#2 மெர்வ் ஹியூக்ஸ்
மெர்வ் ஹியூக்ஸ் 1980 மற்றும் 1990ல் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்தார். அத்துடன் கடைநிலையில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 1000 ரன்களை குவித்துள்ளார். 1985ல் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் அதிக ரன்களை தனது பௌலிங்கில் அளித்துள்ளார். போக போக இவரது பந்துவீச்சு மேம்பட்ட காரணத்தால் ஆஸஸ் தொடரில் விளையாடும் வாய்ப்பு பெற்றார்.இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் ஆஸ்திரேலிய அணி இவரை டெஸ்ட் போட்டிகளிலே அதிகம் களமிறக்கியது. ஒருநாள் கிரிக்கெட்டில் 33 போட்டிகளில் பங்கேற்று 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
1991-92ல் நடந்த உலகக் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் நடத்தின. ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இவரை காத்திருப்பு பந்துவீச்சாளராக தேர்வு செய்திருந்தது. அந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் களமிறங்கி 49 ரன்களை தனது பந்துவீச்சில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். ஓடிஐ கிரிக்கெட்டில் இவரது பந்துவீச்சு அவ்வளவு சிறப்பானதாக இல்லாத காரணத்தால் இவரை ஆஸ்திரேலிய அணி ஓடிஐ போட்டிகளில் அதிகமாக களமிறக்கவில்லை. 1994ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
#1 ஜார்ஜ் பெய்லி
இந்திய ரசிகர்கள் ஜார்ஜ் பெய்லியை அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். 2013-14ல் நடந்த ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஜார்ஜ் பெய்லியின் அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணி வென்றது. இந்த தொடரில் 6 போட்டிகளில் பங்கேற்று 95.60 சராசரியுடன் 478 ரன்களை குவித்தார். இந்த தொடருக்கு பிறகு எதிர்பாரத விதமாக அவரது சிரான ஆட்டத்திறன் படிப்படியாக குறைய தொடங்கியது. சிறந்த தாஸ்மானிய நகரைச் சேர்ந்த பெய்லி இந்தியாவிற்கு எதிராக டி20 போட்டியில் கேப்டனாக அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே கேப்டனாக அறிமுகமான இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லி.
இவர் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸஸ் தொடரில் இவருக்கு இடம் கிடைத்தது. ஆனால் இந்த வாய்ப்பை இவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளதாக காரணத்தால் இத்தொடருக்குப் பிறகு எந்த டெஸ்ட் போட்டிகளிலும் இடம்பெறவில்லை. 2015 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த இவர் இங்கிலாந்திற்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் மட்டுமே களமிறங்கினார். இவர் இந்த போட்டியில் 55 ரன்களை விளாசி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த போட்டிக்குப் பிறகு இவரை ஆஸ்திரேலிய அணி கண்டுகொள்ளவில்லை. ஆஸ்திரேலியா 2015 உலகக் கோப்பை தொடரை வென்றது. ஆனால் ஜார்ஜ் பெய்லியை இந்த தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே காண முடிந்தது.