உலகக் கோப்பை வரலாற்றில் தனது எதிரணியுடன் 100% வெற்றியுடன் திகழும் 3 அணிகள்

India vs Pakistan 2003 World Cup
India vs Pakistan 2003 World Cup

#3 இந்தியா vs பாகிஸ்தான் (6-0)

India vs Pakistan
India vs Pakistan

உலகக் கோப்பை தொடரில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டி என்றால் அது இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளாகத்தான் இருக்கும். இதற்கு அறிமுகம் என ஏதும் தேவையில்லை. இரு முறை உலக கோப்பை தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானிற்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி தனது அண்டை நாடான பாகிஸ்தானை 1992 உலகக் கோப்பை தொடரில் முதன் முதலாக எதிர்கொண்டது. இந்த போட்டியில் பாகிஸ்தானால் இந்தியாவை வீழத்த முடியவில்லை, இருப்பினும் இறுதிப் போட்டியில் கோப்பையை வென்றது. இரு அணிகளும் உலகக் கோப்பையில் 6முறை (1992,1996, 1999, 2003, 2011, 2015) மோதியுள்ளன. இதில் இந்தியா 6 முறையும் வென்று சாதனை படைத்துள்ளது. அத்துடன் இரு அணிகளும் நாக் அவுட் சுற்றில் இரு முறை மோதியுள்ளன. 2011 உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 1996ல் நடந்த உலகக் கோப்பை தொடரின் காலிறுதியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வென்றது.

2003 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிற்கு எதிராக "மாஸ்டர் பிளாஸ்டர்" சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானிற்கு எதிராக சிறப்பான சாதனை ஒன்றை படைத்தார். சோயிப் அக்தர், வஹார் யோனிஸ், வாஸிம் அக்ரம் போன்ற மின்னல் வேக பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 75 பந்துகளில் 98 ரன்களை விளாசினார் சச்சின் டெண்டுல்கர். அத்துடன் 274 இலக்கையும் இந்தியா சேஸ் செய்தது. 2019 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி ஜீன் 16 அன்று மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. உலகக் கோப்பையில் பாகிஸ்தானை விட இந்தியா வலிமை வாய்ந்த அணியாக திகழ்கிறது. எனவே உலகக் கோப்பையில் இந்தியாவின் இந்த சாதனை தொடரும்.

Quick Links