2019 உலகக் கோப்பை தொடரானது மே 30 அன்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 13 போட்டிகள் இதுவரை முடிந்துள்ளது. இதில் கடந்த வெள்ளியன்று நடந்த ஒரு போட்டி மட்டும் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. 1975ல் தொடங்கிய முதல் உலகக்கோப்பை தொடர் முதல் தற்போது வரை ஒரு சில அணிகள் தங்களது ஆதிக்கத்தை ஒரு குறிப்பிட்ட எதிரணிக்கு எதிராக அளித்து வருகிறது. ஜீம்பாப்வே அணி மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக ஒருமுறை கூட உலகக் தொடரில் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான்-இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள்- வங்கதேசம், இந்தியா -பாகிஸ்தான் ஆகிய போட்டிகள் உலகக் கோப்பையில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளாகும். இதுவரை உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகள் குறைந்தபட்சம் 6 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியிருக்கும். உலகக் கோப்பையில் மூன்று அணிகள் மட்டும் தங்களது ஒரு எதிரணிக்கு எதிராக தற்போது வரை தனது ஆதிக்கத்தை சிறப்பாக நிலைநாட்டி வருகிறது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இதுவரை பாகிஸ்தான் ஒரு முறை கூட வென்றதில்லை. அதேபோல் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகளில் இலங்கை ஒரு முறை கூட வென்றதில்லை.#3 பாகிஸ்தான் vs இலங்கை (7-0)Srilanka vs Pakistanஇலங்கை அணி உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானிற்கு எதிராக ஒருமுறை கூட வென்றதில்லை. உலகக் கோப்பை தொடர் தொடங்கியதிலிருந்து பாகிஸ்தான், இலங்கையை 8 முறை எதிர்கொண்டு உள்ளது. 1975, 1983 உலகக் கோப்பை தொடரில் 2 முறையும், 1987 உலகக் கோப்பையில் 2முறை, 1992 மற்றும் 2011ல் தலா ஒரு முறையும் மோதி உள்ளன. ஓவ்வொரு முறையும் பாகிஸ்தான் அணி தனது ஆதிக்கத்தை செலுத்தி இலங்கை அணியை வீழ்த்தியுள்ளது. 2019 உலக கோப்பை தொடரில் இரு அணிகளும் ஜீன் 7 அன்று பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி ஆடுகளத்தில் மோத இருந்தன. ஆனால் மழையின் காரணமாக இந்த போட்டி டாஸ் கூட போடாமல் நிறுத்தப்பட்டது.ஆசிய கண்டத்தை சேர்ந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் 1975ல் நடந்த முதல் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் 192 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் அனுரா தின்கோன் பாகிஸ்தான் அணியை பேட் செய்ய அழைத்தார். பாகிஸ்தான் அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களின் பங்களிப்பால் அந்த அணி 330 ரன்களை இலங்கைக்கு இலக்காக நிர்ணயித்தது. 331 என்ற அதிகப்படியான இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய இலங்கை அணி 192 ரன்களில் சுருண்டது. உலகக் கோப்பை தொடரில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான மற்றொரு ஆச்சரியமூட்டும் செய்தி என்னவென்றால், இரு அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் முதலில் பேட் செய்துள்ளது. 1992 உலகக் கோப்பையில் இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் முதல் உலகக்கோப்பை தொடரை வென்றது. இந்த தொடரில் மட்டும் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் முதலில் பேட் செய்யவில்லை.சமீபத்திய இரு அணிகளுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி மழையினால் கைவிடப்பட்டது.