இந்தியன் பிரீமியர் லீக்கில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வினால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் மான்கட் முறையில் விக்கெட் வீழ்த்தப்பட்டார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்றளவும் மறக்கவில்லை . ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் பட்லரை மான்கட் முறையில் விக்கெட் வீழ்த்தியதற்காக உலகம் முழுவதும் பெரும் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இந்தியாவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களுள் ஒருவரான அஸ்வின் மான்கட் முறை விக்கெட் கிரிக்கெட் விதிப்படி சரியானதாக இருந்தாலும், கிரிக்கெட் அறத்தின் அடிப்படையில் தவறு என உலகில் அதிகம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். அஸ்வினின் இந்த செயலுக்கு ஷேன் வார்னே, இயான் மோர்கன், ஜேஸன் ராய், டேல் ஸ்டெய்ன் ஆகியோர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் அஸ்வின் மான்கட் முறைக்கு சமூக வலைத்தளங்களிலும் அதிக நகைப்பிற்கு உள்ளாக்கப்பட்டார். இதில் தற்போது புதிதாக இங்கிலாந்தின் கவுண்டி சேம்பியன் ஷீப்-பும் இனைந்துள்ளது. அஸ்வின் கவுண்டி கிரிக்கெட்டில் நாட்டிங்காம் அணிக்காக விளையாடுவதை பிசிசிஐ சமீபத்தில் உறுதி செய்தது. அதன்பின் கவுண்டி சேம்பியன் ஷீப்பின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் சிறுபிள்ளை தனமாக அஸ்வினை நகைப்பிற்கு உள்ளாக்கும் வகையில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறிப்பிட்டுள்ளதாவது, "எதிர்முனை பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை" என வெளிப்படையாக கவுண்டி சேம்பியன் ஷீப் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. இது இந்திய ரசிகர்களினால் பெரும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. மான்கட் முறை கிரிக்கெட் விதிப்படி சரியானதே ஆகும். அப்படி இருக்கும்போது கவுண்டி சேம்பியன்ஷீப் இவ்வாறு அஸ்வினை நகைப்பிற்கு உள்ளாக்கியிருப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தற்போது நடைபெற்று வரும் கவுண்டி சேம்பியன் ஷீப்பின் இரண்டாவது பாதியில் நாட்டிங்காம்ஷைர் அணியில் பங்கேற்பதற்காக அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜீன் இறுதியில் நாட்டிங்காம் அணியிலிருந்து விலக உள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் பேட்டிசனிற்கு பதிலாக சர்வதேச வீரராக அஸ்வின் அந்த இடத்திற்கு இனைகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான இவர் கவுண்டி சேம்பியன் ஷீப்பின் கடைசி 7 போட்டிகளில் 6 போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.
அஸ்வின் ஜீன் 30 அன்று தொடங்க உள்ள சூஸ்செக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளார். அதைத் தொடர்ந்து சோமர்செட் மற்றும் சர்ரே அணிக்கு எதிரான போட்டியிலும் பங்கேற்க உள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இடம்பெறுவார் என்பதால் யார்க்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் பங்கேற்க மாட்டார். அதன்பின் கென்ட், வார்செட்ஷைர், சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வின் "கிரிக்இன்போ"-விற்கு கூறியதாவது,
நான் என்னுடைய ஆட்டத்திறனை மேம்படுத்த நாட்டிங்காம்ஷைர் அணியில் விளையாட உள்ளேன். டிரென்ட் பிரிட்ஜ் ஒரு சிறப்பான மைதானமாகும். கண்டிப்பாக கவுண்டி கிரிக்கெட்டில் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக என்னுடைய முழு பங்களிப்பை அளிப்பேன்.
நான் கடந்தாண்டு வோர்ஷேட்ஷைர் அணிக்காக என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். கிரிக்கெட் போட்டிகளுக்கு கவுண்டி சேம்பியன் ஷீப் ஒரு சிறந்த அடித்தளமாக திகழ்கிறது. அதில் நான பங்கேற்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.