#4.ஹேரபர்ட் சாங்
![1982-83ல௠மà¯à®±à¯à®à®¿à®¨à¯à®¤à®¿à®¯à®¤à¯ தà¯à®µà¯à®à®³à¯ à®à®¿à®³à®°à¯à®à¯à®à®¿ à®à®¿à®°à®¿à®à¯à®à¯à®à¯ à®
ணி. ஹà¯à®°à¯à®ªà®°à¯à®à¯ à®à®¾à®à¯ வலத௠பà¯à®±à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®®à¯à®©à¯à®±à®¾à®µà®¤à®¾à® நினà¯à®±à¯à®à¯à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯.](https://statico.sportskeeda.com/editor/2018/11/ed9bb-15415929188949-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2018/11/ed9bb-15415929188949-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2018/11/ed9bb-15415929188949-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2018/11/ed9bb-15415929188949-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2018/11/ed9bb-15415929188949-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2018/11/ed9bb-15415929188949-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2018/11/ed9bb-15415929188949-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2018/11/ed9bb-15415929188949-800.jpg 1920w)
ஹேர்பர்ட் சாங் முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்ஸ்மேன்.இவர் மேற்கிந்திய கிளர்ச்சி அணியில் விளையாடுவதற்கு முன்னர் ஒரே ஒரு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்கெதிராக 1979ல் விளையாடியுள்ளார்.பின்னர் அவர் மேற்கிந்திய கிளர்ச்சி கிரிக்கெட் அணியில் விளையாடச் சென்றார்.இந்த அணி 1982-83ல் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடச் சென்றது.
சர்வதேச கிரிக்கெட் கமிட்டி தென்னாப்பிரிக்க அணியினை சில காரணங்களால் 23 வருடங்கள் சஸ்பென்ட் செய்தது. அச்சமயம் அங்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய மேற்கிந்திய கிளர்ச்சி அணியில் இருந்த அணைத்து வீரர்களையும் சேர்த்து சஸ்பென்ட் செய்தது.இதனால் மேற்கிந்திய கிளர்ச்சி அணியில் விளையாடிய எந்த வீரர்களும் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடக் கூடாது என அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் கூறியது.
சஸ்பென்ட்டிற்குப் பிறகு சாங்கால் முதல்தர கிரிக்கெட் போட்டி மட்டுமே விளையாட முடிந்தது.பின்னர் நிலக்கரி பதுக்கும் குழிகளில் சிலகாலம் பணிபுரிந்தார்.அதன்பின் ஜமைக்காவில் கிம்ஸ்டன் தெருவில் ஒரு அனாதை வாழ்க்கை வாழ்ந்தார்.
#3.ஃப்ரைன் ஸ்டதம்
![à®à®ªà¯à®°à¯à®©à¯ ஸà¯à®à®¤à®®à¯](https://statico.sportskeeda.com/editor/2018/11/002c7-15415929863424-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2018/11/002c7-15415929863424-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2018/11/002c7-15415929863424-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2018/11/002c7-15415929863424-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2018/11/002c7-15415929863424-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2018/11/002c7-15415929863424-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2018/11/002c7-15415929863424-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2018/11/002c7-15415929863424-800.jpg 1920w)
ஃப்ரைன் ஸ்டதம் 1950களில் இங்கிலாந்தின் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களுள் ஒருவராவார்.அத்துடன் ஸ்டதம் ஒரு சிறந்த தடகள வீரரும் ஆவர்.ஸ்டதம் 1951ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் நாள் நியூசிலாந்திற்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி,70 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை வழிநடத்தியுள்ளார்.இவர்தான் உலகில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் ஆவார்.பின்னர் இவருடைய கூட்டாளி ஃப்ரேட் ட்ருமேனும் இம்மைல்கல்லை அடைந்தார்.
கிரிக்கெட்டில் இவருடைய அற்புதமான பங்களிப்பின் காரணமாக 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் நாள் சர்வதேச கிரிக்கெட் அகாடமியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஆல் ஆஃப் ஃபேம் விருதினை வென்றார்.
அவரது இறுதி காலத்திற்கு தேவையான பணத்தை அவரால் ஈட்ட முடியவில்லை.அவரது நண்பர் ஃப்ரேட் ட்ருமேன் இவருக்காக நிதி திரட்ட 1980ல் சான்று விருதினை ஏற்பாடு செய்தார்.ஸ்டதம் லியுகேமியா நோயினால் தன்னுடைய 70தாவது பிறந்தநாளிற்கு ஒரு வாரமுள்ளபோது இறந்துவிட்டார்.