புது உயரத்தை அடைய சர்ச்சைகள்  பாண்டியாவிற்க்கு உதவியது - விராத் கோலி

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா

சமீபத்தில் நடந்த டிவி நிகழ்ச்சியில் பெண்களை பற்றித் தவறான கருத்து கூறியதால் ஹார்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் இந்திய அணியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தடை விடுவிக்கப்பட்டு இருவரும் விளையாடி வருகின்றனர். நியூசிலாந்து தொடரில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஹார்திக் பாண்டியா. வெற்றி பெற்றதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஹார்திக் பாண்டியாவை 'சிறந்த கிரிக்கெட் வீரர்' என்று அறிவித்துள்ளார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஹார்திக் பாண்டியா பேட்டிங் செய்யவில்லை என்றாலும் பந்து வீச்சு மற்றும் பில்டிங்கில் அசத்தியுள்ளார். இரண்டு விக்கெட்கள் மற்றும் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனின் சிறப்பான கேட்ச் பிடித்துக் கலக்கியுள்ளார்.

பாண்டியா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் நிகழ்ச்சியின்போது பேசியதை கண்டறிந்த கோலி, போட்டியின்போது உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பாண்டியாவிற்கு கூறினார். வாழ்க்கையில் இது போன்ற ஒரு சூழ்நிலையைச் சமாளிக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டு முன்னேறி வர வேண்டும் அல்லது நிலைமையைக் கற்றுக் கொள்ளலாம், அது சரியானவற்றை செய்ய ஊக்கமளிக்கும் என்று கோலி கூறுகிறார். ஒரு கிரிக்கெட்டராக விளையாடுவதைவிட, விளையாட்டை மதித்து, விளையாட்டின் மேல் அன்பு வைத்து, அனைத்து ஆற்றலையும் வெளிக்கொண்டு விளையாட வேண்டும். விளையாட்டை மதித்து விளையாடினால், விளையாட்டு உங்களை மதிக்கும் என்று கோலி கூறுகிறார்.

இந்திய வீரர் பாண்டியா வரும் விளையாட்டுகளில் தேவையான ஆட்டத்தை அணிக்காக விளையாடவுள்ளார். கடந்த காலத்தில் பல கிரிக்கெட் வீரர்கள் இது போன்ற சர்ச்சைகளால் வெளியேறி மீண்டும் அணிக்கு திரும்பி புதிய உயரங்களை அடைந்துள்ளனர். பாண்டியா சரியான பாதையில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாகி வருவதாகவும் நான் அதை நம்புகிறேன் என்று கோலி கூறினார்.

வில்லியம்சன் கேட்ச் பிடித்த பாண்டியா
வில்லியம்சன் கேட்ச் பிடித்த பாண்டியா

பி.சி.சி.ஐ. பாண்டியா மற்றும் ராகுலை இடைநீக்கம் செய்து விசாரணை நடத்திய பின்னர் இந்த மாதம் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து பாண்டியா வீட்டிற்கு அனுப்பப்பட்டார். நியூசிலாந்தின் முழு சுற்றுப்பயணத்தையும் அவர் இழக்க நேரிடும் எனக் கருதுகிறேன். ஆனால், நிர்வாக குழு கடந்த வாரம் இடைக்காலத் தடையை நீக்கியது. உலகில் எந்த அணியும் பாண்டியாவை விரும்புவதாக கோலி கூறுகிறார். பாண்டியா அணியை சமநிலை படுத்தியுள்ளார். பேட்டிங், பந்துவீச்சு என அணிக்கு முக்கிய வீரராக இருந்து வருகிறார்.

நியூசிலாந்து அணியுடன் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாண்டியா பந்து வீச்சு வலைபயிற்சியில் அவர் மேற்கொண்ட கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று கோலி கூறினார். இந்த ஆட்டத்தில் இரண்டு முக்கியமான விக்கெட்கள் எடுத்தார். அவர் பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என மூன்று துறைகளிலும் அணிக்கு முக்கியமான பங்களிப்பை வழங்குவார். பண்டியாவை கொண்ட இந்திய அணி மிகவும் சீரான தெரிகிறது. அவர் ஒரு நல்ல இடத்தில் உள்ளார். மேலும் அவர் அதை தொடர முடியும் என்று நம்புகிறேன், என்றார் கோலி.

எழுத்து - பிடிஐ

மொழிபெயர்ப்பு - சுதாகரன் ஈஸ்வரன்