2019 உலகக் கோப்பை தொடரானது மே 30 அன்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 13 போட்டிகள் இதுவரை முடிந்துள்ளது. இதில் கடந்த வெள்ளியன்று நடந்த ஒரு போட்டி மட்டும் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. 1975ல் தொடங்கிய முதல் உலகக்கோப்பை தொடர் முதல் தற்போது வரை ஒரு சில அணிகள் தங்களது ஆதிக்கத்தை ஒரு குறிப்பிட்ட எதிரணிக்கு எதிராக அளித்து வருகிறது. ஜீம்பாப்வே அணி மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக ஒருமுறை கூட உலகக் தொடரில் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான்-இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள்- வங்கதேசம், இந்தியா -பாகிஸ்தான் ஆகிய போட்டிகள் உலகக் கோப்பையில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளாகும்.
இதுவரை உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகள் குறைந்தபட்சம் 6 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியிருக்கும். உலகக் கோப்பையில் மூன்று அணிகள் மட்டும் தங்களது ஒரு எதிரணிக்கு எதிராக தற்போது வரை தனது ஆதிக்கத்தை சிறப்பாக நிலைநாட்டி வருகிறது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இதுவரை பாகிஸ்தான் ஒரு முறை கூட வென்றதில்லை. அதேபோல் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகளில் இலங்கை ஒரு முறை கூட வென்றதில்லை.
#3 பாகிஸ்தான் vs இலங்கை (7-0)

இலங்கை அணி உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானிற்கு எதிராக ஒருமுறை கூட வென்றதில்லை. உலகக் கோப்பை தொடர் தொடங்கியதிலிருந்து பாகிஸ்தான், இலங்கையை 8 முறை எதிர்கொண்டு உள்ளது. 1975, 1983 உலகக் கோப்பை தொடரில் 2 முறையும், 1987 உலகக் கோப்பையில் 2முறை, 1992 மற்றும் 2011ல் தலா ஒரு முறையும் மோதி உள்ளன. ஓவ்வொரு முறையும் பாகிஸ்தான் அணி தனது ஆதிக்கத்தை செலுத்தி இலங்கை அணியை வீழ்த்தியுள்ளது. 2019 உலக கோப்பை தொடரில் இரு அணிகளும் ஜீன் 7 அன்று பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி ஆடுகளத்தில் மோத இருந்தன. ஆனால் மழையின் காரணமாக இந்த போட்டி டாஸ் கூட போடாமல் நிறுத்தப்பட்டது.
ஆசிய கண்டத்தை சேர்ந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் 1975ல் நடந்த முதல் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் 192 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் அனுரா தின்கோன் பாகிஸ்தான் அணியை பேட் செய்ய அழைத்தார். பாகிஸ்தான் அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களின் பங்களிப்பால் அந்த அணி 330 ரன்களை இலங்கைக்கு இலக்காக நிர்ணயித்தது. 331 என்ற அதிகப்படியான இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய இலங்கை அணி 192 ரன்களில் சுருண்டது.
உலகக் கோப்பை தொடரில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான மற்றொரு ஆச்சரியமூட்டும் செய்தி என்னவென்றால், இரு அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் முதலில் பேட் செய்துள்ளது. 1992 உலகக் கோப்பையில் இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் முதல் உலகக்கோப்பை தொடரை வென்றது. இந்த தொடரில் மட்டும் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் முதலில் பேட் செய்யவில்லை.
சமீபத்திய இரு அணிகளுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி மழையினால் கைவிடப்பட்டது.
#2 மேற்கிந்தியத் தீவுகள் vs ஜீம்பாப்வே (6-0)

ஜீம்பாப்வே அணி தனது முதல் உலகக்கோப்பை தொடரை 1983ல் விளையாடியது. அந்த தொடரில் மிகவும் வலிமை குன்றிய அணியாக ஜீம்பாப்வே மட்டுமே திகழ்ந்தது. இந்த அணி ஒரு முறை கூட அரையிறுதிக்கு தகுதி பெற்றதில்லை. அத்துடன் உலகக் கோப்பை தொடர்களில் 58 போட்டிகளில் பங்கேற்று 12ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் ஜீம்பாப்வே 2019 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற தவறியது. முதல் இரு உலகக் கோப்பை தொடரின் சேம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் (1975 & 1979) உலகக் கோப்பையில் ஜீம்பாப்வேவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் ஜீம்பாப்வே அணியை உலகக் கோப்பையில் 6 முறை எதிர்கொண்டுள்ளன. இதில் மேற்கிந்தியத் தீவுகள் அனைத்து முறையும் வெற்றி பெற்றுள்ளது. 1983(2 முறை), 1992, 1996, 2007 மற்றும் 2015 ஆகிய வருடங்களில் நடந்த உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் ஜீம்பாப்வேவிற்கு எதிராக சிறப்பான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி உள்ளது.
இரு அணிகளும் மோதிய போட்டிகளில் என்றும் மறக்க முடியாத போட்டியானது ஆஸ்திரேலியாவில் நடந்த 2015 உலகக் கோப்பை தொடரில் வந்தது. யுனிவர்சல் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் உலகக் கோப்பையில் முதல் முறையாக இரட்டை சதத்தினை விளாசினார். இதன் மூலம் ஜீம்பாப்வேவின் சுமாரான பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் 372 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 373 என்ற அதிகப்படியான இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய ஜீம்பாப்வே 289 ரன்களில் சுருண்டது. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் 73 ரன்கள் வித்தியாசத்தில் டாக் வொர்த் லீவிஸ் முறைப்படி வென்றது.
#3 இந்தியா vs பாகிஸ்தான் (6-0)

உலகக் கோப்பை தொடரில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டி என்றால் அது இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளாகத்தான் இருக்கும். இதற்கு அறிமுகம் என ஏதும் தேவையில்லை. இரு முறை உலக கோப்பை தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானிற்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி தனது அண்டை நாடான பாகிஸ்தானை 1992 உலகக் கோப்பை தொடரில் முதன் முதலாக எதிர்கொண்டது. இந்த போட்டியில் பாகிஸ்தானால் இந்தியாவை வீழத்த முடியவில்லை, இருப்பினும் இறுதிப் போட்டியில் கோப்பையை வென்றது. இரு அணிகளும் உலகக் கோப்பையில் 6முறை (1992,1996, 1999, 2003, 2011, 2015) மோதியுள்ளன. இதில் இந்தியா 6 முறையும் வென்று சாதனை படைத்துள்ளது. அத்துடன் இரு அணிகளும் நாக் அவுட் சுற்றில் இரு முறை மோதியுள்ளன. 2011 உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 1996ல் நடந்த உலகக் கோப்பை தொடரின் காலிறுதியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வென்றது.
2003 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிற்கு எதிராக "மாஸ்டர் பிளாஸ்டர்" சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானிற்கு எதிராக சிறப்பான சாதனை ஒன்றை படைத்தார். சோயிப் அக்தர், வஹார் யோனிஸ், வாஸிம் அக்ரம் போன்ற மின்னல் வேக பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 75 பந்துகளில் 98 ரன்களை விளாசினார் சச்சின் டெண்டுல்கர். அத்துடன் 274 இலக்கையும் இந்தியா சேஸ் செய்தது. 2019 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி ஜீன் 16 அன்று மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. உலகக் கோப்பையில் பாகிஸ்தானை விட இந்தியா வலிமை வாய்ந்த அணியாக திகழ்கிறது. எனவே உலகக் கோப்பையில் இந்தியாவின் இந்த சாதனை தொடரும்.