#1 இறுதிப்போட்டி, ரிலையன்ஸ் உலகக்கோப்பை 1987
பரம எதிரிகளான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அந்நிய மண்ணில் முதல் முறையாக உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் மோதின. தங்களின் பெரும்பான்மையை நிருபிக்கும் இந்த கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.
மிகப்பெரிய போட்டியில் ஆலன் பார்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் பூன் மற்றும் ஜெஃப் மார்ஷ் ஒரு சிறப்பான அடித்தளத்தை ஆரம்பத்தில் வெளிபடுத்த, டின் ஜோன்ஸ், ஆலன் பார்டர், மைக் வெலிட்டா ஆகியோரின் பங்களிப்பு மூலம் ஆஸ்திரேலியா 253 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து தனது தொடக்க ஆட்டக்காரர் டிம் ராபின்சனை ஆரம்பத்திலே இழந்தது. இருப்பினும் நம்பர் 3 பேட்ஸ்மேன் பில் ஆதே அரை சதம் விளாசி இங்கிலாந்தை வலுபடுத்தினார். இப்போட்டி சற்று தளர்ந்து கடைசி 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கிராய்க் மெக்டெர்மோட் சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்தி 9 ரன்களை மட்டுமே அளித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் ஆஸ்திரேலியா தனது முதல் உலகக்கோப்பையை கைப்பற்றியது. இவ்வுலகக் கோப்பை தொடரிலிருந்துதான் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடரில் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தது.
ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து சவாலை ஏற்று விளையாடி கோப்பை வென்றதை ஈடன் கார்டன் மக்கள் அதிக மகிழ்ச்சியை வெளிபடுத்தி கொண்டாடினர்.