#2.ஜனார்தன் நாவ்லே
![1930ல௠à®à®à¯à®à®¿à®²à®¾à®¨à¯à®¤à®¿à®±à¯à®à¯ à®à¯à®±à¯à®±à¯à®ªà¯à®ªà®¯à®£à®®à¯ à®à¯à®¯à¯à®¤ à®à®¨à¯à®¤à®¿à®¯ à®à¯à®¸à¯à®à¯ à®
ணியின௠வà¯à®°à®°à¯à®à®³à¯. à®à®©à®¾à®°à¯à®¤à®©à¯ நாவà¯à®²à¯ வலதà¯-ப௠பà¯à®±à®¤à¯à®¤à®¿à®²à¯ à®®à¯à®¤à®²à®¾à®µà®¤à®¾à® நினà¯à®±à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯à®³à¯à®³à®¾à®°à¯](https://statico.sportskeeda.com/editor/2018/11/8b867-15415931390594-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2018/11/8b867-15415931390594-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2018/11/8b867-15415931390594-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2018/11/8b867-15415931390594-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2018/11/8b867-15415931390594-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2018/11/8b867-15415931390594-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2018/11/8b867-15415931390594-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2018/11/8b867-15415931390594-800.jpg 1920w)
ஜனார்தன் நாவ்லே இந்திய அணியின் முதல் விக்கெட் கீப்பர் ஆவார். அத்துடன் கிரிக்கெட்டில் தனது முதல் பந்தை இங்கிலாந்துடன் 1932ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கினார். நாவ்லே 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார். இவர் 65 முதல்தர போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் 45உடன் மொத்தம் 1976 ரன்களை குவித்துள்ளார்.
1950ல் கிரிக்கெட்டில் தனது ஓய்விற்குப் பிறகு சர்க்கரை ஆலையில் பாதுகாவலராகப் பணிபுரிந்தார். அவர் ஒரு சிறிய வீட்டில் பூனாவில் வசித்து வந்தார். சில ஆதாரங்களில் அவர் தீவிர வறுமையில் இறந்துவிட்டதாகவும், அவரது கடைசி நாட்களில் பம்பாய்-பூனா நெடுஞ்சாலையில் பிச்சை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
#1.வாலி ஹேமண்ட்
![வாலி ஹà¯à®®à®£à¯à®à¯](https://statico.sportskeeda.com/editor/2018/11/8316a-15415932413649-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2018/11/8316a-15415932413649-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2018/11/8316a-15415932413649-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2018/11/8316a-15415932413649-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2018/11/8316a-15415932413649-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2018/11/8316a-15415932413649-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2018/11/8316a-15415932413649-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2018/11/8316a-15415932413649-800.jpg 1920w)
வாலி ஹேமண்ட் 1927 முதல் 1947வரை இங்கிலாந்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக 85 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்தினார்.1930களில் சிறந்த இங்கிலாந்து பேட்ஸ்மேனாகவும், சிறந்த ஸ்லிப் ஃபில்டராவும் இருந்தார். இவர் 7249 ரன்களை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளாசித் தள்ளியதுடன் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். பின்னர் 1970ல் காலின் சௌத்ரி என்பவரால் இச்சாதனை முறியடிக்கப்பட்டது. இவருடைய 22டெஸ்ட் சதங்கள் 73 வருடங்களாக இங்கிலாந்து கிரிக்கெட்டில் அதிக சதங்களாகக் கருதப்பட்டது. பின்னர் 2012ல் ஆலஸ்டர் குக் டிசம்பர் 2012ல் இச்சாதனையை முறியடித்தார். அத்துடன் 1933ல் இங்கிலாந்து கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் இவருடைய அதிகபட்ச ரன்கள் 336(ஆட்டமிழக்காமல்) ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். பின்னர் இச்சாதனை லென் ஹட்டோன் என்பவரால் ஐந்து ஆண்டுகள் கழித்து முறியடிக்கப்பட்டது.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் தென்னாப்பிரிக்கா சென்று ஒரு ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் திவாலானது. பின்னர் நடால் பல்கலைக்கழகத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றினார். ஆனால் அந்த வருமானம் அவருக்குப் போதுமானதாக இல்லை.1965ல் அவர் மாரடைப்பால் இறந்த பின் கிரிக்கெட் ஃபோர்டிலிருந்து அவருக்கு நினைவு நிதி திரட்டப்பட்டு அவருடைய மனைவி மற்றும் 3குழந்தைகளுக்கு தரப்பட்டது.