ஐசிசி ( சர்வதேச கிரிக்கெட் கமிட்டி ) , இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆகியோரின் அறிவுரையின் பேரில் கிரிக்கெட் போட்டியானது வரும் 2022 பிர்மிங்ஹாம் காமன் வெல்த் போட்டிகளில் இணைகிறது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது காமன் வெல்த் போட்டி நிர்வாகம். இது குறித்து முழுமையாக இந்த தொகுப்பில் காணலாம்.
கிரிக்கெட் போட்டியானது தற்போது உலகில் கால்பந்துக்கு அடுத்து அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் போட்டியாக வளர்ந்துள்ளது. ஆரம்ப காலங்களில் சில நாடுகளுடன் துவங்கிய இந்த போட்டி தற்போது 10 அணிகளுக்கும் மேலாக அணிகளை கொண்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உலககோப்பை தொடர் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இந்த போட்டிகளை ஒலிம்பிக் மற்றும் காமன் வெல்த் போட்டிகளில் இணைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பலரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதற்க்கு பச்சை கோடி காட்டும் வண்ணம் இன்று இரண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஒன்று ஒலிம்பிக் தொடரின் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் போட்டிகளில் கிரிக்கெட்டும் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு அணிகளுக்கும் தனித்தனி போட்டிகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த போட்டிகளில் வீசப்படும் வைடு பந்துகளை எதிரணிக்கு இலவச போனஸ் புள்ளிகளும் வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதில் என்ன சோகம் என்றால் தற்போது விளையாடிவரும் முக்கிய வீரர்கள் யாரும் அந்த போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என்பதே. ஏனென்றால் 2028 ஆம் ஆண்டே கிரிக்கெட்டானது ஒலிம்பிக் போட்டிகளில் இணைகிறது அதற்க்கு இன்னும் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் இடைவெளி உள்ளதால் தற்போது கிரிக்கெட் உலகை கலக்கி வரும் வீரர்கள் அனைவரும் அப்போதைய காலங்களில் ஓய்வு பெற்றுவிடுவார் என்பது நிதர்சனமான உண்மை. இருந்தாலும் கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டிகளில் இணைக்கப்பட்டதற்கு பல தரப்பிலிருந் தும் வரவேற்புகள் வந்துள்ளன.
இந்த அறிவிப்பு இன்று காலையில் வெளிவர, மதியம் மற்றொறு அறிவிப்பு வெளியானது. காமன் வெல்த் போட்டிகளில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி இணைகிறது. இந்த போட்டியானது 2022 ஆம் ஆண்டு பிர்மிங்ஹாம் நகரில் நடைபெறும் காமன் வெல்த் போட்டிகளில் இணைகிறது. இதில் தற்போதைக்கு பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே இணைக்கப்படுகிறது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அவர்கள் கூறுகையில், " மகளீர் கிரிக்கெட் போட்டியானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. எனவே மகளீர் கிரிக்கெட் போட்டியானது காமன் வெல்த் போட்டிகளில் இணைவதற்கு பலர் வாக்களித்துள்ளனர். இதில் டி20 போட்டிகளே சரியான ஒன்று. ஆட்டம் விறுவிறுப்பாகவும் விரைவாகவும் நடைபெற்று முடியும் . " என கூறினர்.
இதற்க்கு முன் கடைசியாக 1998 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியானது காமன் வெல்த் போட்டிகளில் நடத்தப்பட்டது. அப்போது அது 50 ஓவர் போட்டிகளாக நடந்தது. அதில் கடைசியாக தென்னைப்பிரிக்க அணி தங்கப்பதக்கத்தை வென்றது. அந்த தொடரில் சச்சின், காலிஸ் மற்றும் பாண்டிங் என கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
எனவே 2022-ல் நடைபெறும் காமன் வெல்த் போட்டியில் கிரிக்கெட் போட்டி இணைத்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.