நவம்பரில் நடந்த கிரிக்கெட் காமெடிகள்..!

Pakistan women running in danger area
Pakistan women running in danger area

பல அணிகள் பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவருகிறது . அந்த தொடர்களில் சில காமெடி களேபரங்களும் அரங்கேறியுள்ளன, அதைப்பற்றிய நகைச்சுவையான ஒரு தொகுப்பை இங்கு காணலாம் .

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்:

ஐசிசி பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரை மேற்கு இந்திய தீவுகள் நடத்தியது. இதில் ஆஸ்திரேலிய அணியினர் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் அரையிறுதியில் தோற்று வெளியேறியது.

விறுவிறுப்பாக நடந்தேறிய இந்த தொடரில் நகைச்சுவையான ஒரு தருணமும் அரங்கேறியது , அதுவும் சுவாரிஸ்யமான இந்தியா பாகிஸ்தான் போட்டியில் . எப்போதும் போல அனல் பறக்க ஆட்டம் ஆரம்பமானது பாகிஸ்தான் மங்கையர் இந்திய பெண்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ரன்கள் எடுக்க திணறினர் .

அந்த தருணத்தில் ஒரு குரல் " ஓடி ஓடி உழைக்கணும் , ஒவ்வொரு ரன் ஆக சேர்க்கணும் ..." என பாடல் தோனியில் நிலைமையை வெளிப்படுத்தினார் பாக்கிஸ்தான் மங்கையர் கேப்டன் .

"தலைவியின் கட்டளையே சாசனம் " என்று கூறிக்கொண்டு ஒன்று, இரண்டாக ஓடி ஓடி ரன்களை சேர்த்தனர். அவர்களின் கடின உழைப்பால் அணியின் ஸ்கோர் 130-ஐ தாண்டியது . "உழைப்பே உயர்வுதரும்" அந்த மொமெண்ட் .....

பின்பு இரண்டாவதாக பேட்டிங் செய்ய வந்தனர் இந்தியா மங்கைகள் . பதட்டமான அந்த தருணத்தில் போட்டி தொடங்க ஆயுத்தமானது . திடீரென்று ஸ்கோர் போர்டில் ஒரு அதிர்ச்சி ..! இந்தியாவின் ஸ்கோர் 10, ஆனால் ஒரு பந்து கூட வீசவில்லை .

பாகிஸ்தான் மங்கையர் "என்னடா இது கொடுமை ., நாங்க கஷ்ட பட்டு ரன் ஓடி ஓடி எடுத்தோம் .,ஆனா இவங்களுக்கு ஓடாமையே ரன் கொடுக்கிறிங்க, இதெல்லாம் ரொம்ப அநியாயம், சார்". "இதுக்கு நீங்க பதில் சொல்லியே தீரணும் ...ஆமா .."

உடனே நடுவர் "நீங்க ஓடி ஓடி ரன் எடுத்து தப்பில்ல , ஆனா பளிங்கு மாதிரி இருந்த பிட்ச்க்கு நடுவுல ஓடி ஓடி இப்படி பிராண்டு வைச்சுடீங்களே , அதுக்கு தான் இந்த அபராதம்., இனிமே ஓடுன ஓரமா ஓடிப்போங்க ...ஓகே .. "

கடைசியில் இந்திய அணி எளிதில் வெற்றிபெற்றது. இது எப்படி தெரிமா இருக்கு .. நீ கேள ..."முயலும் , ஆமையும் ஓடுன கதையால்ல இருக்கு "

"வேகம் மட்டும் இருந்த பத்தாது விவேகமும் வேணும் " இது பாகிஸ்தான் மங்கையர்க்கு .

மீண்டும் பாகிஸ்தான்: .

இது பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே ஆன டெஸ்ட் தொடர். இத்தொடரில் ஒரு போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் அசார் அலி, அருமையாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அந்த தருணத்தில் தான் இந்த நிகழ்வு நடந்தது . மேலே அவர்களின் ஓடி ஓடி ரன்கள் எடுத்தனர் . ஆனால் இங்கு இவரோ "அட யாருப்பா ரன்லாம் ஓடி எடுக்கறது., அசிங்கமா " என்பது போல ஒரு பந்தை அடித்துவிட்டு அது எப்படியும் பௌண்டரி போய்விடும் என்று அசால்ட் ஆகா நடு பிட்சில் நின்றுகொன்று எதிர் பேட்ஸ்மேன் உடன் "மதியம் லஞ்ச் என்னவாக இருக்கும் "என்பது போல வினவி கொண்டிருந்தார்.

அந்த தருணத்தில் யார் செய்த பாவமோ தெரியவில்லை பந்த பௌண்டரி கோட்டிற்கு முன்னாடியே நின்று விட ., அதை ஸ்டார்க் துல்லியமாக கீப்பரிடம் வீச ., பந்தை பிடித்து ஸ்டம்ப்ஸ்-ஐ தகர்த்தார் கீப்பர். உடனே மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளி குதித்தனர் ஆஸ்திரேலிய அணியினர் ...காரணம் அது "ரன் அவுட் ".

