உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான உலகக் கோப்பை தொடரில் தன்னுடைய நாட்டின் சார்பாக இடம்பெற வேண்டும் என்பது அனைத்து கிரிக்கெட் வீரர்களின் வாழ்நாள் கனவாக இருக்கும். 1975ற்கு பிறகு உலகக் கோப்பை தொடர் பெரிதும் மேம்பட்டுவிட்டது. முதல் இரு உலகக் கோப்பை தொடர்களிலிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆதிக்கத்தை செலுத்தியது. அதன் பின்னர் மற்ற அணிகள் தங்களது முதல் உலகக்கோப்பையை வென்றன. இந்த உலகக் கோப்பை தொடர் உலகில் உள்ள கிரிக்கெட் வீரர்களின் பௌலிங் மற்றும் பேட்டிங் திறனை அனைவருக்கும் நிரூபிக்கும் ஒரு இடமாக அமைகிறது.
12வது உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் மே 30 அன்று தொடங்கி ஏற்கனவே கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இன்னும் 35 போட்டிகள் 2019 உலகக் கோப்பை தொடரில் மீதமுள்ளது. இனிவரும் போட்டிகளில் எந்த அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதை காண அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். உலகக் கோப்பை தொடரில் அணிகளுக்கு இடையே கடும் நெருக்கடியுடன் போட்டிகள் நிலவும். அத்துடன் ஒரு அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் அணியில் இடம் பிடிக்கவும் அதிக போட்டிகள் நிலவும். கடந்த காலங்களில் சில பிரபலமான வீரர்கள் ஒரெயொரு உலகக் கோப்பை போட்டியில் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
அவ்வாறு உலகக் கோப்பை தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் இடம்பெற்றுள்ள 3 வீரர்களை பற்றி காண்போம்.
#3 காலின் இன்கிராம்
2019 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற காரணமாக இருந்த வீரர்களுள் இவரும் ஒருவர். இவர் அளித்த சிறு சிறு பங்களிப்பு அந்த அணிக்கு பெரிதும் உதவியுள்ளது. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான காலின் இன்கிராம் 2010ல் ஜீம்பாப்வேவிற்கு எதிரான தொடரில் அறிமுகமானர். அவரது வருங்கால ஆட்டத்திறனை கருத்தில் கொண்டு ஒருநாள் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்க தேர்வுக்குழுவின் எதிர்பார்ப்பை நிராகரிக்காமல் சரியான ஆட்டத்திறனை வெளிபடுத்தி தனது அறிமுக போட்டியிலேயே சதம் விளாசினார். ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் அதனை தொடர இன்கிராம் மறந்துவிட்டார். 33 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 843 ரன்களை குவித்துள்ளார். இதில் 3 அரைசதங்கள் மற்றும் 3 சதங்கள் அடங்கும்.
காலின் இன்கிராம் 2011 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்று தனது துணைக் கண்டத்திற்கு விளையாட சென்றார். எதிர்பாரத விதமாக காலின் இன்கிராம் அயர்லாந்திற்கு எதிரான போட்டியில் மட்டுமே ஆடும் XI-ல் இடம்பெற்றார். மற்ற எந்த போட்டியிலும் களமிறக்கப்படவில்லை. கடைநிலையில் களமிறங்கிய இவர் அந்த போட்டியில் 46 ரன்களை குவித்தார். அயர்லாந்திற்கு எதிரான அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா 131 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் அதன் பின் நடந்த எந்த போட்டியிலும் இவர் களமிறக்கப்படவில்லை. 2013ல் கோல்பாக் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட காலின் இன்கிராம் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.