அணிக்கு எதிராகவும் சிறப்பாக பந்து வீசிய சஹால், 4 போட்டிகளில் 9 விக்கெட்களை வீழ்த்தினார். சுழற் பந்து வீச்சாளர்களை சிறப்பாக விளையாடக்கூடிய டாம் லாதமின் விக்கெட்டை 3 முறை எடுத்தார்.
#11 பூனம் யாதவ்
நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியாவிற்கு அதிக விக்கெட் எடுத்த வீராங்கனை. 3 போட்டிகளில் 6 விக்கெட்களை எடுத்தார். 38 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பூனம் 59 விக்கெட்கள் எடுத்துள்ளார். இவரது லெக் ஸ்பின் பந்துவீச்சு சஹாலுக்கு துணையாக இருக்கும்.