Azhar Ali bizzare runout
Azhar Ali bizzare runout

அசார் அலி "என்னடா நடக்குது இங்க..?"

எதிர் பேட்ஸ்மேன் மைண்டு வாய்ஸ் "நல்ல வேலை நான் கிராஸ் ஆகல ஆள விட்ரா சாமி "

அசார் அலி "எவ்ளோ நேக்கா என்னையே அவுட் பண்ணிடிங்கடா டேய் .,வீட்டுக்கு போன பொண்டாட்டி , பிள்ளைங்க கிண்டல் அடிப்பாங்களே ...இந்தியாகாரங்க மீம்ஸ் போடுவாங்களே...நான் என்ன செய்வேன்..? "

அதை சமாளிப்பதற்காக, என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு முடிவெடுத்தார் அசார் அலி " கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு "... பயப்படாதீங்க "அது, ஒரு நாள் போட்டியில் மட்டும் ...."

இதுவும் நம்ப பங்கு தான் - இலங்கை :

எல்லாம் ஓடுறதிலே தான் குறிக்கோளா இருக்காங்க, இவரும்அதில் தான் வல்லவர்- டி சில்வா . அசார் அலிக்கும் இவருக்கும் ஒரு வித்தியாசம் தான் . அது என்னவென்றால் இருவரும் பந்தை அடிப்பர் ., அது எல்லை கோட்டை நோக்கி ஓடும் .., ஆனால் பௌண்டரி போகாது ., இதில் அசார் அலி "ரன் ஓடவே மாட்டார் "., டி சில்வா "பாதி ரன் மட்டுமே ஓடுவார் " அவ்வளவு தான் வித்யாசம் .

ஆம் ., டி சில்வா ரன் பந்து பௌண்டரி போக வில்லை என்று பாதி பிட்ச் மட்டுமே ஓடிவிட்டு திரும்ப இரண்டாவது ரன் எடுக்க ஓடினார் . ஒத்தை உற்று நோக்கிய நடுவர் "யாரடா ஏமாத்த பாக்குற .." என்று சொல்லி மைனஸ் 5 ரன்கள் கொடுத்தார்.

deliberate short run-De Silva
deliberate short run-De Silva

இலங்கை அணியின் கேப்டன் "அட பாவி ரெண்டு ரன்-கு ஆசைப்பட்டு , 5 ரன் கொடுத்திட்டியே .., தப்பு பண்ணலாம் ., அத நாசுக்கா பண்ணனும்டா " என அறிவுரை கூறினார் .

உலக நாயகன் கேரி :

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி 20 போட்டி , ஏற்கனவே மழையை வைத்து உயிர் பிழைத்து கொண்டிருந்தது ஆஸ்திரேலிய அணி ., அதில் சாம்பா வீசிய பந்தை எதிரள்கொண்டார் ராகுல் ,அப்போது ஸ்டும்ப்ஸின் பைல்ஸ் கீலே விழுந்தது . உடனே அனைவரும் "அவுட்.,அவுட் " என கத்தினர்.

ராகுல் " பந்து ஸ்டம்ப்ஸ்ல படல .., நன் பேட்-லையும் ஸ்டம்ப அடிக்கல ., பந்து பீல்டர் கிட்ட இருக்கு எதுக்குடா அப்பீல் பண்ண" என அலக்ஸ் கேரியிடம் கேட்டார்.

அதற்க்கு கேரி "டீ.வி ரீபிலே பாரு புரியும் " என கூற ஊரே உற்று பார்த்து கொண்டிருந்தது ....அப்போது மக்கள் அனைவரும் "டிவி பார்த்துவிட்டு அப்படியே கேரியை பார்த்தனர் " அதற்க்கு காரணம் தன் கையால் ஸ்டம்ப்ஸை சாய்த்து விட்டு ஒன்னும் தெரியாத பச்சை புள்ளை போல நடித்தார் கேரி.

Alex Carey drama
Alex Carey drama

எதிர் திசையில் இருந்த கோஹ்லி "டேய் நீ யாருன்னு எனக்கு தெரியும் ..நடிப்பா நடிக்கிற "

அந்த உலக நடிப்புக்கு பரிசாக நடுவர் அதை "நோ பால் என்றும் , ஒரு பிரீ ஹிட்டும் தந்தார் "

அதற்க்கு கேப்டன் பின்ச் "சேண்ட் பேப்பர் யூஸ் பண்ணவும் தெரில்ல , ஸ்டம்ப்ஸ் சாய்க்கவும் தெரில்ல., கஷ்ட காலம்டா சாமி ., என முணுமுணுத்தார் "

இவை தான் நவம்பர் மாத காமெடிகள் ., டிசம்பர் மாசம் என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பாப்போம் .