கிரிக்கெட் விளையாட்டானது சில நாடுகளில் மிகமுக்கிய விளையாட்டாக விளையாடப்பட்டு வருகிறது.கிரிக்கெட் வீரர்கள் அந்நாட்டின் ரசிகர்களால் நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர்.ஒரு கிரிக்கெட் வீரர் அவர் விளையாடும் காலத்தில் நன்றாக வருமானம் ஈட்டி எதிர்காலத்தில் உதவும் வகையில் வைத்திருப்பர்.சர்வதேச போட்டிகளில் வரும் வருமானத்துடன் சில உள்ளுர் டி20 போட்டிகளில் தங்கள் கிரிக்கெட் திறமையை வெளிக்கொணர்ந்து பெரும் தொகையை ஈட்டுகின்றனர்.வீரர்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் வருமானம் ஈட்ட நிறைய வழிகள் உள்ளது.
இருப்பினும், சில சகாப்தங்களுக்கு முன்னர் கிரிக்கெட் வீரர்களின் நிலைமைகள் முற்றிலும் வேறுபட்டு இருந்தது. ஆனால் தற்சமயம் முற்றிலும் மாறுபட்டுள்ளது. கடந்த காலங்களில் கிரிக்கெட்டில் மிக உயர் மட்டத்தில் ஜொலித்த பல வீரர்கள் இருந்தனர், ஆனால் அவர்கள் ஓய்வுக்குப் பின்னர் மிகக் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகினர்
கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றபிறகு கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளப்பட்ட ஐந்து வீரர்களைப் பற்றி நாம் இங்குக் காண்போம்.
#5.தட்த்ராம் ஹிட்லேகர்
தட்த்ராம் ஹிட்லேகர் இந்தியாவின் புகழ்பெற்ற வீரரான விஜய் மன்ஜ்ரேகரின் மாமா ஆவர்.இவர் 1936-46 வரை இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக மொத்தமாக 4 போட்டிகளில் விளையாடியுள்ளார்.1936ல் லார்ட்ஸ் மைதானத்தில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார்.பின்னர் விரலில் காயத்துடன் பார்வை குறைபாடும் கூடவே வர, முடிவில் அவர் இந்திய அணிக்கு அதற்கு மேல் விளையாட முடியாமலேயே போனது.
சில மாதங்கள் மும்பை துறைமுகத்தில் மாதம் 800 சம்பளத்திற்கு வேலைசெய்து வந்தார் தட்த்ராம் ஹிட்லேகர்.முடிவில் வறுமையின் காரணமாக முறையான மருத்துவ வசதி இல்லாமையாலும் தட்த்ராம் தனது 40 வயதில் இயற்கை எய்தினார்.அவரது மறைவிற்குப் பிறகு தட்த்ராம் பணிபுரிந்த நிறுவனத்தின் வேலையாட்கள் அவரது மனைவி (மற்றும்)7 குழந்தைகளுக்கு நிதி திரட்டும் வகையில் கேபரட் நடனம் ஏற்பாடு செய்தனர்.