கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மோதும் போட்டி எப்பொழுதுமே ஒரு பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தும். 2019 உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளுக்கு இடையிலான யுத்தம் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று(ஜீன் 25) நடைபெறவுள்ளது. இரு அணிகளுமே உலகக்கோப்பை தொடரின் முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை வகிக்கின்றன.
1992 உலகக்கோப்பை தொடர் முதல் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது இல்லை. ஆனால் இன்றைய போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டும் சூழ்நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெல்வதன் மூலமே எவ்வித இடர்பாடின்றி அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பிருக்கும். ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மிக்க வலிமையுடன் திகழ்ந்து தனது பரம எதிரியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் உள்ளது.
உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் மோதிய போட்டிகளில் இங்கிலாந்து 2 முறையும், ஆஸ்திரேலியா 5 முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாம் இங்கு இரு அணிகளுக்கும் இடையிலான டாப் 3 உலகக்கோப்பை போட்டிகளை பற்றி காண்போம்.
#3 ஆட்டம் 2, 2015 உலகக்கோப்பை
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 2015 உலகக்கோப்பை தொடரில் மெல்போர்ன் நகர மக்கள் முன்னிலையில் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பௌலிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்கள் பார்டனர்ஷீப் செய்து வலிமையான தொடக்கத்தை அளித்தனர். ஆனால் ஸ்டுவர்ட் பிராட் இரு விக்கெட்களையும் வீழ்த்தி இங்கிலாந்து வசம் ஆட்டத்தை திருப்பினார்.
சில நிமிடங்களிலே ஸ்டிவன் ஸ்மித்தும் தனது விக்கெட்டை இழக்க ஆஸ்திரேலியா 10.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்களில் தடுமாறியது. கேப்டன் ஜார்ஜ் பெய்லி, ஆரோன் ஃபின்சுடன் இனைந்து 4வது விக்கெட்டிற்கு வலிமையான பார்டனர் ஷீப் அமைத்து 146 ரன்களை குவித்தனர்.
இந்த இன்னிங்ஸில் ஆரோன் ஃபின்ச் மூன்றிலக்க ரன்களை கடந்தார். தற்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் 128 பந்துகளில் 135 ரன்களை குவித்தார்.
மேக்ஸ்வெல், பிராட் ஹாடின், மிட்செல் மார்ஷ் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தி முடித்து வைத்தனர். ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 342 ரன்களை குவித்தது. ஸ்டிவன் ஃபின் கடைசி 3 பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் இவரது ஆட்டத்திறன் ஆஸ்திரேலியாவிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தவில்லை.
343 ரன்களை சேஸ் செய்த இங்கிலாந்தை, மிட்செல் மார்ஷ் தனது வேகத்தில் வீழ்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் அந்த அணி 92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜேம்ஸ் டெய்லர் தனி போர்வீரர் போல் விளையாடிக் கொண்டிருக்க, யாரும் அவருக்கு ஆதரவளித்து விளையாட தவறினர். இங்கிலாந்து இப்போட்டியில் 111 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
#2 ஆட்டம் 37, 2003 உலகக்கோப்பை
பரம எதிரிகளின் அடையாளமாக திகழும் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் 2003 உலகக்கோப்பை தொடரில் ஸ்டே. ஜார்ஜ் பார்க் எலிசபெத் மைதானத்தில் மோதின. இப்போட்டியில் ரசிகர்கள் கவனம் மைக்கல் வாகன், ஆன்ரிவ் ஃபிளிட் ஆஃப், க்ளின் மெக்ராத், மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோரின் மீது இருந்தது. ஆனால் ஆன்டி பீசேல் தனி ஒருவராக இப்போட்டியை ஆஸ்திரேலியாவிற்கு வென்று கொடுத்தார்.
இங்கிலாந்து கேப்டன் நஸீர் ஹோசைன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். நிக் நைட் மற்றும் மார்கஸ் டிரிஸ்கோதிக் இருவரும் 66 ரன்கள் குவித்து சிறப்பான பார்டனர் ஷீப் அமைத்து விளையாடி வந்தனர். மெக்ராத் களம் கண்டு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின் ஆன்டி பிசேல் தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் இங்கிலாந்து பேட்டிங்கை சிதறடித்து தான் வீசிய 10 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆன்டி பிசேலின் 10-0-27-7 என்ற பௌலிங் மூலம் இங்கிலாந்து8 விக்கெட்டுகளை வீழ்த்தி 204 ரன்களுக்கு ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
ஆன்டி பிசேலின் பங்களிப்பு பௌலிங் மூலம் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் வெளிபடுத்தி கடைசி ஓவர் வரை எடுத்து சென்று 34 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற செய்தார். மைக்கல் பெவனும் 77 ரன்கள் அளித்து பெரும் பங்களிப்பை ஆஸ்திரேலிய அணிக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
#1 இறுதிப்போட்டி, ரிலையன்ஸ் உலகக்கோப்பை 1987
பரம எதிரிகளான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அந்நிய மண்ணில் முதல் முறையாக உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் மோதின. தங்களின் பெரும்பான்மையை நிருபிக்கும் இந்த கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.
மிகப்பெரிய போட்டியில் ஆலன் பார்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் பூன் மற்றும் ஜெஃப் மார்ஷ் ஒரு சிறப்பான அடித்தளத்தை ஆரம்பத்தில் வெளிபடுத்த, டின் ஜோன்ஸ், ஆலன் பார்டர், மைக் வெலிட்டா ஆகியோரின் பங்களிப்பு மூலம் ஆஸ்திரேலியா 253 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து தனது தொடக்க ஆட்டக்காரர் டிம் ராபின்சனை ஆரம்பத்திலே இழந்தது. இருப்பினும் நம்பர் 3 பேட்ஸ்மேன் பில் ஆதே அரை சதம் விளாசி இங்கிலாந்தை வலுபடுத்தினார். இப்போட்டி சற்று தளர்ந்து கடைசி 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கிராய்க் மெக்டெர்மோட் சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்தி 9 ரன்களை மட்டுமே அளித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் ஆஸ்திரேலியா தனது முதல் உலகக்கோப்பையை கைப்பற்றியது. இவ்வுலகக் கோப்பை தொடரிலிருந்துதான் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடரில் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தது.
ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து சவாலை ஏற்று விளையாடி கோப்பை வென்றதை ஈடன் கார்டன் மக்கள் அதிக மகிழ்ச்சியை வெளிபடுத்தி கொண்டாடினர்.